பட்டிமன்றம் - 71 ஆண்களுக்கு யாரை சமாளிப்பது கடினம்?? அம்மா? மனைவி?

தோழிகளே, தோழர்களே....

இந்த வார பட்டிமன்றத்தை ஆரம்பிச்சுட்டோம்... வாங்க வந்து களத்துல குதிங்க... தலைப்பு சுகந்தி அவர்கள் கொடுத்தது.... வீட்டுக்கு வீடு வாசற்படி தான்... அதுனால நம்ம தலைப்பு பத்தி எல்லாருக்கும் அனுபவம் இருக்கும்... அனுபவம் இல்லாட்டியும் கேள்விபட்டு இருப்பீங்க... எது எப்படியோ நம்ம ஜோதியில எல்லாரும் வந்து ஐக்கியம் ஆகுங்க...

என்ன டா இவள்!!! தலைப்பை பத்தி சொல்லாம ஏதேதோ பேசுறானு திட்டாதீங்க பா. சொல்றேன்... உரலுக்கு ஒரு பக்கம் இடி னா... மத்தளத்துக்கு 2 பக்கமும் இடியோ இடி.. அடியோ அடி... அந்த மத்தளம் தான் ஆண்கள்... திருமணமான ஆண்கள்....அதான் அந்த அப்பாவி ஜீவன்கள் நம்ம கணவன்மார்கள் பத்தி பேசலாமே... ஆண்களுக்கு அம்மாவை சமாளிப்பது கஷ்டமா? மனைவியை சமாளிப்பது கஷ்டமா ?

எந்த குஷ்டம் ச்சே.... எந்த கஷ்டம் பெருசுனு வந்து சொல்லுங்கப்பா.... வாங்க 2 அணியையும் பலப்படுத்துங்க உங்க வாதத்தால.... பட்டிமன்ற விதிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம் ....

அட்டகாசமான தலைப்பு கார்த்திகா ...இந்த வார பட்டி ரொம்ப விறுவிறுப்பா போகும் ...வாழ்த்துக்கள் ...

வாழ்த்து மட்டும் போதாது... வாதம் பண்ணனும்... சீக்கிரம் வாங்க வேலையை முடிச்சுட்டு...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

சபாஷ் சரியான தலைப்பு :)

புதிதாக பட்டிமன்ற நடுவரா பொறுப்பில் இருக்கும் தோழிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நல்ல சண்டை போட விடும் டாப்பிக் தான் எடுத்திருக்கீங்க :) கலக்குங்க.

தலைப்பை தந்த சுகிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். ;)

எந்த அணி என்பதை இன்று மாலை முடிவு பண்ணிட்டு வரேன். என் கூட்டணி தோழி வரட்டும். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புதிதாய் நடுவர் பணியில் அமர்ந்திருக்கும் தோழி கார்த்திகாவிற்கு வாழ்த்துக்கள்.........சுகியின் தலைப்பிற்கு நன்றிகள்........

நான் எனது அணியை இப்போதே தேர்ந்தெடுக்கிறேன் நடுவரே, உங்களை காக்கவைக்க மனம் ஒப்பவில்லை........

அம்மா,மனைவி இரண்டுமே கஷ்டம்னு சொல்லிட்டீங்க.இரண்டில் அம்மாவை சமாளிப்பதுதான் கஷ்ட்டம் நடுவரே......அணியை சொல்லிப்புட்டேன்,எதிரணி இருந்தால்தானே வாதங்கள் நல்லா சூடுபிடிக்கும். அவங்க வந்ததும் ஆரம்பிக்கிறேன்.........

நடுவரே சூப்பர் தலைப்பு போங்க :). தலைப்பை கொடுத்த சுகிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். இந்தவாட்டி பட்டியில் சூடு பறக்கும் அப்படீன்னு எதிர்பார்க்கிறேன். பறக்கணும் :)

இப்போதைக்கு அணியை தேர்வு செய்துடறேன். விரிவான வாதங்கள் விரைவில் வரும் :)
அம்மாவை சமாளிப்பதுதாங்கோ ஆண்களுக்கு ரொம்ப கஷ்டம். மனைவியை சமாளிப்பதும் கஷ்டம்தான் ஆனால் அதைவிட இது கொஞ்சம் ஈசிங்கோ. எப்படீனு வாதத்தில் சபீனா போட்டு விளக்கி சொல்றேனுங்கோ :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க வித்யா .... எந்த அணியில் வாதிட போறீங்கனு சொல்லுங்க....

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அக்கா... நாரதர் கலகம் நன்மையிலே முடியும்... ஹா ஹா ஹா... சீக்கிரம் எந்த அணினு முடிவு பண்ணிட்டு வாதத்தை தொடங்குங்க...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நன்றி அக்கா... அப்புடி சட்டு புட்டுனு யோசிக்காம முடிவு பண்ணனும்... சூப்பர்... அம்மா அணிக்கு வலு சேர்க்க வந்துருக்கீங்க.... வாங்க... வாங்க...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

எங்க தலைவி எந்த பக்கம்னு முடிவு பண்ணிட்டாங்க... அப்பறம் என்ன நடுவரே... நானும் அம்மாவை சமாளிப்பது கஷ்டம்னு தானே சொல்லுவேன் :) வாதம்... டிஃபனை முடிச்சுட்டு தெம்பா வரேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்