தினமும் சீக்கிரம் ஏழ

காலையில் தினமும் சீக்கிரம் எழுந்து உடற்பயிற்சி ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன். ஆனால் ஒரு ரெண்டு நாளைக்கு மேல சீக்கிரமா ஏழ முடியல. அதிகாலைல எழுந்து உடற்பயிற்சி செய்யறவங்க, வேலைக்கு கெளம்புறவங்க சீக்கிரம் ஏழ ஐடியா குடுங்க ப்ளீஸ்.

நேரமா தூங்க போகணும்..அலாரம் வைக்கும்போது கைக்கெட்டும் தூரம் வைக்கக் கூடாது

முடியல தளீ... ;)

‍- இமா க்றிஸ்

காயத்ரி, நானும் உங்க லிஸ்ட் தான் ...

அலாரத்தை தள்ளி வைக்கனும்... நல்ல ஐடியா.... நாளைக்கு ட்ரை பண்ணி சொல்லறேன் தளீ (உங்க பேர் நல்லாயிருக்கு)

சீக்கிரம் படுத்தா... சீக்கிரம் எழுந்திருக்கலாம் (ரொம்ப மொக்க ஐடியாவா?)

ஆனால், நம் அறுசுவையில் கவி (uk5mca ) அவர்கள் சொன்ன சென்டிமென்ட் குறிப்பினால் ... நான் கடந்த இரு வாரங்காளாக கிச்சனை இரவே கீளீன் செய்து விடுகிறேன்... ரொம்ப சோம்பேறித்தனமாக இருந்தால் (லக்ஷ்மி அப்போது தான் நம் வீட்டில் இருக்குமாம் பாட்டி சொல்வாங்க!!). என்பதை நினைத்துக் கொள்வேன்.... இப்படி செய்வதால்... காலையில் எழுந்தவுடன் பிரஷ்ஷா பீல் பண்ணறேன்.
காயத்ரி ... நீங்களும் இது போல் ஏதாவது சென்டிமென்ட் வச்சுக்கலாம்...!

கவி (uk5mca) உங்க குறிப்பை கீழ்கண்ட இழையில் படித்தேன் ... நன்றிப்பா...
http://www.arusuvai.com/tamil/node/19885
///அடுப்பு டெய்லி சமையல் முடிந்ததும்,சற்று சூடாக இருக்கும் போதே துடைத்தால் எல்லா பிசுக்கும் உடனே வந்துவிடும்.இரவு படுக்கும் முன் கண்டிப்பாக துடைத்து வைத்துவிட்டு தான் தூக்கமே!!!(லக்ஷ்மி அப்போது தான் நம் வீட்டில் இருக்குமாம் பாட்டி சொல்வாங்க!!).///

இதே போல் இன்னொரு இழையில் இளவரசி அவர்களின் குறிப்பும் எனக்கு ரொம்ப உதவிய இருந்தது.
http://www.arusuvai.com/tamil/node/14841
இவங்க ஐடியாவை செய்வதால்...என்க்கு இப்ப கொஞ்சம் டைம் கிடைக்குது...நைட் , ரொம்ப நேரம் டிவி பார்ப்பதை , தவிர்த்து விட்டு...இனி காலையில் சீக்கிரம் எழுந்து நானும் யோகா செய்ய ஆரம்பிக்கனும்...
முயற்ச்சி உடையார்... இகழ்ச்சி அடையார்

அலாரத்தை தள்ளி வைக்கனும்... இன்னைகே ட்ரை பண்ணிடரேன்... நன்றி தளிகா அக்கா
சீக்கிரம் படுத்தா... சீக்கிரம் எழுந்திருக்கலாம்... (ஆனா ஒலிம்பிக்ஸ் பாக்கனுமே...) இன்னும் ஆறே மாசம் தான் இருக்கு கல்யாணத்துக்கு...
நாளையில இருந்தாவது சைக்கிளிங் ஒழுங்கா போகனும்...

ஷர்மி அக்கா... நாளைக்கு யோகா பண்ணிட்டு சொல்லுங்க...

கல்யாணமா???.. ஆல் தி பெஸ்ட்...பா... கண் முழிக்காம தூங்குங்க. இல்லனா..கண் கருவளையம் வந்திடும்

//அலாரம் வைக்கும்போது கைக்கெட்டும் தூரம் வைக்கக் கூடாது
தளிகா பதில நெனசு தனியா சிரிச்சிட்டுருக்கென்..100% உண்மை.பக்கத்துல வச்சா அலாரத்தை ஆஃப் பண்ணிட்டு தூங்க போயிடுவோம்

* கல்யாண போட்டால நானு குண்டா இருப்பேன்..அதுவும் பட்டுபுடவையில அய்யோ அய்யோன்னு நெனச்சு பாருங்க..நைட் தூக்கமே வராது..அப்புறம் காலையில கண்டிப்பா எந்தீப்பீங்கப்பா...
* யாரயாவது எழுப்ப சொல்லுங்க..சின்ன பனிஷ்மென்ட் :லேட்டா எந்திச்சா காபி குடிக்க கூடாது.
* கல்யாணமா? வாழ்த்துக்கள்..கோவிச்சிகாதீங்க..பொண்ணும்,மாப்பிள்ளையும் 2 pm வரைக்கும் பேசற பழக்கம் இருக்கு இப்போ எல்லாம்..அப்டி இருந்தால் அட்ஜஸ்ட் பண்ணுங்க..
* எடை குறைக்கணும்னா ஒரு நாள்ல ஒரு தடவையாவது உங்க ஸ்டெப்ஸ் எல்லாத்தயும் பண்ணுங்க..யோகா மார்னிங் பண்ணலன்னா கண்டிப்பா ஈவ்னிங் பண்ணுங்க..
Please do dieting & excercise without fail..

எல்லாமே என்னோட கல்யாணத்துல நான் பாலோ பண்ணது..ஹீ ஹீ

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

ஃப்ரன்ட்ஸ் இங்க கொஞ்சம் வாங்கப்பா.
நானும் இதே கேஸ் தான்.வீட்டில் எவ்லோ திட்டு வாங்கியும் சூடு சுரனை எதுவும் வரமாட்டேங்குதுப்பா.தளிகா நீங்க சொன்ன மாதுரி நானும் செய்து பார்திட்டென் பா ஆனால் எனக்கு அலாரம் அடிப்பதெ விளங்க மாட்டேங்குதுப்பா.{ப்லீஸ் friends கோவப்படாதீங்க}
எவ்லோ சீக்கிரம் தூங்க போனாலும் லேட்டா தான் தூக்கம் வருது.வாரத்திற்க்கு ஒரு நாள் போய் மாமியா வீட்டில் தங்குவேன் ஆனால் அங்கே மட்டும் டான்னு விழிப்பு வந்திடுது//// நல்ல பேர காப்பாத்தனும் இல்லையா////.

ம்ம்ம்ம்ம்ம்ம் நா என்னப்பா செய்ரது என்னோட இந்த பழக்கத்தை நினைத்து எனக்கே கவலயாக உள்ளது.நான் என் இந்த பழக்கத்தை மாற்ற யாராவது ஏதாவது ஐடியா சொல்லுங்கப்பா.நான் அருசுவை தோழிகள் சொன்னா கன்டிப்பா கேட்பேன் நிஜமா

ஷர்மி அக்கா, .ஜெயா அக்கா... வாழ்த்துக்களுக்கு நன்றி...

//அலாரம் வைக்கும்போது கைக்கெட்டும் தூரம் வைக்கக் கூடாது
தளிகா பதில நெனசு தனியா சிரிச்சிட்டுருக்கென்..100% உண்மை.பக்கத்துல வச்சா அலாரத்தை ஆஃப் பண்ணிட்டு தூங்க போயிடுவோம்// (நாங்களாம் தூரத்தில வச்சலும் எழுந்து ஆஃப் பண்ணிட்டு தூங்குவோம்ல...இன்னைக்கு காலைல கூட இதே கதை தான்...:-(
//கல்யாண போட்டால நானு குண்டா இருப்பேன்..அதுவும் பட்டுபுடவையில அய்யோ அய்யோன்னு நெனச்சு பாருங்க..நைட் தூக்கமே வராது..அப்புறம் காலையில கண்டிப்பா எந்தீப்பீங்கப்பா//- ரொம்ப நல்ல ஐடியா
// கல்யாணமா? வாழ்த்துக்கள்..கோவிச்சிகாதீங்க..பொண்ணும்,மாப்பிள்ளையும் 2 pm வரைக்கும் பேசற பழக்கம் இருக்கு இப்போ எல்லாம்..அப்டி இருந்தால் அட்ஜஸ்ட் பண்ணுங்க// 2 pm வரைக்குமா? போன்ல ரெண்டு நிமிஷம் பேசினாலே பெரிய விஷயம்...
அடுத்த ப்ளான்...
இனிமே சீக்கரம் சாப்பாட்ட முடிச்சிட்டு 9 மணிக்கெல்லாம் தூங்க ட்ரை பண்ணனும் (அப்பறம் இந்த டிவிய ஆஃப் பண்ணனுமே...)

68 கிலோ இருக்கேன் இப்போ... கொஞ்சம் வெயிட் கொறைச்ச நல்ல இருக்கும்...

மேலும் சில பதிவுகள்