ஆறுதல் சொல்லுங்கள் தோழிகளே!

அருசுவை தோழிகளுக்கு வணக்கம்,
நான் 1வருடமாக அருசுவை தளம் பார்கிறேன்.என் மனக்குமுறலை யாருடம் சொல்லுவதுனு தெரியாமல் இங்கு கொட்டுகிறேன்.எனக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகிரது.2/12 வயதில் குழந்தை இருக்கிறது. என் மாமியாருக்கு என்னை பிடிக்காது.அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுபடியே நான் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்.ஆரப்ப காலத்தில் கோபத்தில் பேசி என்னை காயப்படுத்தியூள்ளார்.அந்த வார்த்தைகளை எப்போது நினைத்தாளும் அழுகை வருகிறது.நான் ரொம்ப காயப்பட்டு இருக்கிறேன்.குழந்தை இல்லாத நாட்களில் பல பேச்சுக்கள் வாங்கியுள்ளேன்.ஒரு விசயம்கூட என் அம்மா வீட்டிற்க்கு தெரியாது.என் கணவர்ரிடம் சொன்னால் எனக்காக கொச்சம் நாள் பொருத்துக.தனியாக போய்விடலாம் என்கிறார்.இப்போது பிரச்சனை என்ன வென்றால் என் குழந்தை பாட்டி பாட்டி என்று அவர்களிடமே போகிறது.சில சமயங்களீல் அம்மா வேண்டாம் என்ருகூட சொல்கிறாள்.நான் இதை டய்ப் செய்யும் போது கூட அழுது கொண்டு தான் செய்கிறேன்.நான் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதே இல்லை.அன்பாக தான் இருக்கிறேன். ரொம்ப அடம் பிடிக்கிறாள்.யாரிடம் காரியம் நடக்கும் ஏன்று தெரிந்துக்கொண்டு அவர்களீடம் ஒட்டிக்கொண்டாள்.
உதாரணத்திற்க்கு மாமியார் அவளுக்கு காப்பி கொடுப்பார்கள்.அது எனக்கு பிடிக்காது.கொடுக்காதீங்கள் என்று சொன்னால் கேட்கமாட்டார்கள்.icecream தினமும் கொடுத்தார்கள் என் கணவர் சொல்லி இப்போது கொடுப்பதில்லை.வேக வைக்காமல் maggi கொடுக்கிறார்கள்.)
இப்படி பல பல.
அவள் அடம் பிடித்தாள் மாமியார் கோபம் என்னிடம் திரும்புகிறாது. ரொம்ப கஷ்டமாக உள்ளது.மாமியாராக உள்ளவர்கள் என்னை தவறாக நினைக்கவேண்டாம்.என் கவலையை கொட்டிவிட்டேன்.தவறாக இருந்தால் மன்னிக்கவும்.என் மனக்கவலைக்கு என்ன செய்வது.ஆறுதல் சொல்லுங்கள் தோழிகளே!

நன்றி கவி மேடம் உங்கள் பதிலுக்கு,என் அம்மாவாக இருந்தால் maggi கொடுக்காதீர்கள் என்று சொல்லிவிடலாம் ஏன் திட்டிகூட விடலாம் அம்மா கோபித்துக்கொள்ள மாட்டார்கள்.
அவர்களையும் அம்மா ஸ்தானத்தில் வைத்துதான் இது வரை நடந்துக்கொண்டு இருக்கிறேன்.

கலை நான் சொல்ல வந்ததை தவறாக புரிஞ்சுகிட்டீங்கன்னு நினைக்கிறேன். நம் அம்மாவிடம் எதையும் உரிமையோடு சொல்லி விடலாம். கோபித்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அதே நம்முடைய அம்மா இன்னொரு பெண்ணுக்கு அதாவது நம் சகோதரனுடைய மனைவிக்கு மாமியாராக இருப்பார்கள்தானே. ஒருவேளை உங்கள் மாமியாரைப் போல் உங்கள் அம்மா உங்கள் அண்ணியிடமும் குழந்தையிடமும் நடந்து கொண்டால் நீங்கள் உங்கள் அண்ணியும் அண்ணனும் என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள் என்ன்றுதான் யோசிக்க சொல்லியிருந்தேன். உங்கள் அம்மாவின் மகளாக இருந்து யோசிக்கும் போது அண்ணிதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போகலாமே என்றுதான் நாம் பெரும்பாலும் நினைப்போம். இதே நம் மாமியார் என்று வரும் போது ஏன் மாமியார் இப்படி இருக்காங்கன்னு தோணுது இல்லையா?

பெரும்பாலான மாமியார்கள் தன் மகள் அவள் மாமியாரிடம் நியாயமான விஷயங்களை எடுத்துச் சொல்வது சரி என்று ஏற்றுக் கொள்வார்கள். அதையே தன் மருமகள் தன்னிடம் செய்யும் போது பிடிக்காமல் போகிறது. இதே போலத்தான் பெரும்பாலான மருமகள்களும். தன் அண்ணி தன் அம்மாவிடம் எப்படி நடந்து கொள்ளணும்னு நாம் எதிர் பார்க்கிறோமோ அதே போல் தான் தன் மாமியாரிடம் நடந்துகொள்ள முடிவதில்லை.

எல்லாம் சரியாகும். கவலைப் படாதீங்க. குழந்தைகள் அவங்களுக்கு பிடிச்சதை கொடுப்பவர்களிடம் கொஞ்சம் அதிகமாக ஒட்டுவது போல் தோன்றும். ஆனால் ஒரு நாள் அவளை பாட்டியிடம் விட்டு விட்டு சென்று பாருங்கள் அம்மா வேணும் என்று அழுவார்கள். அதனால் குழந்தைக்கு உங்கள் மீதான பாசம் எங்கேயும் போகாது.

குழந்தைக்கு இந்த ட்ரெஸ் போடணும்னு சொல்றாங்களா. முக மலர்ச்சியோடு சரிங்க அத்தை அப்படீன்னு போட்டு விடுங்க. முகத்தில் ஏமாற்றத்தை காண்பிக்காதீங்க. இரண்டு மூன்று நாட்கள் அவங்க சொன்ன படியே போட்டதும் நான்காவது நாள் நீங்க முந்திக்கோங்க. அத்தை இன்னிக்கு இந்த ட்ரெஸ் போட்டு விடலாமா அப்படீன்னு கேளுங்க. பெரும்பாலும் ஒத்துக்க மாட்டாங்க. மனம் தளராதீங்க முக மலர்ச்சியோடு அவங்க சொல்றதைப் போட்டு விடுங்க. ஒரு தாயா இது உங்களுக்கு கஷ்டம்தான். இல்லைன்னு சொல்லவில்லை. ஒரு வாரம் போனதும் நீங்க மீண்டும் கேட்டுப் பாருங்க. நிச்சயம் சம்மதிப்பாங்க.

சில உறவுகளில் பொறுமையும் புத்திசாலித்தனமும் மட்டுமேதான் கை கொடுக்கும் தோழி. மருமகள் வந்ததும் தனக்கான இடம் போய்விடுமோ என்ற பயம்தான் மொத்த பிரச்சினைகளுக்கும் காரணம். அந்த பயத்தை நாம போக்கிட்டோம்னா அவங்களாகவே மொத்தப் பொறுப்பையும் நம் கையில் கொடுத்துடுவாங்க.

அது வரைக்கும் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அவர்கள் கருத்தை நாமே வலிய சென்று கேட்க ஆரம்பித்து விட்டோம் என்றால் அவர்களுடைய தனக்கான இடம் போய் விடுமோ என்ற பயம் அகன்று விடும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நீங்க ரொம்ப ரொம்ப சரியா சொன்னீங்க கவி நானும் இதையே தான் உங்கலிடம் சொல்ல ஆசைபடுரேன் கலை.கொன்ஞம் நாலைக்கு உங்க மாமியார் சொன்னதர்கெல்லாம் உடனே உடனே சரிங்க அத்தை சரிங்க அத்தை என்று சொல்லிபாருங்க அப்புரம் உங்கலை தேவை இல்லாமல் திட்ட உங்க மாமியருக்கே ச்சீ என்று வந்திடும் .இயற்கையிலேயே உங்கலுக்கு நல்ல பொருமையான குனம் இருப்பது நால இப்புடி நடந்துகொல்வதில் உங்கலுக்கு அவ்லொ சிரமம் இருக்காது உங்க கனவரும் உங்க குழந்தையும் உங்கலை புரிந்து கொல்வார்கல் நம் மனைவி நல்லவல் என்று உங்கல் கனவரும் நம் அம்மா நல்லவங்க என்று உங்க குலந்தையும் தெரிந்துகொல்வார்கல் பின் உங்கல் கனவரே உங்கலுக்கு நிம்மதியை தேடிதருவார் ஏன் உங்க மாமியாரே உங்கலுக்கு சந்தோசத்தை தருவார்.உங்க மகளுக்கு 21/2 வயது தானே ஆஹுது அம்மா நம்ம நல்லதுக்கு தானே சொல்லுராங்கன்டு புரிஞிக்க தெரியலை.என் செல்லம் என்னட்ட வா உனக்கு என்ன வேனும் உனக்காக அம்மா எது வேனும்னாலும் செய்வேன் நீ எது கேட்டாலும் தருவேன் அம்மாக்கு நீ தான் உயிர் அப்புடின்னு உங்க மகள்ட்ட சொல்லி பாருங அப்புரம் தெரியும் உங்க magal உங்கல்ட்ட காட்டும் பாசம் சொல்வதோடு இல்லமல் செயல்லயும் காடுங்க.இனி உங்கல் வாழ்க்கை சந்தோசமாக அமைய என் வாழ்துக்கள்.advice pannurathu romba easy thaan enacku therium neenga tharkalikama santhosappadanumndu naa ninaikalai nirantharama santhosappadanum athukku thaan enakku maamiyaar illai

i love my husband

நன்றி கவி & shafeeka,நீங்கள் சொல்வது எனக்கு புரியுது.என் குழந்தைக்கு பெயர் வைப்பதில் இருந்து இன்று வரை என் விருப்பதைவிட அவர்கள் விருப்பதிற்க்கு தான் முக்கியதுவம் தருகிறேன்.என் மாமியார் அவர்களுக்கு ஒரு பெண் இருந்தால் அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கும் பொது மகள் ஆசைபடியே பெயர் வைக்கட்டும் என்று விடுவார்கள் தானே.ஆனால் மருமகள் என்று வரும் பொது ஆசைக்கு தடைபோடுகிறார்களே!நான் எல்லோரையும் சொல்லவில்லை ஆனால் இந்திய சமுதாயதில் 90% மாமியார்கள் அப்படிதான் இருக்கிறார்கள்.ஆனால் என் அம்மாவிற்க்கு ஒரு மருமகள் இருந்தால் இப்படி செய்யவேமாட்டார்கள்.அதான் பாவம் அவங்களுக்கு மகனே இல்லை போல.மருமகள் ஆசைக்கு மட்டும் இல்லை என் அம்மா யாருடைய ஆசைக்கும் தடையாக இருக்கமட்டார்கள்.ஏதோ மனதில் உள்ளதை கொட்டிவிட்டேன்பா சாரி..

Unga manakastam enaku nallaa puriyudhu... Yen na konja naal munna en nilayum unga nilaiyum onnu thaan. naanga love cum arranged marriage enabadhal, en hus adikadi solvadhu onnu thaan. namakku naama nallavanga thaan aana pidikala nu vandhitta adhu yara irundhalum kannukku kettavangalathaan therivanga. so ippodhaiku enga amma ku unnai pidikala. but...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Nee avangakitta nalla padi nadandhu avanga anba epdiyavadhu peranum. So avanga enna sonnalum sari avangala edhirthu pesadha. Avangala konjam adjust panniko nu solvar. avar sonna madhiri adjust panni ellaathukkum aamaa samy pottu ippo enakum avangalukkum set aagi vittadhu. so ungalukku pidikalanalum konjam vittu pidinga kalai... ellam sariyayidum...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

உறவுகள் தான் வாழ்க்கையை அழகுப் படுத்துகின்றன. அதிலும் நம்முடைய கலாச்சாரத்தில் கூட்டுக் குடும்பம் என்பது நம்முடைய முன்னோர்களால் ஏற்ப்படுத்தப் பட்ட ஒரு வழக்கம் என்றே சொல்லலாம்.அந்த குடும்ப அமைப்பை திறமையாகவும் புத்திசாலித்தனமாகவும் ஏற்றும்,வாழ்ந்தும் இருந்திருக்கிறார்கள்.அதற்க்காக அவற்களுக்குள் எந்த பிற்ச்சனைகளும் இருந்திருக்காது என்றில்லை, வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டு தான் இருந்திருக்க வேண்டும்.

நமது பெற்றோர்கள் அவர்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைப்பதில் தொடங்கி ,உடை உடுத்துவது வரையிலான எல்லாவற்றையும் அவர்களே செய்திருக்க மருமகளை அவள் குழந்தைக்கு உரிய வற்றை செய்யாமல் தடுப்பது தவறில்லையா?

மருமகளை வார்த்தைகளால் புண் படுத்துவதும் ,குழந்தை பிறக்க தாமதமானால் குத்திக் காண்பிப்பதும் நமது கலாச்சாரத்தில் மட்டும் காலங்காலமாக தொடர்ந்து கொண்டே உள்ளது.இதுவும் கலாச்சார சீர்கேடு இல்லையா?????

மேலை நாடுகளின் கலாச்சார சீர்கேடுகள் நம் நாட்டிற்க்குள் கலப்பதை அவமதிக்கிறோமே , நம் நாட்டுக்குள் இருக்கும் இப்படிப் பட்டவைகளை ஏன் யாரும் பார்ப்பதில்லை. இன்னும் எத்தனை காலத்திற்க்குத்தான் பிற நாட்டினர் நம் கலாச்சாரத்தில் உள்ள சீர்கேடுகளைப் பார்த்து சிறிப்பது?????

வீட்டுக்குளேப் பெண்களைப் பூட்டி வைத்த காலம் மாறி,விமானம் ஓட்டவும் வந்தாச்சு,பின்னும் ஏன் இந்த தயக்கம் பெண்களே, உங்கள் நல்ல குண்த்தைப் புரிந்து கொள்ளாத அத்தைகளோடு இன்னும் என்ன வேலை? உங்கள் பெயர் தானே கெட்டுப் போகிறது.

கூட்டு குடும்ப அமைப்பிற்க்கு நான் எதிரியும் அல்ல,அதை தவறு என்று வாதிடுபவளும் இல்லை, நமக்கு ஒவ்வாத எத்தனையொ விஷயங்களை நம் வசதிப்படி மாற்றிக் கொள்ளும் நாம் ஏன் இதையும் மாற்றக் கூடாது?

அறியாமல் தவறு செய்பவர்கள் திருந்தி விடுவார்கள்,ஆனால் தெரிந்தே செய்பவர்களும், இப்படித்தான் இருப்பேன்,ஏனென்றால் நான் மாமியார் என்றிருப்பவர்களையும் எப்படி சமாளிப்பது?? இதிலே நம் பாதி வாழ்க்கையும் கடந்து விடுமே.

என் தோழி ஒருவள் கர்ப்பமாக இருக்கிறாள்,அவள் மாமியார் பெண் குழந்தை பிறந்தால் இந்த பெயரை வைக்க வேண்டும் என்று ஒரு பழைய நாகரிகம் இல்லாத பெயரை சொல்லியிருக்கிறர்கள்,அவளுக்கோ அந்தப் பெயரில் விருப்பம் இல்லை.ஆனாலும் மாமியாரிடம் சொல்லவும் முடியாமல்,தவிக்கிறாள்,கர்ப்பக் காலத்தில் இந்த தவிப்பு கஷ்டமானதில்லையா?? ஒரு குழந்தையை சுமக்கும் போதே ஒரு தாய் அதைப் பற்றிய கனவுகளையும் சுமப்பது தவறா????பிறந்த பின்பு முதியவர்கள் பேறக் குழந்தைகள் பேரில் தங்கள் விருப்பங்களை மட்டும் திணிப்பது நியாயமானதா???

சிந்தியுங்கள் தோழிகளே !!!!!!!!

நன்றி நித்யா,பதில் போட முடியவில்லை.இப்படியே அட்ஜஸ்ட் பண்ணியே வாழ்க்கை முடிந்துவிடுமோனு பயமா இருக்குபா.

vani selwyn ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்கள்.நன்றி தோழி!

தோழி உங்க மாமியாரை திருத்த முடியுமா பாருங்க ஒருவேளை அவங்க நல்லவங்கலா இருந்தால் திருந்தலாம்,சில பேர் மருமகள் அப்பாவியாக இருந்தால் ஆட்டி படைத்து விடுவாற்கள். இந்த உலகத்தில் குணிய குணிய குட்டுகிற மாமியார்கள் தான் அதிகம். நம் மாமியார் நம் மாமனார் என்று நம் குடும்பம் என்று பொருமையாய் போனாலும் அதை நள்ள கன்னோட்டத்தோட பாக்குர மாமியார்களை விரல் விட்டு என்னிரலாம் சறியான ஏமாழி மருமகள் வந்து மாட்டிருக்கள் இவள் தலையில் நள்ளா மிலகாய் அரைக்கலாம் என்று நினைக்கிற மாமியார்கள் தான் அதிகம் நான் பொதுவாக சொண்னேன்,இவ்வாறெல்லாம் இருக்கும் போது உங்கள் மாமியார் எப்படி பட்டவர் என்று உங்கலுக்குத்தான் தெரியும். அன்பான மாமியார் என்றால் அவர்களின் பாசத்துக்கு அடிமை ஆவோம் அதில் தவரில்லை ஆனால் எல்லாம் தெரிஞ்சிருந்தும் நான் அப்படித்தான் மாமியார் பவரை காமிப்பேன் என்று சொல்ரவங்க கிட்ட அடங்கி போக வேன்டுமென்ரு எனக்கு தோனல.வேனுன்னே மருமகள கொடுமை படுத்துரவங்கல திருத்த முடியாது இவங்கள திருத்துரதுக்குள்ள கணவன் மனைவிக்கு நடுவே இருக்குற குட்டி குட்டி சந்தோஷங்கலையும் நிம்மதிகளையும் இலக்க வேன்டியதுதான்.என்ன பொருத்தவரை இந்த சந்தோஷத்த மாமியாருக்காகவோ இல்ல அம்மாவுக்ககவோ யாருக்காகவும் விட்டு கொடுக்க கூடாது.மாமியார் கூட கோவிச்சிட்டு தணிகுடித்தனம் போக வேன்டாம் ஆனால் நமக்கென்ரு ஒரு வாழ்க்கை இருக்கிறது. கணவன் மனைவிக்கு ஒருவறை ஒருவற் புரிந்து கொல்லவாது தணிகுடித்தனம் போகனும் இதேல்லாம் மாமியார் கூட இருக்குற வரை நடக்காது.இது என்னோட பொதுவான கருத்துக்கள்,

மேலும் சில பதிவுகள்