"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))"

தோழிகளே,
தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1,200 பதிவுகளுக்கு மேல் சென்றுவிட்டதால் இந்த புது இழை.உங்கள் சந்தேகங்கள் அதற்கான பதில்களை தோழிகள் இங்கே தொடருங்கள்..தாய்மையடைந்த தோழிகள் என்ன சந்தேகமோ அதை இங்கே கேட்கலாம்......நான் மட்டுமல்லாமல் தெரிந்த தோழிகள் அனைவரும் வந்து பதில் தருவார்கள்.........
வாழ்த்துக்கள்.........
"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

""தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1
http://www.arusuvai.com/tamil/node/19991""

arusuvaiyil ipothelam yarum sariyaga answer panurathu ilai...yen?????elarum aratai pakkam poitaga...

Hope is necessary in every condition:)

என்ன சந்தேகம் கேட்டீங்க? என்ன கேள்விக்கு பதில் வரல? எப்ப கேட்டீங்க? உங்க கேள்விக்கு பதில் வரலன்னு கேட்குறது நியாயம்... அரட்டைக்கு போயிட்டாங்கன்னு சொல்றது நியாயமா?? ;)

எல்லாரும் எல்லா கேள்வியையும் கவனிக்க வாய்ப்பு இல்லை... அப்படியே கவனிச்சாலும் எல்லாத்துக்கும் பதில் சொல்ல முடியாது... சிலது மருத்துவர் தான் சொல்லணும், அதை நாங்க எத்தனை முறை எத்தனை பேருக்கு சொல்ல முடியும்? சில கேள்விக்கு பதில் தெரியாது... அப்பவும் பதில் சொல்ல இயலாது. கேட்கும் கேள்வி தமிழில் இல்லை என்றால் பாதிபேர் படிக்கவே மாட்டோம்... அப்பவும் பதில் இருக்காது. அதனால் அரட்டையில் இருப்பதால் யாரும் பதில் சொல்லுறதில்லைன்னு நினைக்காதீங்க. :)

உங்க கேள்வியை சொல்லுங்க... தெரிஞ்சா நிச்சயம் பதில் சொல்வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Neenga enna keattu inga yaru ungalukku badhil sollama irundhanga? Ungalukku enna sandhegamo adhai kelunga therinjavanga kandippa badhil solvanga.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

vanitha and nithya na oru kelvi keten...romba kastathoda arusuvai la answer kidaikum nu keten...but yarum ans panala...so na apdy panen...sorry...enaku adikadi sunami varathu pola kanavu varuthu...but sunami la iruthu na thapichiduven...4 years a varuthu...yen varuthu nu theriila....enga home la ethum nadakka pogutha nu therila....na romba payapaduven...enaku yen kanavu varuthu..ore mathiri yen varuthu....intha question tha keten..sorry....yesterday vera enga home la fire incident nadanthathu..enaku romba payama iruku..

Hope is necessary in every condition:)

ரேகா,
பொதுவா நீர்நிலைகள் கனவில் வருவது நல்ல சகுணமாக சில நூல்களில் சொல்லப்பட்டுள்ளது,மேலும் வம்சம் விருத்தியடையும் அடையாளமாகவும் கருதப்படுகிறது.ஆறு பெருக்கெடுத்து ஓடுவது, நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது, கடலில் பொங்கி வருவது, குளம் நிரம்பி வழிவது போல் கனவு கண்டாலும் அடுத்தடுத்து நல்ல செயல்கள் நடக்கும்.

நீர் நிலைகளில் நீராடுவது போல் கனவு கண்டால் சுப பலன்கள் ஏற்படும். வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்லப் போகிறார் என்பதை இந்தக் கனவு உணர்த்துகிறது. இவ்வாறு ஜோதிடர் வித்யாதரன் கூறியுள்ளார்ப்பா.........

தோழி முதலில் மனதை அமைதியாக வைக்க நல்ல இசை கேளுங்கள்,பயப்படாதீர்கள்,இங்கு உங்களைப்போலவே பல தோழிகளுக்கும் வேலைகள்,வ்றுத்தங்கள் இருக்கும்.சோ கேள்விக்கு பதில் உடனே வரலாம் அல்லது ஒரு வாரம் கூட ஆகலாம்,பதில் தெரியாமலும் இருக்கலாம்.........மீண்டும் தோழிகளின் மனம் வருந்துமாறு பேசாதீர்கள் பிளீஸ்,இங்கு ஒரு தோழமைக்குடும்பம் வளர்கிறது. இதையும் நினைத்து கவலை வேண்டாம்,சண்டைகள்,சங்கடங்கள்,பின் சந்தோஷங்கள் குடும்பத்தில் சகஜம்தனே........:-)) மீண்டும் அனைவருடனும் பழகுங்கள்.............ஓகே...........:-))

இது நீங்க கேட்ட கேள்வி தானா... எப்பவோ படிச்சேன்... என்னன்னு சரியா சொல்ல தெரியல... அதனால் விட்டுட்டேன்.

கனவு என்பது எதை உணர்த்தும்... நம்ம ஆழ் மனதை தான். உங்களுக்கு வாழ்வில் உள்ள ஏதோ ஒரு மரண பயம் அல்லது அழிவை பற்றிய பயம் தான் உங்களை கனவில் வாட்டுது. எப்பவுமே கனவு என்பது நாம் வெளியே சொல்லாமல் உள்ளுக்குள் நினைத்து புழுங்கும் ஏதோ ஒரு ஆழ் மனதில் ஓடும் எண்ணத்தின் வெளிப்பாடு தான்னு எனக்கு ஒரு நம்பிக்கை. அது சுனாமியா வர காரணம், உங்களுக்கு இயற்கையாகவே நீர் நிலைகளை கண்டால் பயம் இருக்கலாம், சுனாமி பார்த்து பயந்திருக்கலாம். இதை விட்டு முதலில் வெளிய வாங்க. ரேணு சொன்ன பதிலை படிச்சா அந்த கனவு பற்றிய பயம் நிச்சயம் போகும்... அது போனாலே உங்களுக்கு இந்த கனவு மீண்டும் வராது. சரியா?

எந்த கெட்ட கனவு வந்தாலும் அதில் உள்ள நல்லதை பாருங்க... உங்க கனவில் மாட்டிக்காம நீங்க தப்பிச்சுடுறீங்களே... அது நல்ல விஷயம் தானே? அப்போ எந்த கெட்டது நடந்தாலும் அதில் இருந்து தப்பிப்பீங்கன்னு நம்புங்க. அது பாசிடிவ் எனர்ஜி கொடுக்கும். கனவு தானா போகும். வீடுன்னா சின்ன சின்ன இன்சிடண்ட்ஸ் இது போல் நடக்கும் தான்... அது நம்ம கேர்லஸ்னஸால நடப்பது... கனவால் அல்ல. குழப்பம் வேண்டாம் ரேகா. மகிழ்ச்சியா இருங்க. :)

சின்ன ரெகுவஸ்ட்: அடுத்த பதிவு தமிழில் இருந்தா மகிழ்ச்சியா இருக்கும். கீழே உள்ள “தமிழ் எழுத்துதவி” லின்க் போனா உதவும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புஷ்பலதா,
பொதுவாகவே கருவுற்றிருக்கும்போது மாத்திரைகளை முடிந்தவரை தவிர்கனும்,காரணம் மாத்திரைகள் உடலை சூடு ஏற்படுத்தும்,கருவுற்றிருக்கும் சமையம் உடல் சூடாவது நல்லதல்ல.
நீங்கள் மிளகு ரசம், தூவலை தலைரசம்னு சொல்வாங்க அது வைத்து சாதம் பிசைந்து சாப்பிடுங்கள்,அப்படியும் உங்களுக்கு சரியாகலை அல்லது சந்தேகம்னா மருத்துவரிடம் சொல்லி கேளுங்கள் கேட்பதில் தவறில்லை,அவர் மைல்டு டோஸாக கொடுக்கலாம்.........

renuka na koba padala..thapavum pesala...sorry..plz sorry for all....enaku romba payama irunthathu...ans panathuku thanks...romba thanks...ethathu ahidumo nu payathen....na yaraum kasta paduthi irutha sorry ...

Hope is necessary in every condition:)

வனிதா எனக்கு நான்கு வருடமாக அடிக்கடி இப்டி வந்தது ...இப்போவும் இப்டி தா வருது...அதான் கேட்டேன் ...எனக்கு வர கனவு எல்லாம் பலிக்கும் ...நிறைய இன்சிடென்ட் நடந்திருக்கு ...அதான் பயந்தேன்...நீங்க கோப படுற மாதிரி பேசி இருந்த சாரி...ந கோப பட்டு இந்த மாதிரி எழுதலை ...சும்மா தா பனேன்..எனோட பயம் தா காரணம் ...மன்னிக்கவும்...

Hope is necessary in every condition:)

வயிற்று வலிக்கு உடல் சூடு, கர்ப்பபை விரிவடைவது காரணமா இருக்கும். மருத்துவரின் ஆலோசனைபடி நடக்கவும். விளக்கெண்ணெய் வயிற்றில் தடவுவது, நிறைய தண்ணி குடிப்பது, உடல சூடு படுத்தும் உணவு தவிர்ப்பது நல்லது

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மேலும் சில பதிவுகள்