ஆறுதல் சொல்லுங்கள் தோழிகளே!

அருசுவை தோழிகளுக்கு வணக்கம்,
நான் 1வருடமாக அருசுவை தளம் பார்கிறேன்.என் மனக்குமுறலை யாருடம் சொல்லுவதுனு தெரியாமல் இங்கு கொட்டுகிறேன்.எனக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகிரது.2/12 வயதில் குழந்தை இருக்கிறது. என் மாமியாருக்கு என்னை பிடிக்காது.அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுபடியே நான் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்.ஆரப்ப காலத்தில் கோபத்தில் பேசி என்னை காயப்படுத்தியூள்ளார்.அந்த வார்த்தைகளை எப்போது நினைத்தாளும் அழுகை வருகிறது.நான் ரொம்ப காயப்பட்டு இருக்கிறேன்.குழந்தை இல்லாத நாட்களில் பல பேச்சுக்கள் வாங்கியுள்ளேன்.ஒரு விசயம்கூட என் அம்மா வீட்டிற்க்கு தெரியாது.என் கணவர்ரிடம் சொன்னால் எனக்காக கொச்சம் நாள் பொருத்துக.தனியாக போய்விடலாம் என்கிறார்.இப்போது பிரச்சனை என்ன வென்றால் என் குழந்தை பாட்டி பாட்டி என்று அவர்களிடமே போகிறது.சில சமயங்களீல் அம்மா வேண்டாம் என்ருகூட சொல்கிறாள்.நான் இதை டய்ப் செய்யும் போது கூட அழுது கொண்டு தான் செய்கிறேன்.நான் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதே இல்லை.அன்பாக தான் இருக்கிறேன். ரொம்ப அடம் பிடிக்கிறாள்.யாரிடம் காரியம் நடக்கும் ஏன்று தெரிந்துக்கொண்டு அவர்களீடம் ஒட்டிக்கொண்டாள்.
உதாரணத்திற்க்கு மாமியார் அவளுக்கு காப்பி கொடுப்பார்கள்.அது எனக்கு பிடிக்காது.கொடுக்காதீங்கள் என்று சொன்னால் கேட்கமாட்டார்கள்.icecream தினமும் கொடுத்தார்கள் என் கணவர் சொல்லி இப்போது கொடுப்பதில்லை.வேக வைக்காமல் maggi கொடுக்கிறார்கள்.)
இப்படி பல பல.
அவள் அடம் பிடித்தாள் மாமியார் கோபம் என்னிடம் திரும்புகிறாது. ரொம்ப கஷ்டமாக உள்ளது.மாமியாராக உள்ளவர்கள் என்னை தவறாக நினைக்கவேண்டாம்.என் கவலையை கொட்டிவிட்டேன்.தவறாக இருந்தால் மன்னிக்கவும்.என் மனக்கவலைக்கு என்ன செய்வது.ஆறுதல் சொல்லுங்கள் தோழிகளே!

Hi kalai unga mail padichen romba kastama irrunthuchi dont feel kulanthaiku ethuvum theriyathu. neenga sonna maathiri yarar athuku pudichatha allow pannrangalo avanga kitta than ottikum. But neenga anba irrukuratha mattum vittarithinga. Mulla mulla than edukanumnu sollvanga unka babyku pudichatha neenga seinkaga (athu ungaluku pudikavittalum) appdiye konjam konjama unga side konduvanga .Apparama kulanthaiya mathikalam. next one visayam eppavume oru kulanthaiya irrukurathu adam pudikathan seium

டியர் கலை,

உங்கள் பதிவைப் பார்த்ததும் எனக்கு மிகவும் கோபமாக வந்தது, நமது கலாச்சாரத்தில் மட்டும் இந்த மாமியார்கள் ஏன் தான் இப்படி இருக்கிறார்களோ தெரிய வில்லை,திருமணத்திற்க்குப் பிறகும் மகன்களை தங்கள் கட்டுப்பாட்டிற்க்குள் வைப்பதே மிகப் பெரிய தவறு,இதில் பேரக் குழந்தைகளையுமா இப்படி!!!!!!!!!!!!!!!

பிஞ்சு மனதில் விஷத்தை விதைக்கும் இந்தப் பெண்ணெல்லாம் ஒரு தாயா???

கவலைப் பட வேண்டாம் தோழியே ,இப்படிப் பட்ட ஜென்மங்கள் திருந்தவே மாட்டார்கள். ஆனால் உங்கள் மகளை நீங்கள் மாற்றுவதற்க்கு முயற்ச்சியுங்கள்.

அவளுக்கு என்ன பொழுது பொக்கு பிடிக்கும் என்று பாருங்கள், அடிக்கடி வெளியே அழைத்துச் செல்லுங்கள் ,பூங்கா ,கடை வீதி,விளையாட்டு மைதானம் .........

மட்டுமல்ல கடையிலிருந்து அவளுக்குப் பிடித்தமானதை கேட்டு வாங்கி கொடுங்கள், அவளிடம் சமைக்காத நூடுல்ஸ் சாப்பிட்டால் நல்லதல்ல ,ஆகவே அம்மா அதை தருவதில்லை என்று எடுத்துக் கூறுங்கள்.

கைவினைப் பொருட்கள் வாங்கி சிறிய பொம்மைகள் போன்று வீட்டில் செய்து அவளுக்கு காட்டுங்கள் ,இன்றைக்கு இந்த பொம்மை ,நாளைக்கு வேறு பொம்மை செய்யலாம் என்று அவள் ஆர்வத்தை தூண்டுங்கள்.

காப்பி குழந்தைக்கு நல்லதில்லை தான் ,நீங்கள் ஹாட் சாக்கலேட் கொடுத்து பாருங்கள்.

எல்லாவற்றிற்க்கும் மேலாக உங்கள் கணவரிடம் இங்கிருந்தால் குழந்தையின் எதிர் காலம் பாதிக்கப் படும் என்று கூறுங்கள்.

குழந்தைக்கு தாயும் தகப்பனும் தான் முதல் உறவு என்றும், இதை இப்படியே விட கூடாது என்றும் கணவரிடம் சொல்லுங்கள்.

மேலும் உங்கள் கணவரை அவர் தாயார் இப்படி வளர்க்கவில்லை என்றும் அவருக்கு நியபகப் படுத்துங்கள்.

சீக்கிரம் தனிக் குடித்தனம் செல்ல முடியுமா என்று பாருங்கள், அப்படி செல்லும் போது குழந்தை அடம்பிடித்தாலும் பொறுத்துக் கொள்ளுங்கள்.

குழந்தை சாக்கு சொல்லி மாமியாரை அடிக்கடி வீட்டிற்க்குள் விடாதீர்கள்.

குழந்தையின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு செயல் படுங்கள்.

நன்றி சரண்யா,என் குழந்தைக்கு பிடித்தவை தான் செய்கிறேன்.இனிமேலும் செய்வேன்.உங்கள் பதில் எனக்கு ஆறுதலாக உள்ளது.நன்றி!

நன்றி வாணி ,
என் குழந்தைக்கு பிடித்தவை தான் செய்கிறேன்.அவளை என் பக்கம் இழுக்க நானும் பல வேலைகளை செய்துக்கொண்டுதான் இருக்கிறேன். இனி கைவினையும் செய்து கொடுக்கிறேன்.இந்த website பார்த்து தான் அவளுக்கு புது புது recipes செய்து கொடுப்பேன்.

சீக்கிரம் தனிக் குடித்தனம் செல்ல முயற்சிக்கிறோம்.மீண்டும் நன்றி வாணி.

தோழி கூறியது போல் விரைவில் தனிக்குடித்தனம் செல்லுகள்.

என் மாமியாரும் அப்படித்தான், குழந்தை அழுதால் வயற்றில் நாம கட்டி பூச சொல்லுகிறார், படுத்து கொண்டு குழந்தைக்கு தாய் பால் குடுக்க சொல்லுகிறார், சாம்பார், ரசம் தினமும் குழந்தையின் நாவில் பூச சொல்லுகிறார்(என் குழந்தைக்கு இப்போது 5 மாதங்கள் தான் ஆகிறது).

இதனால் எனக்கு தினமும் கோவம் வரும். பொறுமைசாலி என்று பெயர் எடுத்தவள் இப்போது முன்கோபி என்று பெயர் எடுத்து வருகிறேன்.

என்னால் தனிக்குடித்தனம் செல்ல முடியாது என் மாமனார் இறந்து விட்டார். என் கணவர் ஒரே ஆண். என் கணவருக்கு 3 தங்கைகள். ஒருவர் இன்னும் மனம் ஆகவில்லை. அவளும் தான் அம்மா சொல்லுவது தான் சரி என்று என்னோடு வாதிடுவாள்

எனக்கும் அறிவுரை சொல்லுங்க ப்ளீஸ்

வாழ்க வளமுடன்

ஆறுதல் சொல்லாமல் ஏதோ சொல்கிறாளே என்று தப்பாக எண்ண வேண்டாம்.இந்த உலகத்தில் யாரும் 100% நல்ல மாமியரை பெற்றவர்கள் கிடையாது .மேக்ஸிமம் பல்வேறு காரணங்களுக்காக adjust பண்ணிக் கொண்டு போகின்றார்கள். நிச்சயமாக எதாவது ஒரு விஷயத்திலவது உங்க மாமி உங்களுக்கு உதவி இருப்பார் .அத நினைத்து சில சின்ன விஷயங்க்களை பெரிது படுத்த வேண்டாம் தோழி. ஆகளுக்கு தாய்ப்பாசம் அவ்வள்வு சீக்கீரம் விட்டுப் போகாது. வாழ்க்கை ரொம்பவே முக்கியம் தோழி. பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை ஆகப் போகிறது. ஒரு அக்கறையில்தான் சொல்கிறேன் தவறாக எண்ண வேண்டாம் (என் வீட்டிலும் உங்க வீடு மாதிரிதான் என் மாமியின் கேரக்டரை யாராலும் புரிந்து கொள்ளவே முடியாது )

மாமியாரை சமாலிச்சு குடும்பம் நடுத்துறது தானே நம்ம சாமர்த்தியம்?? :) மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொலுத்தின கதையா தனியா குடித்தனமா??? ஏன் இப்படிலாம் யோசிக்கறீங்க?

முதல்ல உங்க பயத்தை போக்குங்க... உங்க மகள் மேல் உங்களுக்கு இருக்கும் அதே பாசம், பொஸஸிவ்னஸ் தானே அவருக்கும் அவர் மகன்(உங்க கணவர்) மேல் இருக்கும்?? எல்லா தாயும் பிள்ளை மேல் அன்பு காட்டுவதில் ஒன்று தானே? ஒரு தாயாக இப்போது உங்களால் அவரையும், அவர் பயத்தையும், கோவத்தையும் புரிந்து கொள்ள முடியணுமே.

எல்லா மாமியாரும் பண்ணுற அதே தப்பை தான் உங்க மாமியாரும் பண்றாங்க... நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு ஃபீல் பண்ண ஒன்னுமே இல்லை கலை. எல்லாருக்குமே கல்யாணம் ஆனதும் பையன் தன்னை விட தன் மனைவிக்கு முக்கியத்துவம் வந்துடுச்சோ, நம்மை நம்ம மகனிடம் இருந்து பிரிச்சுட்டாளோன்னு மருமகள் மேல ஒரு கோவம், பயம் வரும்... வேறு எதுவும் இல்லை. இப்போ நீங்க உங்க மகளை பிரிச்சுடுவாங்களோன்னு பயப்பிடுவது போல.

ஆயிரம் தான் பாட்டி அன்பாக இருந்தாலும் பிள்ளைகளுக்கு தாய் மேல் உள்ள அன்பு வேறு தான்... அதை யாரும் மாற்ற இயலாது. ஒரே ஒரு விஷயம் புரிஞ்சுக்கங்க, மாத்திக்கங்க... உங்க மாமி எதாவது குழந்தைக்கு கொடுத்தா எதிர்காதீங்க... விட்டுடுங்க. எதை செய்யாதீங்கன்னு நாம ரொம்ப ஃபோர்ஸ் பண்ணி சொல்றோமோ அதை செய்ய தோண்றும்... இது நமக்கு பிடிக்குது, ஆனா அம்மா கூடாதுன்னு சொல்றாங்க, பாட்டி தான் தருவாங்க என்ற எண்ணம் தானா பிள்ளையிடம் இருந்து காணாம போகும். எல்லாம் சரியா வரும்.

ஆறுதல் சொல்லாம அட்வைஸ் பண்றேன்னு நினைக்காதீங்க... உங்க பயம் தேவை இல்லாததுன்னு நீங்க முதலில் புரிஞ்சுக்கணும்... அதுக்காக தான் சொல்றேன். சரியா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழி பிரச்சினையை உங்கள் இடத்தில் இருந்து மட்டுமே நீங்கள் யோசித்தால் உங்கள் பக்க நியாயம் மட்டுமே தெரியும். ஒரு மூன்றாம் மனிதராக இருந்து இந்த பிரச்சினையை அணுகுங்கள். எளிதில் தீர்வு கிடைகும். தனிகுடித்தனம் செல்வது, மாமியாரிடம் சண்டை போடுவது எல்லாமே தற்காலிக தீர்வுகள் மட்டுமே. பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு இல்லை.

உங்களுக்கு ஒரு சகோதரன் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரது மனைவியிடமும் குழந்தையிடமும் உங்கள் அம்மா இப்போது உங்கள் மாமியார் நடப்பதைப் போல் நடந்து கொண்டால் உங்கள் அண்ணியும் சகோதரனும் என்ன செய்ய வேண்டும் என்று நீங்க எதிர் பார்ப்பீங்க அல்லது நினைப்பீங்க அப்படீங்கறதை யோசிங்க. உங்கள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.

எப்போதும் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே பிரச்சினை வரும் போது நம் மாமியார் இடத்தில் நம் அம்மாவையும் நம் இடத்தில் நம் சகோதரன் மனைவியையும் வைத்து பிரச்சினையை யோசித்துப் பாருங்கள். தீர்வு எளிதில் கிடைக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி நித்யா,பதில் கொடுத்தற்கு,நானும் நல்லவள் என்று பெயர் எடுத்தவள் இன்று கெட்டவள் ஆகிவிட்டேன்.உங்களை நினைத்தாளும் பாவமாக உள்ளது.கடவுள் விட்ட வழி என்று தான் வாழ்க்கையை ஓட்டவேண்டும் போல.உங்களுக்கு அறிவுரை சொல்ல என்க்கு வயதில்லைபா.உங்களுக்காக கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

நன்றி pangaj & vani.பொஸஸிவ்னஸ் தான் வனி,ஆனால் 2வயது குழந்தை அம்மா வேண்டாம் என்று சொல்லும் போது மனசு வலிக்குதே. நான் adjust பன்னிக்கொண்டுதான் இருக்கிறேன் தோழி,அவளுக்கு பெயர் வைத்ததில் இருந்து எங்காவது சென்றால் உடை உடுத்துவது வரை என் குழந்தைக்கு அவர் choice தான்.இன்னைக்கு இந்த dress போட்டுவிடுனு சொல்லுவார்.வேறு போட்டால் நம்ம பேச்சே யாருகேக்குரா என்பார்.
எதாவது குழந்தைக்கு கொடுத்தா எதிர்காதீங்க... சரி இனி எதிர்காமல் இருக்கிறேன் தோழி.

மேலும் சில பதிவுகள்