பேப்பர் அன்னப்பறவை - 2

தேதி: August 4, 2012

5
Average: 4.7 (12 votes)

 

விருப்பப்பட்ட நிறங்களில் கலர் பேப்பர் - A4 சைஸ்
ஒரு கத்தி

 

பேப்பரை கட் செய்து எப்படி முக்கோணங்கள் செய்வது என்று இந்த லின்கில் பார்க்கவும். http://www.arusuvai.com/tamil/node/15022. முதல் இரு வரிசை பிங்க் கலரில் சேர்த்துள்ளேன், ஒரு வரிசைக்கு 18 ஆக சேர்க்கவும். மூன்றாவது வரியிலிருந்து படத்தில் உள்ளது போல் சேர்க்கவும்.
மீதி இருக்கும் மூன்றாம் வரியிலிருந்து ஐந்தாம் வரிசை வரை ப்ளூ நிறத்தில் மடிக்கப்பட்ட முக்கோணங்களை சேர்க்கவும்.
ப்ளு கலரை சுற்றி பிங்க் கலர் முக்கோணங்களை பார்டராக சேர்க்கவும்.
2 பிங்க், ஒரு ப்ளூ என தொடர்ந்து 20 அல்லது வேண்டிய நீளம் சேர்க்கவும்.
வழக்கமாக மடிக்கும் முக்கோணத்தை விட சற்று பெரிதாக ஒரு முக்கோணம் மடிக்கவும். இந்த பெரிய முக்கோணத்தை கழுத்து பகுதியின் இறுதியில் அனைத்து முக்கோணத்தையும் சேர்த்து முடித்த பின் சேர்க்கவும். அதில் ப்ளாஸ்டிக் கண்களை ஒட்டவும். இப்பொழுது படத்தில் உள்ளது போல் வளைத்து வைக்கவும்.
இந்த கழுத்து பகுதியை ஆரம்பத்தில் சேர்த்த முன் பகுதியோடு இணைக்கவும்.
ஆர்காமி பேப்பரில் செய்த அழகிய அன்னப்பறவை ரெடி. கழுத்து பகுதிக்கு ஒற்றையாகவே சேர்க்கலாம். ஆனால் அது ரொம்ப நாள் ஸ்ட்ராங்காக நிற்பதில்லை. இந்த அன்னப்பறவை செய்ய 150 லிருந்து 160 மடித்த முக்கோணங்கள் தேவைப்படும். இது குட்டியாக அழகாக இருக்கும். எளிதில் செய்து விடலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

குட்டியா கியூட்டா இருக்கு :) வாழ்த்துக்கள். எங்க கொஞ்ச நாளா காணாம போயிட்டீங்க?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கலக்கலா இருக்கு. பிடிச்சிருக்கு.

‍- இமா க்றிஸ்

பறவைகளும் அதன் வண்ணமும் அருமை. வாழ்த்துக்கள்.

ஜெயந்தி

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

ரொம்ப ரொம்ப நன்றி ரேணு அன்னப்பறவை செய்து காட்டியதற்கு. இரண்டு பறவையும் அழகாக இருக்கு. அன்னப்பறவைக்கு இடையில் உள்ள ரோஸூம் ஒரிஜினல் பூ போலவே இருக்கு. அதுவும் பேப்பர்ல செய்தது தானே. கூடிய சீக்கிரம் செய்து விடுகிறேன் ரேணு. வாழ்த்துக்கள்.

hi renu nallama???ungaloda aanaparavai naa try pannitu iruken pa paper folding ellam mudichiten but ennaku oru doubt ungaloda 1st phot ennaku puriyala oru varusaiku 18 paper ku soli irukanga... neenga sollara mathiri panna mudiyala join pannum pothu break aaguthu frnd...pls unngaloda 1st phot mattum ennaku konjam cleara ebdi pannarathunu solitanga frnd pencilstand start paniten mudija poren..... thx u

alagaha irukku naanum ithai seidhu parthean nandraga vanthathu nandri

ovvoru nodiyaiyum rasithu val