நான் 3 மாதம் கர்ப்பம் அடிகடி வயிறு வலிகிறது உதவுங்கள் தோழிகளே

நான் 3 மாதம் கர்ப்பமாக இருகிறேன் எனக்கு அடிகடி வயிறு வலிகிறது மருதுவரிடம் கேட்டேன் அது ஒன்னும் இல்லை குழந்தை நன்றாகதான் இருகிறது என்று சொல்லுகிறார் எனக்கு சக்கரை நோய் இருகிறது நான் என்ன செய்யவேண்டும் எனக்கு உதவுங்கள்

விஜி வாழ்த்துகள். நானும் 3 மாத கர்ப்பம் தான் எனக்கு 72 நாள் ஆகிறது உங்களுக்கு எத்தனை நாள்?
இந்த சமயத்தில் வயிறு வலி சாதாரணம் தானாம். கர்ப்பபை விரியும் போது அப்படி வலிக்குமாம். எனக்கும் அப்படி தான் வலிக்கிறது பயப்பட வேண்டாம்

"நல்லதே நினை நல்லதே நடக்கும்"
புஷ்பலதாசுபாஷ்

தோழி விஜயலட்சுமி ,உங்களுக்கு சூட்டு உடம்பு எனில் உடம்பு உஷ்ணமாக ஆகும் போது அது மாதிரி அடிக்கடி வயிறு வலிக்கலாம் ,சூட்டு உணவு பொருட்களை தவிருங்கள் ,நீங்கள் வீட்டில் விளக்கெண்ணெய் ,நல்லெண்ணெய் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் ,அது உங்களின் உடல் சூட்டை குறைக்கும் ,இரவு தூங்கும் போது வயிற்றில் அல்லது தொப்புளில் தேய்த்துக் கொண்டு படுக்கலாம் . வயிறு வலிக்கும் போது தேங்காய் எண்ணையை தலை உச்சியில் வைத்துக் கொள்ளவும் ,கொஞ்சம் சரியாகி விடும் ,அதே சமயம் உடல் குளிர்ச்சி ஆகாமல் பார்த்துக் கொள்ளவும்.தாங்க முடியாத வயிற்று வலி இருப்பின் உடனே மருத்துவரை அணுகவும் ,மேலும் உங்களுக்கு சர்க்கரை உள்ளதென்றால் மருத்துவர் ஆலோசனையின் பேரில் உணவு என்ன எடுக்கலாம் ,எடுக்க கூடாது என கேட்டுக் கொள்ளுங்கள் ,ஆரம்ப காலத்திலேயே சர்க்கரையை கட்டுப்படுத்தினால் நலம்.

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

எனக்கு 65 நாட்கள் ஆகிறது.பீரீயட் வந்துருமோன்னு பயமா இருக்கு.விட்டுவிட்டு வலிக்குது பா.உங்களுக்கும் அப்படிதான் வலிக்குதா அது ஒன்னும் பிரச்சன இல்லயா

மிக்க நன்றி தினமும் தலைக்கு எண்ணெய் தடவனுமா பா தினமும் வெந்தயம் சாப்பிட்டால் சூடு குறயுமா

புஷ்பலதா நீங்கள் எந்த ஊர் என்று தெரிஞ்சிகலமா உங்களுக்கு எத்தனை நாட்களாக வலி இருகிறது

நான் அன்னூர். நாங்க தனியா இருக்கோம். எனக்கு confirm பண்றதுக்கு முன்னாடி இருந்தே வலிக்கிறது. வேலை செய்தால் வலிக்கும். எனக்கும் Period ஆகி விடுவேனோ என்ற பயம் வரும். இப்போ அம்மா வீட்டுக்கு வந்துடேன். வேலை இல்லை இருந்தாலும் வலி வரும். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்பேன் சரியாகிடும். கர்ப்பபை விரியும் போது வலிக்கும் னு dr சொன்னார். யார் என்ன சொன்னாலும் வலிக்கும் போது நமக்கு பயம் இருக்க தான் செய்யும்.. Dont worry.. Be free

"நல்லதே நினை நல்லதே நடக்கும்"
புஷ்பலதாசுபாஷ்

அதே பிரச்சனதான் எனக்கும் ஆரம்பத்தில இருந்தே வலிகுது பா நாங்களும் சென்னை ல தனியா தான் இருக்கோம் ஆனா வீட்டு வேளைக்கு ஆள் போட்டுடேன் சமையல் மட்டும் தான் நான் பண்ணுரேன் வலி வர்ரப்ப என்னக்கு ரொம்ப பயமா இருக்கு பா

எனக்கு 10 நாட்களாக தினமும் தலை வலிக்கிறது அதற்கு என்ன செய்ய வேண்டும்.இந்த நேரம் இப்படி தான் தலை வலிக்குமா

விஜி எனக்கும் தலை வலிக்கிறது. உங்களுக்கு மசக்கை இருக்கா? எனக்கு மசக்கை இல்லை So எனக்கு தலை வலி இருக்கு. தலைவலிக்கு treatment ஏதும் வேண்டாம் னு சொல்ராங்க நானும் பார்க்கலை. தூங்கி எழும் போது வலிக்கும் உங்களுக்கு?

"நல்லதே நினை நல்லதே நடக்கும்"
புஷ்பலதாசுபாஷ்

நான் 39 நாள் கர்பமாக இருக்கிரேன் எனக்கும் 2 நாளா தொடர்ந்து தலைவலி இருக்குப்பா மருந்து தடவுனாலும் கேட்க்க மாட்டங்குது..

மேலும் சில பதிவுகள்