பைக் வாங்க ஐடியா வேணும் சொல்லுங்கப்பா........

தோழர்களே,தோழிகளே......
நாங்கள் புது பைக் வாங்கலாம்னு பிளான் பண்ணிருக்கோம்.பஜாஜ் பல்சர் 150, CBZ எக்ஸ்டிரீம் செலக்ட் பண்ணிருக்கோம்........இந்த இரு வகைகளில் உள்ள பெஸ்ட் அன்டு வொஸ்ட் என்ன என்னன்னு சொல்லுங்க.......

கண்டிப்பா ஐடியாஸ் வேணும் வந்து சொல்லுங்கப்பா காத்திருப்பேன்........

என்ன யாரும் ஐடியா கொடுக்க வரலை.....பேக் டிஸ்க் இருப்பதுபோல எடுக்கலாமா?வேண்டாமா?

பைக் வாங்கப் போறீங்களா? வாழ்த்துக்கள் :-) பஜாஜ் பல்சர் 150சிசி ; இந்த பைக் நல்ல பெர்பாமன்ஸ் மற்றும் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ஹெட் லைட் ஸ்டைலிஷ் லுக் ஆக அமைந்துள்ளது. இதில் பழைய மாடல்பைக் மைலேஜ் குறைவாக கிடைக்கும். ஆனால் தற்போது விற்பனையில் இருக்கும் புதிய பஜாஜ் பல்சர் நல்ல மைலேஜ் தருகிறது. லிட்டருக்கு 50கி.மீ முதல் 55 கி.மீ மைலேஜ் தருகிறது. இது தொலைதூரப்பயணங்கள் செல்லும் வகையில் இன்ஜின் பவர் உள்ளது . நைட்ராக்ஸ் சஸ்பென்ஷன் அமைந்துள்ளது. பஜாஜ் தனது பைக்குகளில் டபுள்ஸ்பார்க் டெக்னாலஜி பயன்படுத்தி வருகிறது. இப்பைக்கில் பல மாற்றங்கள் செய்யப்பட்டாலும் தொடர்ந்து நல்ல விற்பனையில் உள்ளது. இதில் ஃப்ரண்ட் டிஸ்க் அமைந்துள்ளது. ப்ரேக்கிங் சிஷ்டம் நன்றாக உள்ளது. ஸ்டார்டிங் புல்லிங் பவர் குறைவாக இருந்தாலும் பைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும்.

ஹீரோ CBZ எக்ஸ்டீரீம் : இது பெர்பாமன்ஸில் சிறந்த பைக் என்றாலும் மைலேஜ் தருவதில் குறை உள்ளது . லிட்டருக்கு 45கி.மீ முதல் 50.கி.மீ வரை கிடைக்கும் . இதுவும் உபயோகிக்கும் முறை தவறாய் இருந்தால் மைலேஜ் மாறும் . இன்ஜின் பவர் 150சிசி நன்றாக இருக்கும். பல்சரை விட ஷ்டார்டிங் புல்லிங் பவர் அதிகம். நெடுந்தூர பயணங்களுக்கு ஏற்றது . ஸ்டைலிஷ் லுக் ஓரளவு. ப்ரேக்கிங் சிஷ்டம் நன்று. ஃப்ரண்ட் டிஷ்க் ட

நட்புடன்
குணா

பதிலுக்கு நன்றிகள்.மேலும் சில தெரிந்து கொள்ளனும்.பல்சரில் சில வருடங்கள் சென்றதும் எஞ்சின் சவுண்டு வருன்னு கேள்விபட்டேன்.மேலும் இதில் டியூப்லெஸ் டயர் சிஸ்டம் இல்லையே.....
தென்,CBZ ல் எலக்ரிக் ஸ்டார்ட் மட்டும் உள்ளது.இதன் பேட்டரி பற்றியும் தெரியனும்.....
கிக்கர் இல்லாததால் ஏதேனும் பிரச்சனைகள் வந்துள்ளனவா?இரண்டிலும் மெயிண்டனென்ஸ் எப்படி?

சார்,னு எல்லாம் கூப்பிடாதீங்க பேர் சொன்னா மட்டும் போதும் . பல்சர் DTS கொஞ்ச வருடம் போனால் சவுண்ட் வரும் என்றால் அதன் என்ஜின் பிஸ்டன் ரிங்ஸ் தேய்வதனால் ஏற்படலாம் . 30,000 கி.மீ பிறகு அனைத்து வண்டிகளிலும் இன்ஜின் சத்தம் அதிகமானால் இன்ஜின் ஹெட் பிரித்து சர்வீஸ் செய்வார்கள் ,
CBZ kicker இல்லாவிட்டாலும் 12V Battery கொடுத்திருப்பார்கள், செல்ஃப் ஸ்டார்ட் யூஸ் பண்ணினாலும் பின் வரும் காலங்களில் பிரச்சினை வராமல் இருக்க ஆட்டோமெடிக் ஜோக் கொடுத்திருப்பார்கள் . இரு பைக்குகளின் மெயின்டென்ஸ் பொருத்தவரை ஹீரோ கம்பெனியின் ஸ்பேர்ஃபார்ட்ஸ் விலை அதிகம். பஜாஜ் கம்பெனியின் ஸ்பேர்ஃபார்ட்ஸ் விலை குறைவு . இன்ஜின் ஆயில் சர்வோ , கேஸ்ட்ரோல் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் .

நட்புடன்
குணா

அன்பு தோழிகளுக்கு வணக்கம். எனக்கு பழைய லேடீஸ் சைக்கிள் (second hand) ஒன்று வேண்டும். நாங்கள் திருவொற்றியூரில் இருக்கிறோம். இங்கு எங்கு கிடைக்கும் என்று தெரிந்தவர்கள் கூறவும்.

மேலும் சில பதிவுகள்