"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))"

தோழிகளே,
தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1,200 பதிவுகளுக்கு மேல் சென்றுவிட்டதால் இந்த புது இழை.உங்கள் சந்தேகங்கள் அதற்கான பதில்களை தோழிகள் இங்கே தொடருங்கள்..தாய்மையடைந்த தோழிகள் என்ன சந்தேகமோ அதை இங்கே கேட்கலாம்......நான் மட்டுமல்லாமல் தெரிந்த தோழிகள் அனைவரும் வந்து பதில் தருவார்கள்.........
வாழ்த்துக்கள்.........
"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

""தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1
http://www.arusuvai.com/tamil/node/19991""

இப்பொழுது எனக்கு மூன்று மாதம் நான் தினமும் உள்ளாடை அணிந்து தூங்குகிறேன்,இது சரியா???உள்ளாடை அணியவில்லை என்றால் மார்பகம் பெரியதாகி விடுமா???

நான் இப்பொழுது 7 மாத கற்பம். கடந்த இரண்டு நாட்களாய் எனக்கு அரிசி சாப்பிடனும் போல் தோன்றுகிறது... இந்த இரண்டு நாட்களில் ஏழு எட்டு தடவைக்கு மேல் அரிசி எடுத்து சாப்பிட்டு விட்டேன்... இன்று அலுவலகம் வந்த பிறகும் மண்டைக்குள் அரிசி அரிசி என்றே ஓடிக்கொண்டு இருக்கிறது... நான் இதற்கு முன் அரிசி சாப்பிட்டதே இல்லை... இந்த இன்டு நாட்களாய் தான் இந்த அரிசி பைத்தியம்.. :(

தோழிகள் யாருக்காவது இப்படி கர்ப்ப காலத்தில் நடந்துள்ளதா? உடலில் ஏதாவது சத்து குறைபாட்டால் இப்படி தோன்றுகிறதா? ப்ளீஸ் யாராவது எனக்கு பதில் தெரிந்தால் சொல்லவும்....

அயன் டிஃபிஷியன்சி உள்ளவங்களுக்கு இப்படி தோன்றலாம். :) ஆனால் இது குழந்தைகு நல்லதில்லைன்னு அம்மா சொல்லி கேட்டிருக்கேன். அதனால் முடிந்தவரை அந்த நினைவு வரும் போது வேறு எதையாவது வாயில் போடுங்கள். நினைத்தால் முடியாதது ஏதுமில்லை தானே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உடனே பதில் தந்ததற்கு நன்றி... :)

ரெண்டு நாளா எந்த வேலையும் செய்ய முடியவில்லை... நின்னாலே தலை கிறு கிறுன்னு சுத்துது.... நாளை டாக்டரிடம் தான் போகவேண்டும்.... அப்படியே இந்த அரிசி பிரச்சனையையும் சொல்லி தீர்வு காண வேண்டும்....

தோழியே பயப்பட வேண்டாம் இது மாதிரி நேரத்தில் ஏதாவது சாபிட தோணும் .சிலபேருக்கு புளி சாபிட தோனும் .சிலபேருக்கு ஸ்வீட் சாபிட தோனும் .ரொம்ப சாபிடாமல் .அளவா சாபிடுங்க .

தோழிக்கு எனக்கும் இதுபோல் இருந்தது நான் five month முதல் புழுங்கல் அரிசி சாப்பிட்டேன் பயப்பட வேண்டாம்

this s nandhini. nanu pothusa join panni erukka entha network la. sathi enakku oru help hpanna mudi uma pa. enakkum pocd erukku. enakku marriage aakey 4yr aakuthu pa. eppa thaan baby kkaka try pannrom. eppa dr enkku pocd erukku Laprescopy pann solli erukkanga pa. Laprescopy panna ethana naal trast rest edukkanum pa. enakku help panna yarum ellai enakku romba payama erukku pa en husband romba avasara paduraru. enaku entha month 15 date varum pa dr. appa vanthu pakka solli erukkanga. Laprescopy panni mudichathum antha month they try pannalama ellaina next month try pannanuma. en enral en husband 2 months thaan erupparu ennudan piraku abrade senru veduvar thirumbaum 6 months kalichi thaan varuvaru pa. enakku enna na avaru vantha thum Laprescopy panni kalamnu thunuthu pa aana etha en husband oththukka mattangkuraru. Laprescopy pann ethanai naal rest edukkanumnu? sollunga pa plz. antha month baby kku try panna lama? Laprescopy evvalau(money) aakum? plz enakku reply pannunga pa plz.

eppadi tamil typing seivathu akka...

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

பூரணி இந்த அறுசுவை பக்கத்தின் வலது பக்கம் கீழ் புறத்தில் தமிழ் எழுத்துதவி என்று ஆப்ஷன் இருக்கு. அதை கிளிக் செய்து தமிழில் எழுதுங்கள்.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

ஆர்த்தி,
பயப்படாதீங்க,இன்னும் 7வாரம் இருக்குள்ள, குழந்தை திரும்பி கொடுக்கும்.
பிரசவ வலி ஸ்டாராகும்போது இது சரியாயிடும். ஒவ்வொரு முறை வலியின்போதும் குழந்தை கர்பப்பை சுவரில் தன் கால்களை ஊன்றி பனிக்குட நீரின் உதவியுடன் சுற்றிவரும்.அப்போது தலைதிரும்பி கொடுக்கும்பா,நல்ல நடைபயிற்சி செய்யுங்கள்,மெதுவாக நிதானமாக நடைபயிலுங்கள்,சந்தோஷமாக இருங்கள்,வாழ்த்துக்கள்........

மேலும் சில பதிவுகள்