இந்தியன் (தாத்தா) எங்கே?

நேற்று ஒரு சின்ன குழந்தை பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது பயணித்த பஸ்ஸில் உள்ள ஓட்டையின் வழியே விழுது அடி பட்டு இந்த உலகத்தை விட்டு பிரிந்தது என்று படித்தவுடன் மனம் பதறியது. இதை நேரில் பார்த்தவர்களும் கேட்டவர்களும் படித்தவர்களும் நடுங்கி தான் போய் இருப்பார்கள். சிறிது நேரத்திற்கு பின் கோபம் தான் வந்தது. எங்கே போகிறது மனித நேயம்?

எங்கே ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. அப்படி எல்லோர் மேலும் கோபம். முதலில் அந்த வண்டியை பாஸ் செய்த அதிகாரி மேல் கோபம். ஒருவேளை அவரின் குழந்தை எல்லாம் அவர் வாங்கும் லஞ்ச பணத்தில் வாங்கிய காரில் மட்டுமே செல்லுமோ? அந்த காருக்கு யார் கிளியரன்ஸ் கொடுப்பாங்க? இதையே தான் எத்தனை வருஷத்துக்கு முன்னாடி படத்தில் காட்டுனாங்க? இன்றும் இந்த அவலம் நடக்கிறது. முதலில் அந்த பஸ்ஸில் ஒரு டீச்சர் அல்லது கண்காணிப்பாளர் ஏன் இல்லை? குழந்தைகளின் உயிர் அவ்வளவு துச்சமாக போச்சா? பஸ்ஸில் உள்ள கிளீனர் ஒரு மனிதாபிமான அடிப்படையிலாவது அந்த குழந்தைகள் மேல் ஒரு கண் வைத்திருக்க வேண்டாமா? இந்த பஸ்ஸில் ஓட்டை இருக்கிறது அது பழுது பார்க்கப் படலை அதனால் குழந்தைகளை ஏத்தி செல்ல மாட்டேன் என்று ஏன் அந்த டிரைவர் சொல்லவில்லை. தன குழந்தை என்றால் பார்த்து பார்த்து செய்திருப்பாரோ? பஸ்ஸில் உள்ள குழந்தைகள் அலறும் சத்தம் கேட்டும் ஏன் வண்டியை நிறுத்தவில்லை. குழந்தை தவறுதலாய் விழுந்திருந்தால் அந்த கிளீனர் அப்பொழுது என்ன தான் செய்துக் கொண்டிருந்தார்? குழந்தைகளை தொலைவில் நல்ல பள்ளி என்று அனுப்பும் பெற்றோர் யாரை நம்பி அனுப்புகிறார்கள்? பள்ளி நிர்வாகமா அல்லது பஸ் டிரைவர் நம்பியா? அப்படி பள்ளிக்கு வந்து போகும் குழந்தைகள் போகும் பேருந்தை செக் யார் செய்ய வேண்டும்? குழந்தைகளை பஸ்ஸில் ஏற்றி விட்டவுடன் அந்த பள்ளியின் கடமை முடிந்து விட்டதா? அய்யோ என்றால் வருமா அம்மா என்றால் வருமா? இப்படி பல பேரின் (குழந்தையின் பெற்றோர்களையும் சேர்த்தே!) அஜாக்கிரதையினால் வாழ வேண்டிய வயதில் நம்மை விட்டு சென்ற ஸ்ருதியின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திப்போம். அவரின் குடும்பத்திற்கு தைரியம் மற்றும் மனதை தேற்றக் கூடிய சக்தியை கொடுக்க ஆண்டவனை பிராத்திப்போமாக......

இதை காசு பார்க்கும் இந்த பத்திரிக்கையை என்னவென்று சொல்வது. பத்திரிக்கை தர்மம் எங்கே? அதில் உபயோகிக்கப்படும் வார்த்தைகளில் கம்பீரம் இல்லை. கொச்சையாக இருக்கிறது. இது ஒரு துயரமான சம்பவம் தான்.....அதை இன்னமும் கணியமாக எழுதியிருக்க முடியும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இந்த உலகில் ஒரு உயிரின் மதிப்பு இவ்வளவுதானா?? இந்த செய்தி படித்ததில் இருந்து மனதில் இனம் புரியா பாரம். என் மகளின் பெயரும் ஸ்ருதிதான். இதற்கு மேல் என்னால் எதும் சொல்ல இயலவில்லை. குழந்தையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். குழந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

வாழ்க வளமுடன்

பணம் ஒன்றே குறியாகி விட்டது நம் நாட்டில் :(. மனித உயிருக்கு மதிப்பில்லை. என்ன சொல்வது யாரிடம் கோபப் படுவது என்றே புரியவில்லை. அரசியல்வாதி, அதிகாரிகள், மக்கள் என யாருக்கும் பொறுப்பில்லை. என் காரியம் எனக்கு முக்கியம் என்ற சுயநலப் போக்கு அதிகரித்து விட்டது. ஓட்டை உள்ள பஸ் ஐ பழுது பார்க்கச் சொல்லாத ஓட்டுனர், கண்டு கொள்ளாத பள்ளி நிர்வாகம், சான்றிதழ் வழங்கிய அதிகாரி இவர்களின் ஒட்டுமொத்த பொறுப்பற்ற தன்மைக்கு பலியானது ஒரு இளம் மொட்டு. இன்று நாம் கதறுவதாலோ கத்துவதாலோ என்ன பயன? குறைந்த பட்சம் இதுபோல் இன்னொரு சம்பவம் நடக்காமலிருக்க நடவடிக்கை எடுக்கப் பட்டால் சரி.

அக்னிக் கொஞ்சொன்று கண்டேன் ஆங்கே காட்டினில் ஒரு மரப்பொந்தினுள் வைத்தேன் வெந்து தணிந்தது காடு என்ற பாரதியின் வரிகளில் உள்ள அக்னிக் குஞ்சு நம் நெஞ்சுகளில் மட்டுமே கனன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் இணைய வேண்டும். அந்த ஒற்றுமை நம்மிடம் வருவது எப்போது? செயல்வடிவம் பெறுவது எப்போது?

இளம்பிஞ்சு ஸ்ருதியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இதுல பெரிய கொடுமை என்னனா அந்த பேருந்துக்கு 9ஆம் தேதிதான் தர சான்றிதழ் தந்திருக்காங்க.இதுல எவ்வளவு பெரிய ஓட்டை இருக்கும் போது இந்தியன் படத்துல வர மாதிரியே பள்ளி பேருந்துக்கு லஞ்சம் வாங்கி சான்றிதழ் குடுட்துருக்காங்க. ஈப்ப உடனே நிறைய குழந்தைகளை பள்ளிக்கு போற ஆட்டோ வை பிடிக்கிறாங்க .கண் கெட்டதுக்கு அப்பறம் சூரிய நமஸ்காரம் .எதுவும் ஆபத்து வந்ததுக்கு அப்பறம் தான் செய்வாங்க .

Be simple be sample

சில மேலதிகாரிகளின் மெத்தனமும் ,பண ஆசையும் அந்த பிஞ்சின்(ஸ்ருதி ) உயிரையே குடித்து விட்டதே !!!
இந்த பேரிழப்பை ஈடு செய்ய யாரால் இயலும் ,யாராலும் முடியாது.இது இப்போது ஒருவரின் ,ஒரு குடும்பத்தாரின் குமுறல் மட்டுமல்ல ,பிஞ்சுக்களை பள்ளிக்கு அனுப்பி விடும் ஒவ்வொரு பெற்றோரின் குமுறலாகவே இருக்கிறது .இனி யாரை தண்டித்தாலும் மாண்ட உயிர் திரும்பாது ,மீண்டும் இது போல ஒரு துயர் நடக்காமல் வேண்டுமானால் தடுக்கலாம் ,ஸ்ருதியின் சிரித்த முகம் இப்போது சிதைந்து மண்ணுக்குள்ளே போய் விட்டதே ,அந்த இளம் மொட்டின் மனம் சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம் .இது போல இன்னும் பற்பல தனியார் பள்ளிகளில் நிர்வாகத்தினரின் குறைகளை களையவும் ,இனியும் இழப்பு இல்லாமல் தடுக்கவும் இனி ஒரு விதி செய்ய நம் அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

அந்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள வில்லை. பாவம் ஒன்றும் அறியாத அந்த குழந்தை இவர்களின் அலட்சியத்தால் பலியாகிவிட்டது. எப்படி இவ்வளவு பெரிய ஓட்டை இருக்கும் பேருந்தை பள்ளி நிர்வாகம் கவனிக்காமல் விட்டது. அதன் மேலே பலகை போட்டு அடைக்கும்போது கூட தவறுதலாக பிள்ளைகள் விழ வாய்ப்பு இருப்பதை உணர வில்லையா. நினைத்து பார்க்க கூட முடியவில்லை. நம் அரசாங்கத்திற்கு எல்லாமே கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் தான்.அந்த குழந்தையின் பெற்றோருக்கு மன தைரியத்தை குடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

nam nattil than inthe mathiri yellam nadakuthu,inga dubai la apdi illa,very strict rules follow panranga,first india la manitha uyirukku mathipiilai athu than karanam.oru kuzhanthayai petru vazhakiravangaluku than athan arumai therium.

மேலும் சில பதிவுகள்