"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))"

தோழிகளே,
தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1,200 பதிவுகளுக்கு மேல் சென்றுவிட்டதால் இந்த புது இழை.உங்கள் சந்தேகங்கள் அதற்கான பதில்களை தோழிகள் இங்கே தொடருங்கள்..தாய்மையடைந்த தோழிகள் என்ன சந்தேகமோ அதை இங்கே கேட்கலாம்......நான் மட்டுமல்லாமல் தெரிந்த தோழிகள் அனைவரும் வந்து பதில் தருவார்கள்.........
வாழ்த்துக்கள்.........
"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

""தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1
http://www.arusuvai.com/tamil/node/19991""

சலாம்,எனக்கு திருமணமாகி 1வருடம் ஆச்சு,எனக்கு போன மாதம் 1 வாரம் தள்ளி போச்சு அப்ப ஹோம் டெஸ்ட் பன்னப்ப் - வந்தது,மறு நாள் பீரியட்ஸ் ஆயிருச்சு.இந்த மாதம் எனக்கு 40 நாள் ஆச்சு இப்ப வரைக்கும் பிரியட்ஸ் வரல இன்னைக்கு 41 வது நாள் எனக்கு மறுபடியும் ஹோம் டெஸ்ட் பண்ணா - தான் வருமோனு கொஞ்சம் டென்ஸனா இருக்கு.ஸிம்டம்ஸ்:இப்ப நா தினமும் நோன்பு வக்கிறேன் சாப்பிட்ட உடனே வயிறு லேசா பிரட்டுது என்னால எதையும் சாப்பிட முடியல,நா ஆபிஸ் போரதால 10 நிமிடம் டிராவல் பண்ணனும் அப்பவும் வயிறு பிரட்டுது,லேசா அப்டோமினல் பெயின் இருக்கு,நாளை டாக்டர் பாக்கலாம்னு உள்ளேன்.இப்ப நா கன்சிவா இல்லையானு தெரியனும் பீளீஸ் ஹெல்ப் பண்ணுங்க

எனக்கு june 24 periods ஆனது.இந்த மாதம் இன்னும் periods ஆகல.இன்றுடன் எனக்கு 40 ஆகுது.periods datekku 5 days முன்னாடி இருந்தே எனக்கு அடிவயிறு குத்துவது போன்று இருந்தது.ஆனா இப்ப அந்த 5 daysa வலி இல்ல. motion ரொம்ப tighta போகுது இது எல்லாம் அறிகுறிகளா? நான் இன்னைக்கு test பண்ணலாமா?morning first urine la தான் பண்ணனுமா?இல்ல எப்ப நாலும் பண்ணலாமா.எனக்கு test பண்ண பயமா இருக்கு.40 days la test பண்ணுனா positive nu வருமா? .

check it 2marw early morg

பீளீஸ் யாராவது பதில் சொல்லுங்க,நா உங்க பதிலுக்காக காத்திருக்கிறேன்.தயவு செய்து யாராவது ஆன்ஸர் பண்ணுங்க.இப்ப டெஸ்ட் பண்ணா பாஸிடிவ் ஆகுமா.நா ப்ள்ட் டெஸ்ட் பண்ண போரேன்,பண்ணலாமா வேண்டாமா?

நான் test பண்ணி பார்தேன் இன்னைக்கு 11 மணிக்கு negative nu வந்தது.டாக்டர் இன்னும் 5 days கழித்து பார்க்க சொன்னாங்க.எனக்கு positive ணு வாருமா?

தோழிகளே என் மகளை டாக்டரிடம் காட்டினேன் அவர் பேபி நல்லாஇருக்கு வலிதான் வரனும் நல்லா நடந்தால் வலி வரும்னு சொல்றாங்க டெய்லி நடக்குறா வேறு ஏதாவது செய்யலாமானு எனக்கு யோசனை சொல்லுங்க ப்ளீஸ்

தோழிகளே வணக்கம் ,நான் 86 நாட்கள் கர்ப்பம் ,நான் ரெகுலராக பார்க்கும் எனது மருத்துவர் ஆலோசனையின் பேரில் ecospirin(aspirin delayed release tablets) இரண்டு மாதங்களாக எடுத்து வந்தேன் ,எனக்கு கடந்த மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வாமிட் எடுக்கும் போது ரத்தம் கலந்து வந்தது ,தொண்டை மிக மிக புண்ணாகி விட்டது ,எதனால் என்னவென்று தெரியாமல் பயந்து எனது அருகில் உள்ள மருத்துவரிடம் சென்ற போது அவர் அந்த மாத்திரையை (ecospirin) நிறுத்த சொல்லி விட்டார் ,அந்த மாத்திரையால் தான் வாமிட் இல் ரத்தம் வருகிறது என்றும் கூறினார் , நானும் மூன்று நாளாக அதனை நிறுத்தி விட்டேன் ,இப்போது ரத்தம் கலந்த வாமிட் இல்லை ,அந்த மாத்திரை எதற்கு சாப்பிடுவார்கள் என்று யாருக்காவது தெரியுமா ?மாத்திரையை நிறுத்த சொன்ன அந்த மருத்துவரிடம் கேட்ட பொழுது அது அடிக்கடி அபார்ஷன் ஆகுபவர்கள் தான் சாப்பிடுவார்கள் என்றார் ,இதனால் எனக்கு எதாவது பாதிப்பு ஏற்படுமா ?குழப்பமாக உள்ளது ,எனது மருத்துவரை சந்திக்க இன்னும் ஒரு வாரம் உள்ளது ,எனவே எனக்கு தெளிவு படுத்துங்கள் தோழிகளே ..

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

இந்த மாத்திரை பற்றி முழுதாக தெரியவில்லை,ஆனால் உங்கள் மருத்துவரிடம் செல்லும்போது உங்களுக்கு இருந்த மாற்றங்களையும்,இதனால் வந்திருக்குமோன்ற சந்தேகத்தையும்,எதற்காக உங்களுக்கு தந்தாங்கன்றதையும் கேட்டு தெளிவடைந்துவிடுங்கள். குழப்பம் தீர்ந்திடும். பயம் வேண்டாம் தோழி.
கூகுளில் தேடியதில் இதை வயிற்றுவலி,தலைவலி,காய்ச்சல் போண்றது குறைய கொடுப்பதாகத் தெரிகிறது. மேலும் நீங்கள் உங்கள் மச்ருத்துவரை அனுகுதல் நலம்ப்பா.........

நன்றி ரேணுகா ,நாளை நான் எனது மருத்துவரை சந்திக்கின்றேன் ,நாளையே அதை கேட்டு தெளிவு பெறுகிறேன் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

ஆண்களுக்கு பாசிட்டிவா இருந்தாலும்,நெகட்டிவா இருந்தாலும் பிரச்சனையில்லை.பெண்களுக்கும் பாசிட்டிவ்னா பிரச்சனை இல்லை. நெகட்டிவ்னா மட்டும் இரண்டாவது தாய்மையடையும்போது சில பிரச்சனைகள் வரும்னு சொன்னாங்க.அதற்கும் மருத்துவம் உள்ளது.
அதாவது பெண் எவ்வகை இரத்தப்பிரிவானாலும் அதில் நெகட்டிவாக இருந்தால் முதல் குழந்தை உண்டாதல் முதல் பிறப்புவரை எவ்வித பிரச்சனையும் இல்லை.குழந்தை பிறந்து சில மணித்துளிகளில் தாய்க்கு மருத்துவர் ஒரு இஞ்சக்சன் போடுவார்.இது இரண்டாவது கரு உண்டாகும்போது அதை பாதுகாக்கும்.மேலும் நெகட்டிவ் உள்ள பெண்கள் முதல் பிரசவத்திற்கு பிறகு 5 வருடம் கழித்தே கன்சீவாக அலோசிக்கப்படுகின்றனர்.
உங்களுக்கு பசிட்டிவ்தானே ஒரு பிரச்சனையும் வராதுப்பா. மேலும் விபரங்களை உங்க மருத்துவரை கேட்டால் நல்ல விளக்கம் கொடுப்பார்ப்பா. மனதை குழப்பாதீர்கள்.......:-))

மேலும் சில பதிவுகள்