தையல்

சுடிதார் நெக் நாட் வைப்பது எப்படினு சொல்லுங்க ப்ளீஸ்

ஹாய் அம்மு.

உங்களுடைய கேள்வி சுடிதார் நெக்கில் வைத்து தைக்கப்படும் நாட், செய்முறை தேவை என்று நினைக்கிறன்.
உங்களுக்கு கேள்விக்கான பதில் இதுவாக இருக்கும் என்று நம்புகிறேன்.

1. நீங்கள் தைக்க விரும்பும் துணியை கிராஸ் பீசில் வெட்டிக்கொள்ளவும்(விரும்பிய அகலத்திற்கு).
2. ஒரு மோட்டா ஊசியை எடுத்து அதில் தடிமனான நூலை கோர்த்து கொள்ளவும்.
3. இப்போது தையல் மெஷினில் வெட்டிய துண்டை நீள வாக்கில் மடித்து கால் அங்குலம் (1/4 inch)இடைவெளியில் நேராக தைக்கவும். அது கிராஸ் பீஸ் என்பதால், தொடங்கிய இடத்தில் அதன் கூர் முனை வெளியே தெரியும்.
4. அந்த முனையில் மோட்டா ஊசியை குத்தி அதனை தைத்த இடைவெளியின் உள்ளே விட்டு துணியை சுருக்கி கொண்டே ஊசியை வெளியே இழுக்கவும்(பாவாடையில் நாடா கோர்ப்பது போல்.).
5. இப்போது துணியானது திரும்பி பைப் போல் இருக்கும். பிறகு நீங்கள் அதனை ஐயன் செய்து கொள்ளலாம்.

(குறிப்பு: முதலில் இந்த அளவில் முயற்சி செய்து பின் மெல்லியதாக செய்யவும்.
ஊசியை பின் பக்கமாக உள்ளே விடவும். இல்லையென்றால் அது துணியை குத்தி கொண்டே வரும்.)

இப்போது நீங்கள் விரும்பிய நீளத்திற்கு வெட்டி சுடிதார் அல்லது ப்ளவுஸ் நெக் மற்றும் கைகளில் வைத்து அலங்கரிக்கவும்.

புரிலனா கேளுங்க. மறுபடியும் சொல்றேன்.

மேலும் சில பதிவுகள்