பீர்க்கங்காய் துவையல்

தேதி: July 6, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (5 votes)

 

பீர்க்கங்காய் - ஒன்று
வரமிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 50 கிராம்
பெருங்காயம் - சிறிது
புளி - கோலி அளவு
உப்பு
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

பீர்க்கங்காயை நரம்பு நீக்கி சிறு துண்டங்களாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயம் மூன்றையும் சிவக்க வறுத்து வைக்கவும்.
பின் அதே கடாயில் மீதி எண்ணெய் விட்டு நறுக்கிய பீர்க்கங்காயை வதக்கவும். சிறு தீயில் மூடி வைத்து வதக்கி எடுக்கவும்.
ஆறியதும் உப்பு, புளியுடன், வறுத்த பொருட்களையும் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
சுவையான பீர்க்கங்காய் துவையல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பீர்க்கங்காயில் துவையலா? கலக்குரீங்க. நல்ல கரசரமா இருக்கும் போலா. கண்டிப்பா ட்ரை பண்ணுவேன். வாழ்த்துக்கள்.

சத்தான பீர்க்கங்காய் துவையல். அவசியம் செய்து பர்க்கிறேன். வாழ்த்துக்கள் 100ஆவது குறிப்புக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பீர்கங்காய் துவயல்,
ஈசியான ருசியான குறிப்பு வழ்த்துகள் மஞ்சு,

மஞ்சு சேம் பிஞ்ச் அப்படியே நான் செய்வது போலவே இருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு மஞ்சுளா,

நல்லதொரு ட்ரெடிஷனல் குறிப்பு, பாராட்டுக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

மஞ்சு, சாதாரணமாகவே காய்கறிகளில் செய்யும் சட்னி, துவையல் வகைகளுக்கு நான் ரசிகை. இன்னும் உங்களுடைய பீர்க்கை துவையல் சுண்டி இழுக்குது. இங்கே எப்பவாச்சும் பார்த்தால் உடனே போட்டு தள்ளி இந்த குறிப்பை செய்து பார்த்துடறேன். வாழ்த்துக்கள் மஞ்சு :) அண்ணா, பிரேமை விசாரித்ததாக சொல்லவும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மஞ்சுளா மேம்,

சிம்பிள் பீர்க்கங்காய் துவையல் சூப்பர். என்ன சொல்ல கண்டிப்பா செய்துவிடுகிறேன்.

வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மஞ்சு,

எனக்கு இப்போ கிடைக்குது..செய்துவிட்டு சொல்கிறேன்.
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய், முதலில் சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள்:) வித்தியாசமா இருக்கு மஞ்சு, நான் தோளில் தனியாகவும், காய் மட்டும் வைத்து ஒரு மாதிரி செய்வேன், நீங்க நரம்பு மட்டும் நீக்கிவிட்டு செய்திருக்கீங்க, வித்தியாசமா இருக்கு.

அன்புடன்
பவித்ரா