டூலிப் லீஃவ்ஸ்

தேதி: July 4, 2012

5
Average: 5 (4 votes)

 

பச்சை கலர் காகிதங்கள்

 

சதுர வடிவ காகிதத்தை முக்கோணமாக மடிக்கவும்.
விரித்தால் இப்படி நடுவே கோடு இருப்பது போல் வரும்.
அந்த கோட்டை மையமாக கொண்டு ஒரு பக்க முக்கோணத்தை படத்தில் உள்ளது போல் மடிக்கவும்.
அதே போல் எதிர் பக்கம் உள்ளதையும் மடிக்கவும்.
இனி அதன் கீழே உள்ள பகுதியை மேல் பக்கம் நோக்கி படத்தில் உள்ளது போல் கோட்டை மையமாக கொண்டே மடிக்கவும்.
4 முனைகளையும் மடித்த பின் இப்படி இருக்கும்.
இனி கீழ் பக்கம் மடித்த பகுதியை பாதியாக மீண்டும் நடு கோட்டை மையமாக கொண்டு மடிக்கவும்.
இரண்டு பக்கம் மடித்ததும் இப்படி ஒரு வடிவம் கிடைக்கும்.
இதை பின் பக்கமாக அப்படியே இரண்டாக சமமாக மடிக்கவும். இரண்டு பக்க முனையும் நேராக இருக்கும்.
இப்போது இப்படி இருக்கும்.
சின்ன பக்கம் உள்ளே வருவது போல் வைத்து சரியாக நடுவில் மடிக்கவும்.
இனி அந்த சிறு பக்கத்தை பூவின் அடிபகுதியில் உள்ள சிறு ஓட்டைக்குள் நுழைத்து தயார் செய்யவும்.
இலைகளை லேசாக வெளிபக்கம் மடித்து விட்டால் வடிவம் கிடைத்து விடும். மெல்லியதாக இருந்த பகுதி தண்டாகவும், பெரிதாக இருந்த பகுதி இலையாகவும் இருக்கும்.
இனி விருப்பம் போல் சின்ன கப்களில் அடுக்கி பூ தொட்டியாக அலங்கரிக்கலாம். இவற்றுக்கு காகிதத்திலேயே கூடை செய்தால் இன்னும் அழகாக இருக்கும். அதன் செய்முறையும் விரைவில் வரும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

மிக்க நன்றி வனிதா... மிகவும் எளிதாக இருந்தது... நான் இரண்டு பூக்கள் தான் செய்தேன்... என் மகளுக்கு பரிசாக கொடுத்தேன்.. அவளுக்கு மிக்க மகிழ்ச்சி..
மிகவும் நன்றி வனிதா மேடம்...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வனிதா அக்கா அவர்களுக்கு,
அழகா இருக்கும்........என்னக்கு பொறுமை கிடையாது என்னக்கு தாங்க........

by,
AnuGopi,
Be happy and Make others happy........

செய்முறை விளக்கம் நன்றாக இருக்கிறது வனி. கூடையையும் விரைவில் அனுப்புங்க.

‍- இமா க்றிஸ்

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

பிந்து... சூப்பரா செய்திருக்கீங்க!!! பார்த்துட்டேன் உங்க ஃபேஸ்புக்ல ;) சாரி எனக்கு நேற்று பார்க்க முடியல. காலையிலயே லேப்டாப்பை எங்க சித்ரா உடைச்சுட்டாங்க ;(

ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா செய்திருக்கீங்க... எப்பவுமே நம்ம குறிப்பாகட்டும், கைவினையாகட்டும்... யாராவது செய்திருக்குறத பார்த்தா அது ஒரு தனி மகிழ்ச்சி தான். அதுக்காக உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேன்க்ஸ்.

அனு... உங்களுக்கு தானே... தந்துட்டா போகுது :) எடுத்துக்கங்க... மிக்க நன்றி.

இமா... மிக்க நன்றி. கூடையை துவங்கினேன், முடிக்காம இலங்கை போயிட்டேன், இப்போ அது லூசாயிடுச்சு.... மீண்டும் துவங்கணும். :) விரைவில் வரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அழகா செய்திருக்கிறீா்கள் அக்கா

Give respect and take respect

ரொம்ப நன்றி மேடம் :)

சீக்கிரம் கூடை செய்முறை அனுப்பி வையுங்கள்... அவங்களுடைய மூன்று டீச்சர்ஸ்க்கும் செய்து தரனும்னு எங்க சின்ன மேடம் ஆர்டர் போட்டிருக்காங்க... :)

ஆனால் அது யார் சித்ரா? ஹி ஹி... சாரி வழக்கம் போல் ஒரு curiosity தான் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மெரினா... மிக்க நன்றி :)

பிந்து... கூடை வந்துடும் இந்த வீக் எண்டுகுள்ள :) சித்ரா... அறுசுவையில் மாலத்தீவு உணவுக்கு பிரபலம்... என் வீட்டில் வேலை பார்க்கும் தமிழர். என்னோட மாலத்தீவு குறிப்புகளில் அவங்க போட்டோ கூட இருக்கும் பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks ma'am will check it out :) ungalai maathiri then sotta thank u solla romba naalaa aasai...... aanaal Maranthu poguthu... :)

I'm in a class now, so please pardon my thamingalam:(

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மெடிடேஷன் போனா மெடிடேஷன் பண்ணனும்... இதென்ன விளையாட்டு ;) நாங்களாம் தேன் சொட்ட எங்க சொல்றோம்??? ஒவ்வொருத்தர் தேன் தடவின வார்த்தையாவே பேசுறாங்க ;) நான் சும்மா சாதாரணமா நன்றி தான் சொல்லிட்டு போறேன், அதுக்கு மேல என்ன எழுதன்னு எப்படி யோசிச்சாலும் தெரிய மாட்டங்குது :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிக்கா.... டூலிப் பூக்கள் மிகவும் அழகு..... நிச்சயம் பன்னுவேன்... உங்க அன்னப்பறவை இப்பதான் உருவாகிட்டே இருக்கார்... நீங்க போட்ட மெகந்தி டிசைனும் போட்டேன்.... எப்படி உங்களுக்கு போட்டோ அனுப்புவது? 500 குறிப்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.... சில பல நாட்களுக்கு பிறகு அருசுவையில் நீங்கள் வழக்கம் போல ஆக்டிவாக இருப்பதை கண்டு மிகவும்மகிழ்ந்தேன்

மிக்க நன்றி. அன்னப்பறவை எந்த ஸ்டேஜில் இருக்கு? போட்டோ... உங்களுக்கும் ஃபேஸ்புக் இருக்கா? இருந்தா பப்லிக் வியூவில் போடுங்க, நான் பார்த்துடுவேன். :) உங்களை காணோமே கொஞ்ச நாளா? ஏன்? பிசியா? வாங்க... நேரம் கிடைக்கும்போதெல்லாம்... யாரும் இல்லன்னா போரடிக்குது :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா