ஏப்ரன்

தேதி: July 27, 2012

5
Average: 4.4 (10 votes)

 

துணி - 3/4 மீற்றர்
பைப்பிங் - 5 & 1/8 மீற்றர்
தையல் இயந்திரம்
பட்டன்கள்
பொருத்தமான நிற நூல்
ஊசி
கத்தரிக்கோல்
கடதாசி
taylor's chalk
பேனை
குண்டூசிகள்

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
கடதாசியில் 71 x 24 செ.மீ நீள்சதுரம் ஒன்று வெட்டிக் கொள்ளவும். அதனை நீளவாட்டில் நான்காகவும் அகலவாட்டில் எட்டுப் பகுதிகளாகவும் மடித்து எடுக்கவும். (சில குறிப்பிட்ட பெட்டிகளை மட்டும் மீண்டும் பாதியாகப் பிரித்துக் கொள்ள வேண்டியிருக்கும்.) இந்த ஏப்ரனின் முன் பக்கமும் பின் பக்கமும் ஒரே அளவாக இருக்கும். ப்ளாக், ஒரு பக்கத்தின் பாதி அளவு மட்டுமே. படத்தில் கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைப் பிரதி செய்து ப்ளாக் தயாரித்துக் கொள்ளவும். இது கழுத்துப் பாகம்.
ஏப்ரன் கீழ்ப்பாகம் இது. பாக்கட் அளவு (பாதி மட்டும்) உள்ளே வரையப்பட்டிருக்கிறது.
துணியை ஒரு பாவு ஓரத்தில் ஆரம்பித்து 48 செ.மீ அளந்து, மீண்டும் பாதியாக மடிக்கவும். நடு மடிப்போடு ப்ளாக் மடிப்புக் கோட்டினை வைத்து பின் செய்து ஏப்ரன் பகுதியை வெட்டி வைக்கவும். துணியில் கழுத்து வளைவு வெட்டிய இடத்தில் கிடைக்கும் மீதி, பாக்கட் வெட்டப் போதுமானதாக இருக்கும். பாக்கட் உயரம் வேறுபட்டால் பரவாயில்லை. கீழ் வளைவுகளை மட்டும் சரியாக வெட்டிக் கொண்டால் போதும்.
முதலில் பாக்கட் மேல்பகுதிக்கு பைப்பிங் கொடுத்துத் தைக்கவும். பிறகு மீதி பைப்பிங் துணியை ஓரத்தை உள்ளே மடித்துக் கொண்டு தைக்க ஆரம்பித்து, பாக்கட்டைச் சுற்றிலும் பிடித்து, கடைசியாக உட்புறம் மடித்துத் தைத்து முடிக்கவும். விரும்பினால் பட்டன்கள் வைத்துத் தைத்துக் கொள்ளவும்.
ஏப்ரன் துணியை சரியான பக்கம் உள்ளே இருக்குமாறு சேர்த்துப் பிடித்து தோள்ப்பகுதி இரண்டையும் அடித்துக் கொள்ளவும். பிரிந்துவிடாமல் ஒரு வரி ஸிக்ஸாக் தையல் அடித்து விடவும்.
பெல்ட்டுக்கு வெட்டியுள்ள பகுதிகளை நீளமாகப் பொருத்தி எடுக்கவும். ஒரு பக்கம் சரிவாக வைத்துத் தைத்தால் அழகாக இருக்கும். மூன்றாவது பக்கம் தைக்க வேண்டியது இல்லை.
பெல்ட்டை சரியான பக்கத்தை வெளியே திருப்பி அழுத்தி வைக்கவும்.
12 செ.மீ நீளத் துண்டு பைப்பிங் எடுத்து ஒரு வரி தையல் போட்டு, பின்பு இரண்டாக வெட்டி வைக்கவும்.
ஏப்ரன் கழுத்திற்கு பைப்பிங் கொடுக்கவும். முடியும் இடத்தில் மடித்துப் பிடித்துத் தைக்கவும்.
கழுத்து இறக்கத்திலிருந்து ஏப்ரன் அடி வரையான தூரத்தின் பாதி அளவில், பைப்பிங் பொருத்து வரும் பக்கம் பெல்ட்டும், பொருத்து வராத பக்கம் வளையமும் வரவேண்டும். இடத்தைத் தீர்மானித்துக் கொண்டு, ஏற்கனவே தைத்துத் தயாராக வைத்திருக்கும் பைப்பிங் துண்டுகளையும் பெல்ட் துண்டுகளையும் ஊசியால் இணைக்கவும். இவை எல்லாமே துணியின் புறப்பக்கம் பொருத்தப்படவேண்டும்.
கழுத்திற்குப் பைப்பிங் தைக்க ஆரம்பித்த அதே பக்கத்தில், கீழே நடுவில் ஆரம்பித்து ஏப்ரன் சுற்றிலும் பைப்பிங் பிடித்து, கடைசியில் உள்ளே திருப்பி வைத்து அடித்து முடிக்கவும்.
ஏப்ரனை விரித்து வைத்து லூப் பொருத்திய பக்கத்தில், பாக்கட்டை வைத்து பின் செய்யவும்.
'ரிவர்ஸ் ஸ்டிச்' போட்டு ஆரம்பித்து ஏற்கனவே பாக்கட் பைப்பிங் தைத்திருக்கும் கோட்டின் மேலாகவே மீண்டும் அடித்து இறுதியிலும் ரிவர்ஸ் ஸ்டிச் போட்டு தைத்து முடிக்கவும். நூல் முடிவுகளைக் கட்டி வெட்டி விடவும். இந்த வகை ஏப்ரன்கள், அணிந்திருக்கும் ஆடையின் பெரும்பாலான பகுதியைப் பாதுகாக்கக் கூடியன.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

மிகவும் அழகான ஏப்ரன் அதுவும் எனக்கு பிடித்த நீல வண்ணத்தில்....பாக்கெட் மேல இருக்கும் பூ மிகவும் அருமை...கலக்குங்க...முடிஞ்சா ஒண்ணு அனுப்பி வைங்க..

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

block பெரிதாக இருந்ததால் இரண்டாகப் படம் எடுத்தேன். அப்படியும் தெளிவாகக் கொடுக்க இயலவில்லை. யாருக்காவது அளவுப் படம் தேவைப்பட்டால் இங்கு பதிவிடுங்கள். கிடைக்க வழி செய்கிறேன். :)

நன்றி ராஜி. :)

‍- இமா க்றிஸ்

it is very nice

ஊருக்கு போனா தான் தையல் மிஷின். :) அவசியம் ட்ரை பண்றேன். நல்லா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா! ஏப்ரன் கலரும் மாடலும் தைக்க சொல்லி தந்த விதமும் அருமை.நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

தேவி, வனி & ஆசியாவுக்கு என் நன்றி. :)

‍- இமா க்றிஸ்

it is very very good word

அருமையான டிசைனிங், ரொம்ப அழகா இருக்குங்க , வாழ்த்துக்கள் ;- }

நட்புடன்
குணா

இருவர் கருத்துக்கும் என் நன்றிகள்.

‍- இமா க்றிஸ்

அந்த இரண்டாவது படம்... நான் கையால் மட்டும்தான் எழுதி அனுப்பியதாக நினைவு. எடிட் பண்ணிப் போட்டதற்கு நன்றி டீம்.

இத்தனை நாள் கவனிக்காமல் இருந்த இமாவுக்கு ஒரு கர்ர்! ;))

‍- இமா க்றிஸ்