நல்ல gift

ஒரு வருஷம் கழிச்சு ஊருக்கு போறேன் ..என்னோட மனைவிக்கு நல்ல gift ட குடுக்கணும்...
அவுங்கள ரொம்ப சந்தோசபடனும் ...உங்க ஐடியா குடுங்க friends ...
தங்கம்,சாரீஸ்...தவிர...

ஹலோ அப்துல்,

பெண்களுக்கு பொதுவாக அலங்காரப் பொருட்கள் பிடிக்கும்,சமயலறை மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்களும் இதில் அடங்கும்.

மேக்கப் செட், நகப் பூச்சு, ஹெர் கிளிப்ஸ், செருப்பு ,மல்ட்டி கலர் ஹான்ட் பேக், ஸ்கார்ஃப், கைக் கடிகாரம்.

உங்கள் மனைவி பர்தா அணிபவரா? என்றால் குவைத்தில் வித விதமான பர்தாக்கள் கிடைக்கும்.

வீட்டை அலங்கரிக்கும் திரைச் சீலைகள், தொங்கும் அலங்காரப் பொருட்கள்,மேஜை விரிப்புகளும் நல்ல சாய்ஸ்.

சமயலறையில் உபயோகிக்கும் கத்தி ஸ்டாண்ட்(knife stand),கண்ணாடி கோப்பைகள் (serving bowls), வால் ஹங்கிங் படங்கள்,சமயலறை கடிகாரங்கள்,ஃப்ரிட்ஜ் மேக்னட்.

எல்லாவற்றிற்க்கும் மேலாக,உங்கள் துணைவிக்கு என்ன பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு அதை வாங்கிச் சென்றால் வீட்டில் ஒரே கொண்டாட்டம் தான்.

நீங்கள் குடுத்த டிப்ஸ்...இவ்வளவு கிப்ட்ஸ் இருக்கானு இப்போதான்

யோசிக்க வைக்குது...ரொம்ப நன்றிகள் ....இதுல ஏதாவது ஒன்னு

செலக்ட் பண்ணனும்..மீண்டும் நன்றிகள்..

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

உங்கள் மனைவிக்கு விருப்பபட்ட துறைகள் ஓவியம்,இசை,வரைவது,துணிகளில் செய்யும் வேலைகள்,கவிதைகள்,படித்தல் இப்படி இருந்தால் அதற்கு தக்கதுபோல நீங்கள் வாங்கி சென்றால் மிக மகிழ்வார்.
ஓவியம்னா அழகான குழந்தையின் படம் வாங்கிட்டு பெயிண்ஸ் கொப்ஜ்சம் வாங்குங்க,இசைனா எந்த இசையமப்பாளர்?எந்த பாடகர் பாடகின்னு தெஇந்து அவர்களின் ஆல்பம் சீடீஸ் வாங்கிப்போங்க.......இப்படி கொடுத்தால் நிறைய பரிசுகளும் கொடுக்களாம்.தோழி சொன்னதுபோல வீட்டுக்கும் உபயோகமாகும் பரிசும் வாங்கலாம்.....:-)

ரேணுகா மேடம் ..உங்கள் ஆலோசனைக்கு எனது நன்றிகள்..

எனது மனைவிக்கு குழந்தைகல்னா ரொம்ப புடிக்கும்..

ஓவியங்கள் இங்க கெடைக்குமான்னு தெரியல..

இன்னும் டைம் இருக்கு...ஒரு artificial flower வாங்கி இருக்கேன்..

இன்னும் யோசிகிட்டு இருக்கேன்..

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

மேலும் சில பதிவுகள்