நம்ம வீட்டில் அடுத்த கல்யாணம். ஐடியா வேணும் தோழிகளே!!!!!

நம்ம எல்லாருக்குமே தெரியும் கல்யாணம் பண்றதுல எவ்ளோ வேலை இருக்கும் அதும் அந்த வேலைய செய்றதுல இருக்க இன்ட்ரெஸ்ட் இருக்கே அப்பப்பா!!!! நம்ம வீட்ல அடுத்த கல்யாணம் பண்ணலானு ப்ளான் பண்ணிட்டு இருக்காங்க.. வேற யாருக்கும் இல்லங்க என்னவரின் தம்பிக்கு. பொண்ணு பாத்துட்டே இருக்காங்க.. என்னடா இப்போ தானே பொண்ணு பாக்க ஆரம்பிச்சுருக்காங்க அதுக்குள்ளே இந்த பொண்ணு ஐடியா கேட்குதுன்னு தானே நினைக்கிறீங்க? உங்க ஐடியா எல்லாம் கேட்கணும் இல்லையா அதுக்கு தான் இவ்ளோ முன்னாடியே கல்யாணம் நு போட்டுட்டேன்.. அண்ணா அண்ணின்ற முறைக்கு கண்டிப்பா அவருக்கு ஏதாது டிப்ரென்ட் ஆ செய்யணும் நு நினைக்கிறோம். தோழிகளே உங்க ஹெல்ப் கண்டிப்பா எனக்கு வேணும். கல்யாணம் ரிசெப்சென் இப்படி எல்லாத்துலயும் உங்களுக்கு கிடைக்கிற ஐடியா சொல்லுங்க தோழிகளே. இப்போ இருந்து பிளான் பண்ணினா தான் சொதப்பாம கல்யாணத்த நல்ல படியா நடத்த முடியும் நு நினைக்கிறோம். ஆகையால் தோழிகள் அனைவரும் இங்கு வந்து உங்கள் தங்கைக்கு ஐடியா கொடுக்கணும் நு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்.

http://arusuvai.com/tamil/node/23000

ஏற்கனவே இதே மேட்டருக்கு சீதாலஷ்மி இழை துவங்கி, நிறைய ஐடியாஸும் தோழிகள் கொடுத்திருக்காங்க... பாருங்க :) பயன்படும். இதே பதிவை அங்க போட்டு அந்த இழையையே தொடருங்க... ஒரே இடமா பார்க்க வசதியா இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி வனிதா அக்கா. நான் அதில் போய் பார்க்கிறேன். லிங்க்-ஐ அனுப்பியமைக்கு மிகவும் நன்றி.

மேலும் சில பதிவுகள்