பாதாம் பால் செய்வது எப்படி?

பாதாம் பால் செய்வது எளிது. பாதாம் பருப்புகளை சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்து, மேல் தோலினை உரித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு ஏலக்காயை நுணுக்கிக் கொள்ளவும். தேவையான அளவு சீனியை எடுத்துக்கொள்ளவும்.

பாதாமை பொடித்து, பாலுடன் கலந்து, அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதித்து வரும் நேரத்தில் சீனியை கலந்து மேலும் ஒரு கொதி விட்டு இறக்கவும். பாதாமுடன் பிஸ்தா பருப்புகளையும் பொடித்து சேர்க்கலாம். ஒரு பாதாம் பருப்பை மெல்லிய சீவல்களாக சீவி பாலில் சேர்க்கவும்.

ஏலப் பொடியைத் தூவி இறக்கவும். இதனை சூடாகவும் அருந்தலாம். ஆற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர வைத்தும் அருந்தலாம்.

dear admin
உங்கள் கருத்து படங்களுடன் மிகவும் நன்றாக உள்ளது.மிக்க நன்றி. நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். sorry admin பாதம் பாலுக்கான அளவை எவ்வாறு இருக்க வேண்டும். பாதம்,பால், சீனீ என்பன

கால் லிட்டர் பாலுக்கு 8 அல்லது 10 பாதாம் பருப்புகள் சேர்க்கலாம். ஒன்றரை அல்லது இரண்டு மேசைக்கரண்டி சீனி சேர்க்கலாம். மிக அதிக அளவில் செய்யப்பட்டதை, மாதிரிக்காக சிறிது எடுத்து படத்தில் காட்டியுள்ளோம். இந்த குறைந்த அளவு உத்தேசமாகக் கொடுத்ததுதான். சுவைக்கு தகுந்தாற்போல் அளவுகளை மாற்றிக் கொள்ளுங்கள். பாதாமை அரைக்கும் போதே பால் ஊற்றியும் விழுதாக அரைத்து கரைத்துக் கொள்ளலாம். சிலர் இந்த முறையில் தயாரிக்கின்றனர். பாலை நன்கு சுண்டக் காய்ச்சி, சற்று கெட்டியாகவும் பாதாம் பால் தயாரிக்கின்றனர்.

மிக்க நன்றி

படத்துடன் விளக்கம் கொடுத்ததற்கு மிகவும் நன்றி

hello admin,
I am not able to view "thirunelveli halva" . can i know what is the reason? tell us how to prepare. sorry i dont know how to type in Tamil.

அப்பாடா யாருக்காவது அல்வா குடுக்க முடியுமான்னு நினைச்சிட்டிருந்தேன்.. சரியான சமயத்தில் வந்தீங்க!!!
:-))
http://www.arusuvai.com/tamil/node/5988

"தேடலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதுமே வாழ்க்கை! நமக்குத் தெரிந்த விஷயங்களை பிறருக்குச் சொல்வதும் தெரிந்திராத விஷயங்களை பிறரிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொள்வதும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மேலும் அழகு."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நானும் ஆசையா அல்வா சாப்புட்டுடேன் :-)..ஆனாலும் உங்க கருத்து சூப்பர்.....அதுக்காகவே உங்க பதிவை கண்டிப்பா படிப்பேன்

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஹாஷினி!!! ஒன்னும் இல்லைங்க.. எங்கயாவது படிக்கவேண்டியது.. அதை அப்படியே ஒரு நோட்பேடில் இருக்கும்.. எல்லாம் சுட தெரிஞ்சா போதும்.. சில வார்த்தைகள் ரொம்ப மனசை தொடும்... அதை அப்படியே பிடிச்சிக்க வேண்டியது தான்...

"தேடலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதுமே வாழ்க்கை! நமக்குத் தெரிந்த விஷயங்களை பிறருக்குச் சொல்வதும் தெரிந்திராத விஷயங்களை பிறரிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொள்வதும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மேலும் அழகு. "

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

என் சீக்ரெட் கேட்டதும் ஓடிட்டிங்களா?? உங்களை ஆன்லைனில் பார்த்ததும் உங்க பொண்ணோட காக்கா பாட்டும் சிம்புவும் பக்கத்தில இருந்து ஆடுற மாதிரி நான் கற்பனை செய்துக்கிறேன்....

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்