கம்ப்யூட்டர் டேபிள் பெயர் வேண்டும்...,

எனக்கு மட்டும் எப்படித்தான் இப்படிலாம் சந்தேகம் வருதோனு நானே நெறைய நேரம் யோசிசுருக்கேன்,என்ன பண்றது வருதே!!!
சரி விஷயத்துக்கு வர்றேன், நாங்கள் இந்த ஊரை காலி செய்து இந்தியா வர போகிறோம் அதனால் என்னிடம் பொருட்களை விற்க ஆர்ம்பிட்டு விட்டேன், என்னிடம் கம்ப்யூட்டர் டேபிள் உள்ளது, அதைப் பார்க்க கம்ப்யூட்டர் டேபிள் மாதிரி தான் தெரியுது, அதுல கீழே இரண்டு sliding shelves இருக்கும் நடுவிலே computer வைத்துகொள்ள ஒரு shelf இருக்கும், நான் விற்பனைக்கு போட்டால் இந்த மாதிரி கம்ப்யூட்டர் டேபிள் எனக்கு வேண்டாம் என்று மக்கள் யாரும் வாங்க வில்லை என் சந்தேகம் என்னனா அந்த டேபிள் பெயர் வேற ஏதோனு தோணுது, அதோட பெயரை எப்படி கண்டுப்பிடிப்பது, அதில் sauder furniture நு label ஒட்டிருக்கு, இதை நாங்க வாங்கும் பொது computer table நு நினைத்து தான் வாங்குனோம் ஆனால் அதன் உண்மையான பெயர் என்ன என்று நாங்களும் கேட்க வில்லை, இந்தியாகாரங்க (tamil family) தான் எங்களிடம் இதை விற்றார்கள், யாருக்காவது நான் என்ன கேட்கிறேன்னு புரியுதா? புரிந்தாலும் புரியலனாலும் வந்து பதில் சொல்லுங்க.,
--

அமெரிக்க தோழிகள் கொஞ்சம் இங்க வாங்க

அன்புடன் அபி

டேபிள் என்றே போட்டே கூட விற்கலாம். அதில் கம்ப்யுட்டர் கூட வைத்துக் கொள்ளலாம் என்றும் போடலாம். உங்களுக்கு தெரியவில்லை என்றால் அந்த லேபிளில் உள்ளதை கூகிளில் தட்டி பார்த்து போடவும். இல்லையென்றால் "" உள்ள இதே மாதிரி ஒத்த ஆட் பார்த்து போஸ்ட் செய்யவும். ரொம்ப சிம்பிள். உங்களை எப்படியாவது டவுட் இல்லாமல் ஊருக்கு பேக் பண்ணலாம் என்று பார்த்தல் நடக்காது போலிருக்கே!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அட ஆமாம் பா, சந்தேகம் மேல சந்தேகம் வந்துக்கிட்டே இருக்கு நான் என்னதான் செய்றது, யாரும் வாங்கலனாலும் பரவால., அது பெயர் என்ன என்று தெரிஞ்சுக்குவோம் நு பார்கிறேன் முடியல!!! என்ன நினைத்தால் எனகே கொஞ்சம் சிரிப்பு தான் வருது., அப்றம் லாவண்யா இனொரு சந்தேகம் நாங்க tax file பண்ணி 3 months ஆச்சு இன்னும் வரல,அது பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா,?

அன்புடன் அபி

ஆமாம் பா, நான் தான் தவறு செய்து விட்டேன், வேலை சீக்கிரம் முடிந்து விடும் என்று நினைத்து பண்ணேன், இப்ப என்னடான அதுவே ஒரு பிரச்சனையாக வந்துவிட்டது, நீங்க சொன்ன மாதிரி எந்நேரமும் விளையாட்டு தான் பா அவனுக்கு முக்கியமா படுது., :( :( :( இன்னையில் இருந்து நீங்க சொன்ன மாதிரியே செய்றேன், பாட்டமறக்க வைக்கிறேன், அவனோட எடை எவ்ளோ நு இன்னும் ஏதும் தெரியல அடுத்த வாரம் தான் ஆஸ்பத்திரிக்கு போகணும்,
ஊருக்கு என் கணவரும் தான் வருகிறார், நானா போக பயமா இருக்கு நு சொல்லி அவரையும் வர வச்சுட்டேன், என் கணவரும் நீங்க சொன்னதைத்தான் சொல்கிறார், குழந்தைங்கள் அழும் ஆனால் அழாது!!! :) வடிவேல் காமெடி தான் பா :) :) சரி உங்க மெயில் id அல்லது FB நேம் சொல்றீங்களா, சும்மா நம்மளோட நட்பை வளர்க்கத்தான் கேட்கிறேன், அட்மின் அண்ணா ட்ட கேட்டு வாங்கிக்கவா? அல்லது எனுடையத்தை இங்கு கொடுத்துவிட்டு அழித்து விடவா? உங்களுக்கு இதுல இஷ்டம் இல்லைனாலும் ஒன்னும் இல்ல, இப்படியே பேசுவோம்!!!
ஆமாம் பா, நானும் இரண்டு முறை தமிழில் பதிவு போடுங்கள் நு சொல்லி பார்த்தேன், யாரும் மதிக்கவே இல்லை :( :( :( அதனால் மதியார் வாசல் மிதிக்க வேண்டாம் நு ஏதும் இப்பலாம் கண்டு கொள்வதில்லை!!!

நேற்று பதிலை நீங்க பார்க்கவில்லை நு நினைக்கிறேன் அதான் அதை மறுபடியும் இங்க கொடுத்தேன்,

அன்புடன் அபி

அவங்களுக்கு வெப்சைட் இருக்கு. அதில் போய் பாருங்கள் என்ன மாடல் என்று. நீங்க சொல்லியிருக்கும் குறிப்பை வைத்து என்னால் அவர்களின் வெப்சைட்டில் கண்டு பிடிக்க முடியவில்லை.

நேத்து ரொம்ப நேரம் உங்களின் பதில் வரும் என்று பார்த்துவிட்டு போய் விட்டேன். ரொம்ப சந்தோஷம் ட்ரை பண்ணுங்க. கண்டிப்பாக மாறி விடுவார்கள். அவர்களுக்கு புரியவைப்பது தான் கடினம். புரிந்துக் கொண்டால் எல்லாமே ஈசி தான். நான் எந்த ஒரு "" சைட்டிலும் இல்லை. உங்களிடம் யாரின் ஐடி இருக்கு என்று சொல்லுங்கள். அவர்களில் யாருடன் எனக்கு பழக்கம் என்று நான் சொல்கிறேன். இல்லையென்றால் நீங்கள் அட்மினிடம் கூட கேட்டு வாங்கிக் கொள்ளலாம். சரியா?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இன்று சுத்தமா பாட்டே போடல ஆனால் பரவால, அழுதுட்டே பால் குடித்து விட்டான், என்னிடம் யாருடைய id யும் இல்லை, கலைநிதியோடது மட்டும் தான் இருக்கும் அவங்கட்ட உங்களுக்கு காண்டக்ட் இருக்காது, சரி அட்மின் அண்ணாவிடம் கேட்டு வாங்கிகொள்கிறேன், அனுமதி அளித்ததற்கு மிகவும் நன்றி

--

அன்புடன் அபி

மேலும் சில பதிவுகள்