ரசகுல்லா

தேதி: August 20, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பால் – ஒரு லிட்டர்
சீனி – நானூறு கிராம்
மைதா – இரண்டு டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – ஐந்து
ரோஸ் எசன்ஸ் – இரண்டு சொட்டு
சிறிய எலுமிச்சம்பழம் – ஒன்று


 

ஏலக்காயை தோலுரித்து பொடிக்கவும். எலுமிச்சையை நறுக்கி சாறு பிழிந்து வைக்கவும்.
பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சி கொதிக்க ஆரம்பித்ததும் எலுமிச்சைச்சாறு கலக்கவும்.
பால் திரிந்ததும் இறக்கி ஒரு துணியில் தண்ணீர் முழுவதையும் வடிகட்டவும்.
பனீரை தனியாக எடுத்து மைதா, ஏலப்பொடி சேர்த்து கலவை மெதுவாக ஆகும்வரை பிசைந்து, சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
சீனியில் இரண்டு டம்ளர் (நானூறு மிலி) தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
பாகு கொதிக்க ஆரம்பித்ததும் உருண்டைகளைப் போட்டு பனிரெண்டு நிமிடங்கள் வேக விடவும் (மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை லேசாக தண்ணீர் மேலே தெளிக்கவும்).
பின் கீழே இறக்கி ரோஸ் எசன்ஸ் கலந்து ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து பின் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

not good