மசாலா பப்படி சாட்

தேதி: August 8, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

பப்படி - 6
சேவ்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கொத்தமல்லி தழை
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப்
உருளை - 2
பச்சை மற்றும் இனிப்பு சட்னி
தயிர்
மாதுளை முத்துக்கள்
சாட் மசாலா
உப்பு
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

பப்படி, பச்சை மற்றும் இனிப்பு சட்னி செய்து தயாராக வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதில் சாட் மசாலா தவிர எல்லா தூள் வகையும் சேர்த்து பிரட்டவும்.
பின் வேக வைத்த உருளை சேர்த்து பிரட்டவும்.
கடைசியாக வேக வைத்த கடலை சேர்த்து பிரட்டி கொத்தமல்லி தழை தூவி எடுக்கவும்.
பாத்திரத்தில் கொஞ்சம் பப்படி உடைத்து போட்டு அதில் இந்த கலவை கொஞ்சம் சேர்த்து பிரட்டவும்.
இத்துடன் கொஞ்சம் தயிர் சேர்த்து பிரட்டவும்.
பரிமாறும் தட்டில் இன்னும் 3 பப்படி உடைத்து போட்டு அதன் மேல் கலவை வைத்து தேவைக்கு இனிப்பு மற்றும் பச்சை சட்னி ஊற்றவும்.
பின் இன்னும் சிறிது தயிர் ஊற்றி மேலே விருப்பம் போல் சேவ், மாதுளை முத்துக்கள், மல்லி தழை, சாட் மசாலா தூவி பரிமாறவும். சுவையான மசாலா பப்படி சாட் தயார்.

சாட்டில் எப்போதும் இப்படி தான் செய்ய வேண்டும் என்று எதுவும் இல்லை. நம் விருப்பம் போல அளவுகள் மாற்றலாம். காம்பினேஷன்ஸ் ட்ரை பண்ணலாம். இதிலேயே கூட மேலே பச்சை வெங்காயமும் பொடியாக நறுக்கி தூவலாம். உருளை பட்டாணி கலவை சற்று கிரேவி போல் இருந்தால் இன்னும் நல்லா இருக்கும். நான் பப்படி நமத்து விடும் என்பதால் அப்படி சேர்க்கவில்லை. இந்த மசாலா பப்படி சாட் சூடாக சாப்பிட ஏற்றது. இதில் சேவுக்கு பதில் பூந்தி பயன்படுத்தலாம். மாதுளை முத்துக்கள், சாட் மசாலா எல்லாம் ஆப்ஷனல் தான்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனி அக்கா ...உங்களது குறிப்பும் -படங்களும் -விளக்கமும் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் !

சாட் ஐட்டம் எல்லாம் அள்ளுது
சூப்பர்
வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சூப்பரா கலர்ஃபுல்லா இருக்கு வனி.

‍- இமா க்றிஸ்

ஆஹா... வழக்கம்போல கலக்கறீங்க வனி! :) சாட் ஐய்ட்டம் கலர்ஃபுல்லா சூப்பரா இருக்கு!

அன்புடன்
சுஸ்ரீ

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) எல்லா குறிப்பிலும் விடாம பதிவிட்டு ஊக்கப்படுத்தும் அன்புக்கு மீண்டும் நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. ரொம்ப நாளைக்கு பின் வந்து போயிருக்கீங்க ;) காலையில் சில்லுன்னு காற்று வீசியது அறுசுவையில்னு சொன்னாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பப்படி சாட் கலக்கலா கலர்ஃபுல்லா இருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி. டைம் கிடைச்சா செய்து பாருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இது மாதிரி சாட் வகைகள் சுவையும் சத்தும் கொண்டது. பசி நேரத்துல பார்த்தா..... யப்பா... வாழ்த்துக்கள்.

ஜெயந்தி

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா