ஒரே வயலில் விளைந்தால்தான் நெல் என்று பெயரா?
ஒரே வயிற்றில் பிறந்தால்தான் உடன்பிறப்பு என்று பெயரா?
நதிகள் வெவ்வேறு பெயருடன் இருந்தாலும் நீர் ஒன்றுதான்..
பேசும் பாஸைகள் வெவ்வேறு ஆனாலும் நா ஒன்றுதான்!அறுசுவையில் ஆண் பெண் என வேற்றுமை இருந்தாலும் நட்பு ஒன்றுதான்!சகோதரத்துவம் ஒன்றுதான்!
அறுசுவையின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ரக்ஸா பந்தன் வாழ்த்துக்கள்..
எல்லாம் சரி..கயிறு கட்ட வரும்போது இனிப்பு மற்றும் மொய் கவரோட வாருங்கள்!
rakshaa panthan
அனைவருக்கும் ரக்ஷா பந்தன் நல் வாழ்த்துக்கள். எங்க பக்கம்லாம் அமர்க்களமாக கொண்டாடுவாங்க. ஷேக் சார் நாங்க கயிறு கட்டி இனிப்புதருவோம் நீங்கதான் மொய் எழுதனும் அது தெரியுமொ?
வாங்க கோமு மேம்..அதென்ன
வாங்க கோமு மேம்..அதென்ன அப்படி சொன்னிங்க?ஒரு விழாவின் ஹீரோக்குத்தான் வருகிறவர்கள் மொய் வைக்க வேண்டும்..பூப்புனித நீராட்டு விழாவில் வயதுக்கு வந்த பெண்தான் ஹீரோயின்...பெண்ணிடம் மொய் கேட்டால் எப்படி?..ராக்ஸ பந்தனை பொருத்த வரை ஒவ்வோரு ஆண்மகனும் ஹீரோ..சோ நீங்கதான் மொய் வைக்க வேண்டும்...சரியா?
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஷேக்
கவிதை சொல்லி மொய் கேக்கறீங்க....
எங்களுக்கு இந்த கயிறு கட்டறதுல எல்லாம் நம்பிக்கை இல்லீங்க... கட்டவில்லையென்றாலும் அறுசுவை நட்பு நிலைக்கும்.... யப்பா... மொய்லயிருந்து தப்பிக்க எப்படிலாம் சொல்ல வேண்டியிருக்கு... :)
தேன் மொழி மேம்...என்னது
தேன் மொழி மேம்...என்னது நம்பிக்கை இல்லையா?யானையின் பலம் தும்பிக்கை!மனிதனின் பலம் நம்பிக்கை!நம்பிக்கை மேல் நம்பிக்கை வை..கடவுளை நம்பி கை வை!..ஒரு மொய் பிரச்சனைக்கு என்னத்தெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டிருக்கு!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஷேக்
மொய் தருவாங்கன்னா இத்தனை கை....
நீங்க விடாக் கண்டன்னா நான் கொடாக் கண்டன்.... ;)
தேன் மோழி மேம் அது என்
தேன் மோழி மேம்
அது என் கையில்லை அன்பிற்கான காணிக்கை..கோபத்தில் காட்ட வேண்டாம் நாக்கை...இது இதயத்தின் இடைவிடாத வேட்கை..இதுதான் வாழ்க்கை! ஆள விடுங்க சாமியோவ்....
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
எப்படில்லாம்???????
ரக்ஷா பந்தனை பொருத்தவரை ஹீரோ ஹீரொயின்லாம் கிடையாது சகோதர சகோதரிகளின் ராஜ்ஜியம்தான். ஸோ சகோதரன் கையில் ராக்கி கட்டிண்டு சம்த்தாக மொய் கவரைக்கொடுத்துட்டு போங்க.
To all arusuvai frnds
அறுசுவை தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த ரக்க்ஷாபந்தன் நல்வாழ்த்துக்கள்..............
The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)