ஸ்பைரல் பூக்கூடை

தேதி: July 12, 2012

5
Average: 4.2 (12 votes)

 

7 கலர் பேப்பர்ஸ் - ஒவ்வொன்றிலும் 2

 

பேப்பர்களை http://www.arusuvai.com/tamil/node/15022 இதில் உள்ளபடி மடித்து வைக்கவும். ஒவ்வொரு கலர் பேப்பரிலும் 32 துண்டுகள். 448 பேப்பர்கள் கிடைக்கும்.
ஒரே வண்ண காகிதங்கள் 4 எடுத்து படத்தில் உள்ளது போல் ரிவர்ஸில் சேர்க்கவும். இதே போல் எல்லா வண்ணங்களையும் 4 சேர்த்து வைக்கவும்.
இரண்டு வண்ணங்களை படத்தில் உள்ளது போல் இணைக்கவும்.
இதே போல் மீதம் உள்ள எல்லா வண்ணங்களையும் இணைக்கவும். மொத்தம் 7 வண்ணங்கள். இது ஒரு செட். இதே போல் இன்னும் 3 தொகுப்பு தயார் செய்யவும்.
இப்போது 4 தொகுப்பும் சேர்த்து இப்படி கிடைக்கும். ரிவர்ஸில் சேர்ப்பதால் சமமாக 'V' வடிவில் இருக்கும் பகுதி வெளியே இருக்கும். ‘M' வடிவம் வரும் மடிப்பு உள் பக்கம் இருக்கும்.
இதன் மேல் மீண்டும் இதே போல் ஒரு வண்ணம் ஒரு பாக்கெட்டிலும், மற்றொரு வண்ணம் இன்னொரு பாக்கெட்டிலும் சேர்த்து கொண்டே போகவும்.
உயரம் கூட கூட அடி பாகம் இப்படி சமமாக அமையும்.
இதே போல் 9 வரிகள் வந்ததும், கடைசியாக 3 ஒரே வண்ணமாக மேலே மேலே அடுக்கி முடிக்கவும்.
இப்போது 336 பேப்பர்கள் கொண்டு இப்படி ஸ்பைரல் வடிவம் கொண்ட பூக்கூடை கிடைக்கும்.
மீதம் ஒவ்வொரு வண்ணத்திலும் உள்ள 16 பேப்பர்களை கொண்டு இந்த குட்டி பூக்கூடை உருவானது. இது ரிவர்ஸில் சேர்க்கவில்லை, வழக்கம் போல் ‘M’ வடிவம் வெளியே வரும்படி சேர்த்தது. மாற்றி சேர்க்கும் போது வடிவத்தில் வரும் மாற்றம் தெளிவாக தெரியும்.
இனி உங்கள் விருப்பம் போல் அலங்கரிக்கலாம். நான் சிறு கூடையை பெரிய கூடையின் நடுவே வைத்திருக்கிறேன்.
சுலபமாக செய்ய கூடிய பூக்கூடைகள் தயார். குட்டி பூக்கூடை மீதம் ஆனதில் செய்தது தான். ஸ்பைரல் மட்டுமே செய்ய ஒவ்வொரு கலரிலும் 1 1/2 A4 காகிதம் போதுமானது. அதாவது ஒவ்வொரு கலரிலும் 48 மடிக்கப்பட்ட பேப்பர்கள். உங்கள் விருப்பம் போல் இன்னும் பெரிதாக எத்தனை வண்ண காகிதங்கள் பயன்படுத்தியும் செய்யலாம். அல்லது வண்ணங்களை குறைத்து தொகுப்புகளின் எண்ணிக்கையை கூட்டியும் செய்யலாம். விரும்பினால் கீழே ஒரு சிறு அட்டையை வட்ட வடிவில் வெட்டி ஒட்டி விடலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சுபர்ப் வனி. அழகா இருக்கு. ம்... அடுத்து என்ன? :)

‍- இமா க்றிஸ்

கைவினையை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

இமா.. முதல் பதிவுக்கு மிக்க நன்றி. :) இன்னும் டூலிப்க்கு செய்த கூடையை அனுப்பலயே... அவங்களை அனுப்பிட்டு தான் மற்றதெல்லாம் யோசிக்கணும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்படி வனி இவ்ளோ பொறுமையா செய்றிங்க ரொம்ப நல்லா இருக்கு.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சூப்பர் பூக்கூடை!!! கலர் கலரா பேப்பர்ல கலக்குறீங்க!!!

வாழ்த்துக்கள்!!!

Awesome! kallakitinga ponga. ungalukku romba porumai, color color ah parkum podhu seiyanum nu aasaya irukku. but naan idha eppo seithu mudipen nu therila mam. apadiye idha ennaku koduthudunga:-) ha ha ha!
seiyunga seiyunga senjukittey irunga madam.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

குமாரி... மிக்க நன்றி :)

சுபா... மிக்க நன்றி :)

ரேவதி... மிக்க நன்றி. இது ரொம்ப சுலபம் தான்... பொருமை எல்லாம் வேணாம், சீக்கிரம் முடிச்சுடலாம். ட்ரை பண்ணி பாருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்லா இருக்கு வனி பூக்கூடை. எல்லாம் A4 சைஸ் கலர் பேப்பர் தானா வனி எனக்கு இங்க இந்தமாதிரி டார்க் கலர்கள் கிடைக்க மாட்டேங்குது. பத்து செலக்டட் கலர்கள் தான். பேப்பர்ஸ் எங்க வாங்குனீங்க வனி இந்தியாவுலயா இல்ல மாலேலயா

பொன்னி

மிக்க நன்றி. எல்லாம் அதே பேப்பர் தான் பொன்னி. இங்க மாலேவில் வாங்கினது தாங்க... இங்கையும் எல்லா கலரும் கிடைக்காது... நீங்க சொல்ற மாதிரி 10 - 12 தான் ;) அதில் பிடிச்சது எடுத்துக்க வேண்டியது தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்பைரல் பூக்கூடை ரொம்ப அழகா இருக்கு.

இதுவும் கடந்து போகும்

வனிக்கா..... அழகாக இருக்கிறது இரண்டுமே..... டுலீப் பூக்கூடைக்காக வெயிட்டிங்..... அன்னப்பறவை ஒருவழியாக முடிந்து விட்டார்... பேஸ்புக்கில் போட்டு இருக்கிறேன்... உங்கள் அளவிற்கு அழகாக எல்லாம் இருக்காது... இது Resume அன்னம்... ஆம் எனது பழைய Resume xerox களை வைத்து செய்தது... பார்த்துவிட்டு திருத்தங்கள் சொல்லுங்கள்,,,,,.... டுலீப் பூவும் வந்து விட்டது.....

அன்பு வனிதா

பூக்கூடையே வண்ணப் பூங்கொத்து போல கலர்ஃபுல்லாக கண்ணைக் கவருகிறது.

சூப்பர்ப்!

பாராட்டுக்கள் வனிதா

அன்புடன்

சீதாலஷ்மி

கவிதா... மிக்க நன்றி :)

பிரியா... பார்த்துட்டேன் அன்னப்பறவையை :) ரொம்ப அழகா இருக்காங்க. இன்னும் கொஞ்சம் கழுத்தை பெருசு பண்ணுங்க, இன்னும் நல்ல லுக் கிடைக்கும். மற்ற எல்லாம் சூப்பர்... அதுவும் ஏஞ்சல் போல ஒரு லைட் ஷேட்ல அடம் பார்க்க ரொம்ப அழகு :) டூலிப் அங்க காணோமே... செய்து பார்த்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி பிரியா... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, இத்தனை பேர் இதை செய்து பார்த்திருக்கீங்கன்னு :)

சீதாலஷ்மி.. மிக்க நன்றி :) நான் இன்னும் உங்க க்ராஃப்ட்டுக்காக வெயிட்டிங்... என்னை மறந்துட்டீங்க போலிருக்கே ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிக்கா அன்னம் முடிக்க நைட் 12க்கு மேல ஆகிடுச்சு... அதனால தான் அப்படி லைட் டிம்மா போச்சு, கழுத்தும் சின்னதா போச்சு... காலையே கழுத்தை நீண்டு இருக்கும் படி மாத்திட்டேன்.... டுலிப் கலரில் செஞ்சு இலையும் செஞ்சு போட்டோ போடுவேன்.........

இல்லைங்க... லைட் டல்லா இல்ல, நல்லா சுற்றி ஒரு வட்டமா லைட் தெரிவது நல்லா அழகா காட்டுச்சு... அதை தான் சொன்னேன் :) அவசியம் போட்டுட்டு சொல்லுங்க, இரண்டையும் மீண்டும் பார்க்கிறேன். நன்றி பிரியா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

azhago azhagu vazhthukkal

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi all arts are fine but if u that in step by step means thats easy to understand and we also do that.....thank you

ஹல்லோ வனிதா
பூக்கூடை ரொம்ப அழககா உள்ளது.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

மிக்க நன்றி. இது ஸ்டெப் ஸ்டெப்பா தானே இருக்கு? உங்களூக்கு மடிப்பும் கோர்க்கும் முறையும் வேண்டுமானால் இதற்கு முன் வெளி வந்திருக்கும் ஆரிகமி வேலைகளை எடுத்து பாருங்கள் (லின்க் முதல் படத்தின் விளக்கத்தில் இருக்கு பாருங்க)... அதில் எல்லாமே இருக்கு. அதில் உள்ளதையே ரிப்பீட் செய்ய வேண்டாம் என்றே இங்கே மாடல் + எண்ணிக்கை மட்டும் இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hi I'm new member it's very nice . Can u say how to fold the paper . Pls reply ma

free time kedacha chat panuga! Ila mail panuga..

hai..Sivaranjani hru i am also very new to this site..
i will be good friend bye and mail me..

bye...