சொல்ல விரும்பினேன் - 8 !!

இங்க யார் வேணும்'னாலும் பதிவு போடலாம், எதை பற்றி வேணும்'னாலும் பதிவு போடலாம்... எல்லாரும் கருத்து சொல்லலாம், உங்க அனுபவத்தையும் சொல்லலாம். ;) அரட்டை மட்டும் கண்டிப்பா கூடாது.

மக்களே... சொல்ல விரும்பினேன் இனி இந்த புது இழையில் தொடருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மேடம், எடிட் பண்ண மாட்டேன் என்று தான் சொல்லி இருந்தேன், என்ன செய்வது எடிட் பண்ண வேண்டியதாகி விட்டது :)
சாரி...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நாம் தினமும் சமையல்,மின்சாரம்,ஹீட்டர்,அயர்ன் பாக்ஸ் இப்படி பல சாதனங்களை உபயோகபடுத்துறோம்..

ஆனால் நிறைய நேரம் இதில் அஜாக்கிரதையாக இருப்பதும் உண்டு..காஸ்,ஹீட்டர்,அயர்ன் பாக்ஸ் அணைக்க மறப்பது என்பது மன்னிக்க கூடிய ஒரு விஷயமாக மாறுது..ஆனால் அது எந்த ஆபத்தையும் தராத வரைக்கும் சரி...

சமீபமாக,இரண்டு விஷயங்கள் நடந்தது..

ஒன்று,5 மாதங்களுக்கு முன்னாடி செய்தித்தாளில் கூட வந்தது..எங்கள் நண்பர் வீட்டில் தைப்பூசம் அன்று நடந்தது..வீட்டில் தனியாக பாட்டி மட்டும் இருந்து இருக்கிறார்..காலையில் அனைவரும் அவங்க வீட்டில் வேலைக்கு சென்று விடுவது வழக்கம்.

அவங்க வழக்கம் போலே குளித்துவிட்டு பூஜைக்கு தரையில் உள்ள விளக்கு ஏற்றிவிட்டு மேலே எட்டி எட்டி பூ வைத்து இருக்கிறார்,ஸ்லோகம் சொல்லிக்கொண்டும்,பூ வைக்கும் ஆர்வத்திலும்,கீழே உள்ள புடவை கொசுவம் தீப்பற்றி கொண்டு விட்டது கூட தெரியலை மேலே பரவியதும் என்ன செய்யுறதுன்னு தெரியாம தவிச்சு போய்ட்டாங்க.

நம் வீடுகளில் தான்,அடுக்களையிலேயே சுவாமி,காஸ் cylinder அனைத்துமே இருக்குமே! நெருப்பின் வேகம் தங்காமல் சரிந்து விட காஸ் வெடித்து,பலத்த காயங்களுடன் நாட்கள் போராடி உயிரை விட்டுட்டாங்க

சுவாமி கும்பிடுங்க..ஆனால் இந்த மாதிரி விளக்கு ஏத்திட்டு தான் பூ வைக்கணும்னு எந்த ருல்சும் இல்லையே..இருந்தாலும் பிரேக் பண்ணுங்க தப்பே இல்லை!!! நாம் உயிரோடு இருந்தா தான் சாமிக்கே பூ !!! இல்லேன்னா நமக்கே ஊ ஊஊ..தான்!! (தீவிர பக்தர்கள் மன்னிக்கவும்)

இரண்டாவது,பக்கத்துக்கு அபார்ட்மெண்டில் நடந்தது..அடுப்பில் எதையோ வைத்து விட்டு அப்படியே போய்ட்டாங்க அப்படியே பாட் சூடில் மேலே உள்ளே காபினெட் பற்றிவிட்டது..அவ்ளோ தான்..இந்த வீட்டில் அம்மணி fire அலாரம் device -ஐ கழட்டி வைத்து விட்டதாம் ..உள்ளே குழந்தைகளை பூட்டிவிட்டு வேற போய்ட்டாங்க..பாவம் அந்த குழந்தைகள் பீதியோட அலறுச்சுங்க..பார்க்கவே பயமா ஆகிவிட்டது,,உடனே எல்லாரும் சேர்ந்து காப்பாத்திட்டாங்க ..

அடிக்கடி என் கணவர் செய்யும் தவறு,பிடி துணியை வழிய பிடித்து தீ காயம் ஏற்படுத்திகிறது,சூடான பத்திரத்தை அப்படியே மர சாமான் மீது வைப்பது,அப்படியே உருகிடும்..பசங்களும் தொட்டுடுவாங்க..அப்புறம் சூசூ ன்னு ஆர்ப்பாட்டம்..

சமையல் முடித்ததும் கண்டிப்பாக காஸ் அணைத்துவிடுங்க,பருத்தி துணி போட்டுட்டு சமைங்க,இல்லேன்னா apron போடுங்க,,சூடான பாத்திரங்களை பாட் ஹோல்டேரில் வைங்க..பிடி துணி வழிய பிடிக்காதீங்க..முடிஞ்சா கிடுக்கி பயன்படுத்துங்க..

வீட்டை விட்டு கிளம்புறதுக்கு முன்னாடி கண்டிப்பாக செக் பண்ணுங்க..பார்த்து செய்யுங்க..கவனம்..கவனம்..கவனம்..படிக்கிறவங்களும் கொஞ்சம் safety டிப்ஸ்களை பகிர்ந்து கொள்ளுங்க..

இன்னும் நிறைய சொல்லணும்..அப்புறம் வருகிறேன்..

என்றும் அன்புடன்,
கவிதா

பிந்து, நீங்க வாதத்துக்காக சொன்ன விஷயங்கள் வனித்தா மனச பர்ஸ்னலா பாதிசுருக்குன்னு சாரி கேக்குரிங்கலா? நான் பாத்த வரைக்கும் நீங்கலும் தப்பா சொன்ன மாதரி தெரியல. உங்க வாதத்துக்கு பதில் சொல்ற மாதரிதான் வனித்தாவும் போட்டுருகாங்க.பிந்து நீங்க ரெம்ப குலம்பி போயிருகிங்க போல.இங்க நீங்க போட்டுருக்குர பதிவு பாக்கும்போதே புரியிதி உங்க நர்ப்பின் ஆழம். கண்டிப்பா வனிதா புரிஞ்சுப்பாங்க,

மஹா சிவா, நீங்க படிச்சிட்டீங்களா... சந்தோசம் :)

ஹி ஹி நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நீங்களா சொல்ல விரும்பினேனில் பதிவு போட்டிருக்கீங்க!! என்னால் நம்பவே முடியல ;) உண்மை தான்... எனக்கு தெரிஞ்ச இருவர் வீட்டிலும் சிரியாவில் இப்படி ஆச்சு... எதையோ ஆஃப் பண்ணாம அப்படியே விட்டு வீடு தீ பிடிச்சுடுச்சு. நம்ம அறுசுவையில் கூட யார் வீட்டிலே இப்படி தீ பிடிச்சுதுன்னு சொன்னதா நியாபகம். உஷாரா இருக்க வேண்டிய விசயம்.. பகிர்வுக்கு நன்றி கவிதா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிந்து... இன்னைக்கு என்ன வேலை இது?? தினமும் நான் தூங்கி எழுந்து வரும் முன் குட்டைய குழப்பிட்டு போயிடுறீங்க ;) நீங்க என்ன சொல்லிருந்தீங்கன்னு இப்ப எனக்கு தெரியல... ஆனா மகா பதிவை பார்த்தா தேவை இல்லாம எதுக்கோ ஃபீல் பண்ணிருக்கீங்கன்னு மட்டும் புரியுது (தேன்க்யூ மகா... :)). பதிலும் மகா சொன்னதே தான் (மீண்டும் தேன்க்யூ மகா).... எதுவும் நான் கோவிச்சுக்க அங்க பட்டியில் இருக்க மாதிரி எனக்கு தெரியல... நான் சொன்ன பதிலும் ஹர்ட் ஆகி சொன்னது இல்ல... ஏன் அப்படி தோணுச்சுன்னு எனக்கும் தெரியல. எனக்கு தெரிஞ்சு நீங்க தான் நிறைய குழப்பத்துல இருக்கீங்க ;) பதிவெல்லாம் தெளிவா தான் இருக்கு அங்க.

மக்களே... இதே தான் சொல்றேன்... நான் எப்பவும் ஆன்லைனில் இருப்பதில்லை. அதனால் உடனே பதில் வரலன்னு கோவிச்சுகிட்டாங்க, ஹர்ட் ஆயிட்டாங்கன்னு நினைச்சுக்காதீங்க. பதிவை போடும் முன் எத்தனை முறை வேண்டுமானாலும் யோசிங்க, போட்ட பின் குழப்பம் வேணாம். என்னை யாரும் ஹர்ட் பண்ண முடியாது... நான் ஹர்ட் ஆகவும் மாட்டேன். அப்படி என்னை மீறி எப்பவாது நான் ஹர்ட் ஆனா அதை நேரா இங்கையே சொல்லிடுவேன். :)

பிந்து அக்கா... குழப்பம் போச்சா?? போய் தூங்குங்க :) நீங்க குழம்பி மத்தவங்களையும் குழப்பி... இதே வேலையா போச்சு. எப்படி தான் உங்களை வீட்டுலையும் ஆபீஸ்லையும் வெச்சு சமாலிக்கறாங்களோ!!! ரொம்ப பாவம் அவங்க. குட்னைட்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு தோழிகளே... சில நாள் முன்பு மகாலக்‌ஷ்மி, கார்த்திகா, தளிகா எல்லாம் ஒரு இழையில் பரிட்சை எழுதுவது போலவும், தப்பான கேள்விகள் வருவதாகவும், பதில் தெரியாததாகவும், நேரம் குறைவா இருக்க மாதிரியும்... பல விதமா கனவுகள் வருது, அடிக்கடி வருதுன்னு எழுதி இருந்தாங்க. அப்போ அங்க பதில் சொல்ல நினைச்சேன், ஆனா அதில் நான் அந்த அளவு தெளிவா இல்லாததால் விட்டுட்டேன். ஆனா எனக்கும் இந்த வாரத்தில் 2 முறை இந்த கனவு வந்துடுச்சு... அதனால் நான் உட்கார்ந்து அதுக்கான காரணத்தை கூகிளில் தேடினேன் (நமக்கு தான் எதையும் போனா போதுன்னு விடும் வழக்கம் இல்லையே...). எனக்கு அது சரியா தான் தோணுது... ஏன்னா அவங்க இந்த கனவை சொன்னப்போ எனக்கு அவங்க மன நிலை இப்படி தான் தோண்றியது... அதனால் அதையே உங்களிடமும் ஷேர் பண்ணிக்கறேன். :)

முதல்ல இந்த கனவுகளுக்கு காரணம் இதில் எதுவா வேணும்னா இருக்கலாம்:

1. நம்மை யாரோ சோதிச்சு பார்ப்பதாக ஒரு எண்ணம்

2. நம் திறமை மேல் நமக்கு நம்பிக்கை குறைவது

3. நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மை ஏற்று கொள்வார்களா என்ற அச்சம்

4. தோல்வி பற்றிய பயம்

5. நம்மை நாமே குறைத்து மதிப்பிடுவது

6. நம்பிக்கை இன்மை

7. சுற்றி இருப்பவர்களில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத நிலை

8. வாழ்க்கையை எதிர் கொள்ள பயம் / தயாராக இல்லாமை

இதில் எது வேண்டுமானாலும் பரிட்சை கனவுக்கு காரணமா இருக்கலாம். மொத்தத்தில் பார்த்தோமானால் ஏதோ ஒரு பயம்... நாம் நம்மை பற்றியே, நம் திறமையை பற்றியே சந்தேகப்படுவது. இது தான் காரணம்.

ஏன்னா நமக்கு அந்த கனவுகளில் நாம பாஸ் ஆவதாக வருவதே இல்லை... டென்ஷன் தான் அதிகமா இருக்கு இது போல் கனவில் :) இது நம்ம பயத்தை தான் காட்டுது. தோல்வி பயம்.

இந்த கனவில் இருந்து வெளிய வர ஒரே வழி... எதனால் இந்த கனவு, நாம எதை நினைச்சு பயப்படறோம் என்பதை கண்டு பிட்ச்சு, அதில் நம் எண்ணத்தை பாசிடிவா மாத்திக்கணும். தைரியத்தை வளர்த்துக்கனும். இதெல்லாம் நானா சொல்லல... படிச்சதை சொல்றேன். ஏன்னா எனக்கு இது மேச் ஆகுது... உங்களூக்கும் மேச் ஆகலாம்!!! :)

இதில் ஒரு இண்ட்ரஸ்டிங் விஷயம் என்ன தெரியுமா??? இது ரொம்ப சகஜமா பலருக்கு வரக்கூடிய கனவுகளில் ஒன்று. இனி கனவில் வரும் பரிட்சையில் பாஸ் ஆவது உங்க கையில்!!! ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

-

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Andha dream nan padicha school la nadakura madhiri thaan varum:) marubadiyum school ku poi padikka poreno ennavo;) akka, enaku romba adikadi varra innoru dream nan trainah mis panra madhiri dream akka... Nan yera vendiya train track la vandhu nikkum nan opposite platform la irupen, illaina station ku vara late ayidum ippadi... Ellame outstation pora trains not local train... idhuku enna akka reason irukum?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்