"பட்டிமன்றம் - 70 : ***சுயமாய் சிந்திப்பது யார்? குரங்கா? மனிதனா?***"

தோழிகளே,
வாங்கோ வாங்கோ......இந்தவார பட்டியைத் துவங்கிட்டோம்ல,இவ்வாரத்திற்கான தலைப்பு.....நம்ம ஜெயா கொடுத்ததுதானுங்கோ.....வாங்க வந்து நம்ம கவுண்டமணி,செந்தில் மாதிரி சொந்தமாவோ,கடன்வாங்கியோ சிந்திச்சு பார்த்திபன் வடிவேலு மாதிரி குண்டக்க மண்டக்கவோ,நேராவோ வாதங்களைக் கொடுத்து நடுவரை சிந்திக்க வையுங்க கண்ணுங்களா......
தலைப்பு இதோ,
"பட்டிமன்றம் - 70 : ***சுயமாய் சிந்திப்பது யார்? குரங்கா? மனிதனா?***" என்ன ரெடியா சீக்கிரம் அணியை தேர்வு செய்து சொல்லுங்க. சிற(ரி)ப்பு வாதங்களுடன் வாங்க.

தோழிகளின் விருப்பிற்கிணங்க சிரிப்பு தலைப்பா இருக்கும்னு நினைக்கிறேன்.தலைப்பைக் சிந்தித்து கொடுத்த தோழி ஜெயாவிற்கு சுக்ரியா.........
பி.கு:(வனி மன்னிக்கவும் இத்தலைப்பை நீங்க ரொம்பநாளா எடுப்பீங்கன்னு நினைத்தேன் நீங்க எடுக்கலை,இப்போ நான் எடுத்துட்டேன் கோபிக்காம வாங்க வாதாட.:))

மற்ற பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம். வாங்க... வாங்க... வந்து ஆரம்பிங்க உங்க வாதங்களை :)

ஆரம்பம் ஆரம்பம் பட்டி இனிதே ஆரம்பம்..........வந்து வாதங்களை தட்டுங்க.அதுக்கு முன் அணியை சொல்லுங்க.......
முதல்ல வரவுங்களுக்கு கருங்குரங்கு ரத்தம் 2டம்ளரும்,அடுத்து வரவுங்களுக்கு பெரும்பாறை வேர் ஜூஸ் 1லம்ளரும் கிடைக்கும்.(கவுண்டமணி ஸ்டைலில்)........கெட்... ரெடி... ஜீட்.........

நடுவருக்கும் தலைப்பை கொடுத்த ஜெயா வுக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

வொய் திஸ் கொல வெறி நடுவரே?! பாருங்க இதைக் கூட நான் சுயமாய் சிந்திக்காமல் தனுஷ் கிட்ட இருந்து இரவல் வாங்கி சொல்றேன். இப்போ புரிஞ்சிருக்குமே நான் எந்த அணின்னு. என்னது புரிஞ்சுக்க முடியலியா அப்போ நீங்க மனித இனம்தான் ஒத்துக்கறேன் :). சுயமாக சிந்திக்கத் தெரிந்தது குரங்கு தான் நடுவரே!
இருங்க விரிவான வாதங்களுக்கு இணையத்தில் தேடி பாய்ன்ட்ஸ் எடுத்துட்டு அப்பாலிக்கா வரேன். ஏன்னா மனுஷங்களுக்குத்தான் சுயமாக எதுவும் தெரியாதே :). நானும் மனுஷ இனமாச்சே அதான் ஹி ஹி. வர்ட்டா நடுவரே :)
நடுவரே குரங்கு ரத்தம் எங்கே? சீக்கிரம் வாங்க நிறைய பேருக்கு காங்கோ ஜூஸ் தயாரிக்க வேண்டியிருக்கு :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வணக்கம் நடுவரே..
இந்த கேள்விக்கு அவசியமே இல்லை... மனிதர்கள் அறிவை வளர்த்துக் கொள்ள எத்தனை பள்ளிகள், எத்தனை கல்லூரிகள்? எங்கேயாவது நம்முடைய மாண்புமிகு குரங்குகளுக்கு பள்ளியோ கல்லூரியோ இருக்கிறதா?
இப்படி யாரும் சொல்லி தந்து கற்காமால் தானே அனைத்தையும் கற்று அறிந்துக் கொள்ளும் குரங்குகளே சுயமாக சிந்திக்க கூடிய தன்மை பெற்றவை.

ஒரு உயிரியல் பூங்காவிற்கோ , காடுகள் அடர்ந்த பகுதியில் இருக்கும் வழிபாட்டு தளத்திற்கோ சென்றால், நம்முடைய இந்த குரங்குகள் ஆறு அறிவு படைத்ததாக சொல்லி கொள்ளும் மனிதர்களை விளையாட்டு பொம்மைகளாய் படுத்தும் பாட்டை காணலாம்...

இவ்வளவு ஏன் குரங்குகள் வீரத்தோடு மனிதர்களை நேருக்கு நேர் மோதி தான் விளையாடும்... மனிதர்களை போல் அவற்றை ஒரு கூண்டுக்குள் அடைத்து விட்டு வீரத்தை காட்டுவது இல்லை...

எப்படி பார்த்தாலும் சிந்திக்கும் திறனில் மட்டும் இல்லை எல்லா பண்புகளிலும் சிறந்தது குரங்குகள் தான்!!!

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நடுவரே... வாழ்த்துக்கள். பல நாளா கண்ணு வெச்ச தலைப்பு... :) தேர்வு செய்தமைக்கு நன்றிகள் பல. இதில் கோவிக்கலாம் ஒன்னுமில்லை. நான் அண்டுவராய் இருப்பதை விட வாதிப்பதே நல்லா இருக்கும். ஹிஹிஹீ. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் ஜெய்.

நடுவரே... குரங்கு சுயமா சிந்திச்சதால் தான் மனிதனே உருவானான் ;) அதனால் சுயமாக சிந்திப்பது குரங்கு தான். :) ஹிஹிஹீ.

நாம எல்லாம் சிறூ வயதில் இருந்து பலர் சொல்லி கொடுத்தே எல்லாத்தையும் கத்துக்குறோம். ஆனா குரங்குக்கு யார் சொல்லி கொடுக்கறாங்க... அது எல்லாத்தையும் தானா தானே கத்துக்குது... அதனால் அதுக்கு நம்மை விட அறிவு ஜாஸ்தி தான். ;)

ஒரே ஒரு உதாரணம் சொல்லி துவங்குவோமா??!! நான் சிறு வயதில் பாபனாசம் பக்கம் ஒரு ஊரில் இருந்தேன். குரங்குக்கு பஞ்சமே இல்லை. சிறு பிள்ளைகள் கையில் இருந்து ஃபீடிங் பாட்டில் வாங்கி அவர்களை போலவே குடிப்பது, தேங்காயை (இளநீரை) பரித்து உரித்து எடுத்து உள்ளே உள்ள நிரை குடிப்பது, பள்ளி செல்லும் பிள்ளைகளை வழி மறித்து டிஃபன் பாக்ஸ் பிடுங்குவது, ஓடுகளை பிரித்து வீட்டில் நுழைந்து ஆட்டையை போடுவது என எல்லா வேலையும் செய்வாங்க. மாட்டிக்கிட்டு முழுச்சோம்.

ஒரு முறை எங்க வீட்டுக்குள் ஓட்டை பிரித்து குதித்தவர்கள் மளிகை பொருட்களில் பூந்து விளையாடினாங்க... சத்தம் கேட்டு அம்மா கதவை திறந்தா பொட்டுக்கடலை டப்பாவை திறந்து கொண்டிருந்தார். அம்மா ஓடுகளை குச்சியை எடுத்து ரூம் உள்ளே விட்டாங்க... அவர் என்ன பண்ணார் தெரியுமா?? ஒரு கையில் டப்பாவை பிடித்து கொண்டு, இன்னொரு கையில் குச்சியை பிடித்து கொண்டெ அம்மா அடித்து விடாமல் ரூமை விட்டு வெளியே வந்து எட்டாத தூரம் போய் கம்பை விட்டு விட்டு ஓடினார்... டப்பாவோடு ;) இதெல்லாம் யார் கற்று தந்தார்?? எத்தனை சாமர்த்தியம்? இன்றும் அம்மா இதை நினைத்து சிரிப்பார்.. எவ்வளவு சாமர்த்தியம் அந்த குரங்குக்கு என்று.

இது சீட் போட தான்... வரேன்... நாளை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே இப்பலாம் மனுஷங்களுக்கு எதையுமே சுயமா சிந்திக்க தெரிய மாட்டேங்குது. எல்லாத்துக்கும் கம்ப்யூட்டரும் ஸ்மார்ட் ஃபோனும் தேவைப்படுது. மனிதர்களில் பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட்டா இல்லாததால்தான் ஒன்னு ரெண்டு ஸ்மார்ட்டா இருக்கறவங்க ஸ்மார்ட் ஃபோனைக் கண்டுபிடிச்சு இதையாவது பயன்படுத்தி பிழைச்சுக்கோடா மனுஷா ன்னு கொடுத்திருக்காங்க. இப்பல்லாம் ரெண்டையும் ரெண்டையும் கூட்டுவதற்கே கால்குலேட்டரைத் தேடுது மனித இனம். இதில் எங்கிட்டு இருந்து சுயமாக சிந்திக்க????!!!!

குரங்குகளைப் பாருங்க... தாய்ப் பாசத்தையே மனித இனம் குரங்குகளைப் பார்த்துதான் கத்துக்கிட வேண்டியிருக்கு. எத்தனை மரத்துக்கு மரம் தாவி ஓடியாடி வேலை செய்து உணவு சேகரித்தாலும் தன் குட்டியை என்ன டே கேர் சென்டரிலா விட்டுட்டுப் போகுதுங்க. தன் உடலோடு இறுக கட்டிக் கொண்டு சுமந்து கொண்டே அல்லவா திரிகிறது. குட்டிக்கு தன் பாசமும் அருகாமையும் பாதுகாப்பு உணர்வும் தேவைன்னு எவ்வளவு சுயமா சிந்திச்சு செயல் படுது பாருங்க. இப்போ சொல்லுங்க மனுஷங்க நாம சுயமா சரியா சிந்திக்கறோமா குரங்குகள் சிந்திக்கின்றனவா என்று.

அட அதுங்களோட குடும்ப பிணைப்பை பார்த்திருக்கீங்களா? என்னது இல்லயா? என்ன நடுவரே நீங்க குரங்குகள் ரயில் பெட்டி கணக்கா வரிசையா உட்கார்ந்து பேன் எடுப்பதைப் பார்த்ததில்லையா நீங்க? எல்லாம் அண்ணன் தம்பி மாமன் மச்சான் அப்பா அம்மா பிள்ளை குட்டிங்கதான். குடும்ப நேரம் குடும்ப பிணைப்பு தேவைன்னு எவ்வளவு சுயமா சிந்திச்சு செயல் படுதுங்க. ஆனா மனித இனம்??? குடும்ப பிணைப்பு தேவை அதுக்காக சாப்பிடும் போதாவது ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு அதை குடும்பத்திற்கான நேரமா செலவிடுங்கன்னு சுயமா சிந்திக்கத் தெரியாத மனுஷனுக்கு சொல்லிக் கொடுத்தால் கூட கேட்க மாட்டேங்கறாங்க. என்னவோ இவங்க இல்லேன்னா உலகம் சுற்றுவதே நின்று விடும் என்பது போல சாப்பிடக் கூட நேரம் இல்லாம காலில் சகரம் கட்டிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்காங்க. இவங்களையா சுயமா சிந்திக்கத் தெரிஞ்சவங்கன்னு சொல்றீங்க?

இன்னும் எதிரணியைக் காணோமே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அடடா ஆரம்பமாயிடுச்சா.....(சேட்டைகள்)
வந்தவர்களுக்கு நடுவர் சொன்னதுபோல பானகம் பார்சல் வந்துகொண்டே இருக்கு பட்டி முடியறதுக்குள்ள வந்திடும்(தாகம் தீர்க்க)

முதல் வருகை முத்தாக அணித்தேர்வுபண்ணிட்டீங்க.
பிரஸ் வாதங்களுடன் வாங்க.

சொல்லிக்கொடுக்காமல் கற்றுக்கொள்ளும் குரங்குகளே சுயமாய் சிந்திப்பவைன்னு சொல்லி கவிசிவாவோடு கைகோர்த்தாச்சா.....வருக இன்னும் பல வாதங்களோடு.....

நீங்களும் குரங்கு அணியா?இப்படி வரவுக எல்லாம் குரங்குபக்கம் தாவினா,மனிதன் பக்கம் யார் இருப்பா.....?
உங்களுக்கு பிரசன்ட் போட்டாச்சு. அடுத்து வாதங்களுடன் வாங்க.....

இன்றைய வாதம் கொஞ்சம் சூடுபிடிச்சிடுச்சே........பதில் கொடுக்க எதிரணிக்கு யாராவது வாங்கப்பா.....

///குரங்குகளைப் பாருங்க... தாய்ப் பாசத்தையே மனித இனம் குரங்குகளைப் பார்த்துதான் கத்துக்கிட வேண்டியிருக்கு. எத்தனை மரத்துக்கு மரம் தாவி ஓடியாடி வேலை செய்து உணவு சேகரித்தாலும் தன் குட்டியை என்ன டே கேர் சென்டரிலா விட்டுட்டுப் போகுதுங்க. தன் உடலோடு இறுக கட்டிக் கொண்டு சுமந்து கொண்டே அல்லவா திரிகிறது. குட்டிக்கு தன் பாசமும் அருகாமையும் பாதுகாப்பு உணர்வும் தேவைன்னு எவ்வளவு சுயமா சிந்திச்சு செயல் படுது பாருங்க. இப்போ சொல்லுங்க மனுஷங்க நாம சுயமா சரியா சிந்திக்கறோமா குரங்குகள் சிந்திக்கின்றனவா என்று.///

கரெக்ட் கரெக்ட் நாமெல்லாம் அதுகலப் பார்த்து கத்துக்கனும் நிறைய.எம்புட்டு தாய்ப்பாசம் அதுவல்லவோ தாய்....

///அட அதுங்களோட குடும்ப பிணைப்பை பார்த்திருக்கீங்களா? என்னது இல்லயா? என்ன நடுவரே நீங்க குரங்குகள் ரயில் பெட்டி கணக்கா வரிசையா உட்கார்ந்து பேன் எடுப்பதைப் பார்த்ததில்லையா நீங்க? எல்லாம் அண்ணன் தம்பி மாமன் மச்சான் அப்பா அம்மா பிள்ளை குட்டிங்கதான். குடும்ப நேரம் குடும்ப பிணைப்பு தேவைன்னு எவ்வளவு சுயமா சிந்திச்சு செயல் படுதுங்க. ஆனா மனித இனம்??? குடும்ப பிணைப்பு தேவை அதுக்காக சாப்பிடும் போதாவது ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு அதை குடும்பத்திற்கான நேரமா செலவிடுங்கன்னு சுயமா சிந்திக்கத் தெரியாத மனுஷனுக்கு சொல்லிக் கொடுத்தால் கூட கேட்க மாட்டேங்கறாங்க. ///

அதுகல்லாம் ஒரே கூட்டு குடும்பமா வாழுதா..........ஆச்சரியமா இருக்கே,குடுமிப்பிடி சண்டை போடும் மனிதன் நடுவில்,குடுமியை சுத்தமாக்கும் குரங்குகள்.......

நம்ம பயபுள்ள சிக்னல்ல தம்பிய பார்த்தாகூட லைசென்ஸ் இல்லாம வண்டி ஓட்டுறவ போலீச பார்த்தா ஒளிவானே அப்படி ஒளியறான்பா......

மேலும் சில பதிவுகள்