நிலாச்சோறு சாப்பிட்டதுண்டா நீங்கள்?

நிலாச்சோறு சாப்பிட்டதுண்டா நீங்கள்?
அது நிலாவை கெளரவிக்கும் ஏற்பாடு!

நிலா உலா வரும்போதெல்லாம் மானுடம் போர்வைக்குள் போயிருக்கும்.

அது நிலாவிற்கான சாபக்கேடு!

நிலாச்சோறு சாப்பிட்டவர்களின் புள்ளி விபரம் எடுத்து பார்த்தால் புள்ளி மட்டுமே உள்ளது...

அதன் அனுபவ சுகமே தனி!
உண்ணும் உணவு எதுவாயினும் அதை கைகளில் பிசைந்து உருண்டை பிடித்து பகிர்ந்து கொள்ளும்போது ஏற்படும் குளிர்ச்சி தொண்டையில் நுழைந்து,உணவு குழல்களில் நழுவி,அடிவயிற்றினை தொடும் வரையிலும் நீடிக்கும்!

அப்போது மட்டும் மனிதகுலம் காக்கை ஜாதியாக மாறி விடுகிறது!

ஆனால் நிலாச்சோறு எனக்கெதற்கு நிலாவெ சோறு எனக்கு!

உங்கள் நிலாச்சோறு அனுபவங்களை இங்கே தரலாமே!

பௌணர்மி அன்று கலந்த சாதம் ரெடி பண்ணி அம்மா உருட்டி தர எல்லொரும் சுற்றி உட்கார்ந்து அம்மா கையாலே சாப்பிடுவது தனி ருசி தான்.
இப்ப அது ஒரு கனாக் காலமா ஆகிப் போச்சு.
எல்லொரும் டி.வி.பெட்டி முன்னடியும் கம்ப்யூட்டெர் முன்னாடியும்னு ஆச்சு.
மாதம் ஒரு நாள் அதை மாத்தி நிலா முற்றத்துக்கு வரலாம்.எல்லொரும் ஜாலியா அரைட்டையடிச்சிட்டு நிலாசோறு சாப்பிடலாம்.

சகோதரி நிகிலா...புது வசந்தம் படம் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்..அதில் சித்தாரா நண்பர்கள் நான்கு பேருக்கும் நிலாச்சோறு கொடுக்கும் சீன் பார்த்த பிறகு நிலாச்சோறின் ஏக்கம் நாக்கிலும் கண்களிலும் நீரை வரவழைத்தது!பிறகு வீடு வந்து பக்கத்து வீட்டுக்கார நண்பர்களோடு நிலாச்சோறு சாப்பிட்டது வேறு கதை!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஷேக், நலமா? மிக நீண்ட இடைவெளிக்கு பின் உங்களோடு பேசுவதில் மகிழ்கிறேன். மனைவி, குழந்தைகள் நலமா? மனைவியின் பிறந்த நாள் கொண்டாட்டம் எப்படி சென்றது?

நிலாச்சோறு இதுவரை சாப்பிட்டதில்லை. ஆனால் ஒரே பாத்திரத்தில் 3 பேருக்குண்டான உணவை போட்டு அம்மா கையால் உருட்டி தரப்படும் சாப்பாடை நிறைய தடவை சாப்பிட்டிருக்கிறேன். அந்த ருசியை வேறு உணவில் இது வரை காணவில்லை. அதே சாதம், அதே குழம்பு, அதே பொரியல் தான். ஆனால் அம்மாவின் கைபட்டதும் என்ன மாயம் நடக்குமோ தெரியவில்லை. இந்த முறை ஊருக்கு சென்ற போதும், அம்மா ஆசையாக ஊட்டி விட்ட உணவை உண்டு மகிழ்ந்தேன். இன்னும் அதன் ருசி தொண்டையை விட்டு அகலவில்லை. நல்ல நேரத்தில் இந்த இழையின் மூலம் அம்மாவின் அன்பை நினைவுறுத்தினீர்கள் சகோதரரே. உங்களுக்கு என் நன்றிகள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நல்ல இழை ஷேக் அண்ணா.நான் சின்ன வயசுல நிலா சோறுனு சாப்பிடது இல்லை.ஆனா எங்க பாட்டி எனக்கு எங்க அண்ணங்களுகு பெரிய உருண்டையா கைல குடுப்பாங்க.எவ்வளவு சாபிடாலும் வேண்டாம்னு சொல்ல மாட்டோம்.இப்ப திருமண்த்திற்கு அப்பற்M எப்பவாது மாடில உட்கார்ந்து சாபிடுவோம்.என் பெரிய பையனுக்கு ரொம்ப பிடிக்கும்.

Be simple be sample

கல்பனா மேம்..நான் மனைவி மக்கள் எல்லோரும் நல்ல சுகம்!நான் இருப்பது தஞ்சாவூரில்..பர்த்டே கொண்டாட முடிய வில்லை.

நானும் பாட்டியோடு சாப்பிட்ட காலம் உண்டு..

குறிப்பாக பாட்டி செய்யும் கானக் குழம்பு!பாட்டி மட்டும் இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரங்க கறி வகைகளையும் பகிர்ந்துண்ணும் சுகம் இருக்கிறதே! அப்பப்பா!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

சகோதரி ரேவதி!நீண்ட இடைவேளிக்கு பிறகு எல்லா நண்பர்களையும்,உங்களையும் சேர்த்து சந்திப்பதில் ஆனந்தம் அடைகிறேன்!

..ஆனால் ரேவதி எனக்கு நிலாச்சோறுக்கு பிறகு சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் கூட்டமாய் அமர்ந்து கூட்டாஞ்சோறு உண்ட நினைவுகளை இன்னும் மறக்க முடியவில்லை!

ஒரு வேளை கூட்டமாய் அமர்ந்து உண்டதலையே கூட்டாஞ்சோறு என பெயர் வந்ததோ???

உன் பதிவ படிச்ச பிறகுதான் மனைவி குழந்தைகளோட நிலாச்சோறு உண்ணும் ஆசை வந்திருச்சுப்பா!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஷேக் அண்ணா

எங்க அப்பா அம்மா கடை வச்சிருந்ததால் நடு இரவு நேரத்தில் தான் கடை அடிச்சிட்டு வீட்டுக்கு வருவாங்க... ஆனால் என் அத்தை குடும்பத்துடன் உட்கார்ந்து அந்த கால கதைகளை கேட்டுகிட்டே நிலா சோறு சாப்பிட்டதை இன்றும் மறக்க முடியாது...

அதன் தாக்கம், இப்பொழுதும் சில சமயங்களில் இங்கே மொட்டை மாடி இல்லை, அதனால் வெட்ட வெளியில் அமர்ந்து நிலா சோறு சாபிடுவது வழக்கம், சொல்லபோனால் எல்லா வெள்ளிகிழமைகளில் நடக்கும் பார்ட்டி கூட நாங்க வெட்ட வெளியில் தான் நடத்துவோம்...

நிலா வெளிச்சத்தில் உணவருந்துவது ஒரு தனி சந்தோஷம் தானே...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

ஷேக் அண்ணா வணக்கம் .
நிலாச்சோறு சிறுவயதில் சாப்பிட்டது மிக இனிமையான நினைவுகள் .
சிறுவயதில் நானும் என் நண்பர்களும் சேர்ந்து நிலாச்சோறு சாப்பிட அவரவர் வீட்டில் செய்த உணவினை எடுத்துச்சென்று பொதுவான இடத்தில் வைப்போம். பின்பு பெண்கள்,20 பேர் கொண்ட குழுவாக இணைந்து கோலமிட்டு அவ்விடத்தில் உணவுகளை வைத்து வட்ட வடிவாக சுற்றிநின்று பாட்டுபாடி கும்மி அடிப்பர். ஒருமணி நேரம் கழித்து சிறுவர் முதல் பெரியவர் வரை அவரவர் உணவினை எடுத்து அனைவரும் ஒன்றாக பகிர்ந்து உண்போம். இன்று பெண்கள் கும்மிப்பாட்டு பாடுவது கேட்பதெல்லாம் அரிதாகிவிட்டது. உங்களுடன் நினைவுகளை பகிர்வதில் மகிழ்ச்சி :-) மிக்க நன்றி

நட்புடன்
குணா

பிரேமா சகோதரி!பதிவிற்கு நன்றி!இந்த வானத்தின்கீழ் நிலாவை ரசித்தவர்களை விட நிராகரித்தவர்களே அதிகம்!

நிலா வானம் எழுதிய நட்சத்திர கவிதைகளின் முற்றுப் புள்ளி!

அது ஏழையின் விளக்கு!

தன்னை யாரும் ரசிக்கவில்லை என நிலா ஏக்கம் கொண்டு மெலிந்தது!அது நிலவின் தேய்பிறை!உங்களையும் என்னையும் போல் அதை ரசித்ததால் அதுபூரிப்படைந்தது..அதுவே அதன் வளர்பிறை!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஸகோதரி குனா! உங்கள் பதிவின் மூலம் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

1.நீங்களும் என்னைப்போல் நிலா ரசிகர்!
2.நிலாச்சோறு பதிவின் மூலமாகவே உங்களின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது

வைரமுத்துவின் நிலாவை பற்றிய எனக்கு பிடித்த வரி "நிலா என்பது ஒரே எழுத்தில் ஒரு கவிதை"

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்