சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

இரத்த வெள்ளம் சிந்திய பிறகே நம் சுதந்திர தாகம் தணிந்தது!

சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களின் உயிர் பறிக்க பாசக்கயிறுக்குப்பதில் பாசவலையை தயாரித்தான் எமன்!

சுதந்திரம் கிடைத்து விட்டதென அரசு விழாக்களும்,டீ.வி நிகழ்ச்சிகளும்
அரசு விடுமுறையும் மட்டுமே சொல்கின்றன!

அரசியல் வாதிகள் விளக்கு தேய்த்தால் பூதமாய் தோன்றி வரம்தரும் பொட்டிபாம்பாய் மாறி விட்டாள்
சுதந்திர தேவி!

சரி..நாம் பறந்தோடியது அடிமை கூண்டிலிருந்தா?கூட்டிலிருந்தா?

சுதந்திர இந்தியா இருப்பது எவரெஸ்ட் சிகரத்தையும் தாண்டி..

அடிமை இந்தியன் இருப்பது தற்கொலை பாறையின் பள்ளத்தையும் தாண்டி..

நமக்குள் இருக்கும் பேதங்கள் கலைவோம்!வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்!

இனி சுதந்திரம் கிடைத்து விட்டதென நம் செயல்கள் மட்டுமே சொல்ல வேண்டும்!

வாழ்க பாரதம்!ஜய் ஹிந்த்!

அறுசுவையின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

அறுசுவை தோழிகள் மற்றும் தோழர்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துகள்...

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

தோழிகள் அனைவருக்கும் என் இனிய சுகந்திரதின நல்வாழ்த்துக்கள்...........

by,
AnuGopi,
Be happy and Make others happy........

சும்மாவா கிடைத்தது சுதந்தரம்?
வெளியேற்றியது வெள்ளையனை மட்டுமல்ல....
நம் நாட்டுப்பற்றையும் சேர்த்தேதான்
இன்று சுதந்தர தினம்.....!
சுரண்டலுக்கு அடிமையாகிப்போன
சுயநல கூடாரத்தில்
வறுமைக்கு எதிராய்
வேண்டும் ஒரு சுதந்தரம்? என்று
நாட்டின் முதல் குடிமகன் கூறுகிறார்...!
எங்கே வாழ்கிறோம்?
பணநாயகமாய் மாறிப்போன
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில்....
சுதந்தர தியாகிகளின் உதிரம் தோய்ந்த
மண்ணில்தான் ..............
நாமும்..............
வாழிய சுதந்தரம்!

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தோழிகளே

பசி, பஞ்சம்,பட்டினி சாவு, பிச்சை எடுக்கும் லஞ்சம் , பிடுங்கி தின்னும் ஊழல், அலட்சியமான அரசு அதிகாரிகள்,நாகரீகமற்ற நச்சுஅரசியல்வாதிகள், நம் நாட்டை தலைகுனிய வைக்கும் இவைகள் ஒழிந்து புதிய இந்தியாவை வென்றெடுக்க சபதமேற்போம், அறுசுவையின் அனைத்து தோழிகள், தோழர்கள், சகோதர சகோதரிகள்,அனைவருக்கும் எனது இனிய சுதந்திர நல்வாழ்த்துக்கள் .

நட்புடன்
குணா

Arusuvai members&viewers-ku en iniya Suthanthira thina Nalvazhtukal

MUSIC is the best medicine for all

அனைத்து இந்திய தோழிகளுக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்

எல்லாப் புகழும் இறைவனுக்கே

இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும்
67 வது
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

ஜெய் ஹிந்த் ! ஜெய் ஹிந்த் ! ஜெய் ஹிந்த் !

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்