பாட் டிசைனிங் - 2

தேதி: July 23, 2012

4
Average: 3.4 (13 votes)

 

மண் பானை
க்ளாஸ் கலர்
ப்ரஷ்
பெவிக்கால்
கோல்டுநிற டஸ்ட் - 3 பாக்கெட்
அக்ரிலிக் கலர் ஃபேர்ல் கோல்டு
வெள்ளைநிற ஸ்டோன்
கோல்டுநிற கிலிட்டர்ஸ்

 

தேவையான அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைக்கவும்.
பானை முழுவதும் கோல்டுநிற பெயிண்ட் செய்து காய விடவும்.
காய்ந்ததும் அதன் மேல் பெவிக்கால் தடவி கோல்டுநிற டஸ்ட்டை அதன் மீது பரவலாக தூவி விடவும்.
பின்னர் ப்ரஷ் கொண்டு இடைவெளி இல்லாமல் எல்லா இடங்களிலும் சீராக தடவி விடவும்.
கோல்டுடஸ்ட் பானையுடன் ஒட்டி காய்ந்ததும் அதன் மேல் கோல்டுநிற கிலிட்டர்ஸால் விரும்பிய பூ டிசைனை வரைந்து அதன் உள்ளே விருப்பமான க்ளாஸ் கலரை கொடுத்து காய விடவும்.
பூவின் நடுவில் கிலிட்டர்ஸ் காய்வதற்கு முன்னே வெள்ளைநிற ஸ்டோன் ஒட்டி விடவும். ஒரு பூ வரைந்து கலர் கொடுத்து காய்ந்த பின்னரே மற்றொரு பூ வரைய வேண்டும். இதுப்போல் பானையை சுற்றி சிறிது இடைவெளிவிட்டு பூக்களை வரைந்துக் கொள்ளவும்.
ஒவ்வொரு பூக்களுக்கும் இடையில் இலைகள் வரைந்து பச்சைநிற க்ளாஸ் கலர் கொடுக்கவும். பானையின் வாய்ப்பகுதியை சுற்றிலும் கோல்டுநிற கிலிட்டர்ஸால் அவுட்லைன் வரைந்து ப்ரவுன் க்ளாஸ் கலர் கொடுக்கவும்.
உங்கள் ஷோகேஸை அலங்கரிக்க போகும் அழகிய சிம்புளான ஜொலிக்கும் பாட் டிசைன் ரெடி. பானையில் நீங்கள் விரும்பிய பூக்களை வைத்து அலங்கரிக்கவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப சூப்பர் :) கலர் சூப்பரோ சூப்பர். கோல்டன், ரெட், க்ரீன்... அழகு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமை டீம். இங்கே பானை கிடைக்காது. பார்த்து ரசிக்க மட்டும்தான் முடியும்.
//க்ளாஸ் கலர்// முதலில் gloss colour என்று படித்தேன். glass colour!!

‍- இமா க்றிஸ்

ரொம்ப அழகா பண்ணிருக்கிங்க... :) டீம்....

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

அன்பு டீம்,

அழகாக இருக்கு, காண்ட்ராஸ்ட் கலர்களும் நல்லா எடுப்பா வந்திருக்கு.

பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

வாவ் ரொம்ப அழகா இருக்கு. ரொம்ப ஈஸியா செய்து பார்க்கலாம். அறுசுவை டீம் க்கு நன்றி

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

Nan arusuvaikku puthitu..
Romba alaga iruku....