குழந்தை வேண்டாமா? தோழிகளே

குழந்தை வேண்டாமா? என் தங்கைகு கல்யாணம் முடிந்து 3 மாதங்கள் ஆகிறது. முதல் நாள் மட்டும் உறவு வைத்துக் கொண்ட அவர், பிறகு குழந்தை எனக்கு வேண்டாம், நீ வேறு திருமணம் செய்து கொள் என்கிறார்.TEST TUBE BABY டிரை பண்ணிக்கோ என்கிறார்.கேட்டது எல்லாம் வாங்கியும் கொடுக்கிறார், வயதான அம்மா,அப்பா விடம் சொல்ல முடியாமல் தவிக்கிறோம். சிரு வயதிலேயே அம்மாவை இழந்தவர். சில நேரம் மன நோய் தாக்கியவர் போல் நடந்து கொள்கிறராம் என்ன் செய்ய தோழிகளே'',,,,,என் தங்கைக்கு 29 வயது ஆகிறது, குழந்தை வேண்டும் என்று ஆசைபடுகிறார் ,,,, பதில் ??????

கெளரி, உங்கள் தங்கையிடம் சொல்லி அவர் கணவரை ஒரு நல்ல சைக்யாட்ரிஸ்டிடம் அழைத்துச் சென்று கவுன்சிலிங் தர சொல்லவும். வாழ்க்கையில் அவர் சந்தித்த ஏதோ ஒரு நிகழ்ச்சி அல்லது அவர் மனதில் ஊறி கிடக்கும் வெளி சொல்ல முடியாத குழப்பங்கள், அல்லது வெளி சொல்ல விரும்பாத அவரின் உடல்நலக்குறைவு இப்படி எதாவது இருக்கலாம். ஒரு சைக்யாட்ரிஸ்டிடம் அழைத்து சென்றால் இவருக்கும், உங்கள் தங்கைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். இந்த விஷயத்தில் ஆத்திரமோ,அவசரமோ,வெறுப்போ, கோபமோ காட்டாமல் பொறுமையாக இருந்து காரியத்தை சாதிப்பதில் உங்கள் தங்கையின் சாமார்த்தியம் இருக்கிறது. நல்லதே நடக்கும். ஆல் தி பெஸ்ட் தோழியே :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நன்றி கல்பனா,சைக்யாட்ரிஸ் கிட்ட வரமாட்டராம். நீ வேறு எவனயாவது கல்யாண்ம் பண்ணிக்கோ நு சொல்றரு,

மேலும் சில பதிவுகள்