ஆலு சுரைக்காய் சப்ஜி

தேதி: July 17, 2012

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

உருளைகிழங்கு-2
சுரைக்காய்-1
தக்காளி-1
வெங்காயம்-1
இஞ்சி-சிறுதுண்டு
தயிர்-1டேபிள்ஸ்பூன்
தேங்காய்பால் பவுடர்-1டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்-சிட்டிகை

தாளிக்க:தேங்காய் எண்ணெய்,கடுகு ,சீரகம்,பச்சைமிளகாய்(3),சிவப்புமிளகாய்(3),கறிவேப்பிலை-ஒரு கைப்பிடி


 

முதலில் உருளைக்கிழங்கை கழுவி க்யூப்களாக நறுக்கவும்
அதே சைஸில் சுரைக்காயையும் துண்டுகளாய் நறுக்கவும்
வெங்காயம் நீளவாக்கில் மெல்லியதாய் நறுக்கவும்.
தக்காளியையும் பொடியாக நறுக்கவும்
இஞ்சியை பொடியாக நறுக்கவும்

ப்ரஸர் குக்கரில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு,சீரகம் கீறீய பச்சைமிளகாய்,சிவப்பு மிளகாய் கறிவேப்பிலை தாளிக்கவும்
தாளிப்புடன் வெங்காயம் ,இஞ்சியை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.
பின் தக்காளியை குழைய வதக்கி அதனுடன் உருளைக்கிழங்கை போட்டு வதக்கி பின் சுரைக்காயையும் சேர்த்து வதக்கி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு கலக்கி மூடி இரண்டு விசில் வரும்வரை மிதமான தீயில் வைத்து செய்யவும்..
பின் விசில் அடங்கியதும் திறந்து அதனுடன் கட்டியில்லாமல் அடித்த தயிரை சேர்த்து கலக்கி தேங்காய்பால் பவுடரை கால்கப் வெந்நீரில் கட்டியில்லாமல் கரைத்து ஊற்றி ஒரு கொதிவிட்டு எடுக்கவும்


இது சப்பாத்தி ,பூரி,ரொட்டிவகைகளுக்கு பொருத்தமாய் இருக்கும்.
இங்குள்ள ஒரு கேரள உணவகத்தில் பூரிக்கு செய்யும் சப்ஜி இது..இதன் சுவை பிடிக்க முயற்சி செய்தேன்..இந்த சப்ஜிக்கு சீனி கத்தரிக்காய்,நூல்கோல் ,வாழைக்காய்..வேறு பூசணி வகைகாய்கள் ஒன்றையோ ,கலந்தோ உருளைக்கிழங்குடன் பயன்படுத்தலாம்.
விரைவில் செய்யக்கூடிய இந்த சப்ஜி சப்பாத்தி,பூரி,ரொட்டிவகைகளுக்கு பொருத்தமாய் இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

Migavum nandrai irunthathu,Thanks for the recipe.