காகித கூடை

தேதி: August 16, 2012

5
Average: 5 (10 votes)

 

A4 பேப்பர் - 2 கலர்

 

இரண்டு பேப்பரையும் எடுத்து கொள்ளவும். அதை நீளவாட்டில் பாதி பாதியாக மடித்து கிழிக்கவும்.
ஒரு ஷீட்டில் 16 துண்டுகள் வரும். நமக்கு 8 போதுமானது.
இரு வேறு நிறங்களில் உள்ள காகித்தை மாற்றி மாற்றி ஒவ்வொரு பக்கமும் 8 வரும்படி படத்தில் உள்ளது போல் கோர்த்து வைக்கவும். (Alternative). ஒரு பக்கம் வெயிட்டாக ஒரு புத்தகத்தை வைத்து விடவும். கோர்க்கும் போது அசையாமல் இருக்கும். முடிந்தவரை நெருக்கமாக கோர்க்கவும்.
இப்போது டயகனலாக (அதாவது சதுரத்தின் ஒவ்வொரு பக்கத்தின் நடுப்பகுதியையும் இணைக்க வேண்டும்) கோடு வரைந்து கொள்ளவும்.
இப்போது நடுவே ஒரு சதுரமும், சுற்றி 4 முக்கோணமும் கிடைக்கும். அந்த முக்கோணாம் பிரியாமல் இருக்க ஒரு மாஸ்கிங் டேப் போட்டு ஒட்டி கொள்ளவும். இப்போது அந்த முக்கோணத்தை உள் பக்கமாக மடிக்கவும்.
இதே போல் எல்லா பக்கமும் மடிக்கவும். இரண்டு பக்க முக்கோணங்களை சேர்த்தால் படத்தில் இருப்பது போல் கிடைக்கும்.
இனி கீழே கோர்த்தது / பின்னியது போலவே இரண்டு முக்கோணத்தின் பேப்பர்களை கொண்டு சேர்த்து கூடையாக பின்னவும்.
ஒவ்வொரு பக்கமும் பின்னி முடித்ததும் மேலே சின்ன க்ளிப் போட்டு வைக்கவும். (அடுத்த பக்கம் பின்னும் போது பிரிந்து போகாமல் இருக்க.) இதே போல் எல்லா பக்கத்தையும் பக்கத்து முக்கோணத்துடன் சேர்த்து பின்னி முடித்தால் இப்படி கிடைக்கும்.
இனி மேலே நீட்டி நிற்கும் பகுதிகளை மடக்கி விடவும். உள் பக்கம் இருக்கும் காகிதத்தை வெளிப்பக்கமும். வெளிப்பக்கம் உள்ள காகிதத்தை உள் பக்கமும் மடிக்க வேண்டும்.
சுலபமாக ஃபைல் செய்யும் வழி அடுத்த குறுக்கு காகிதத்தின் உள்ளே நுழைப்பது தான். மீதம் வெளியே நீட்டியுள்ள காகிதத்தை வெட்டி விடவும்.
இன்னொரு வழி நான் செய்திருப்பது போல் அதே சதுரத்தின் உள்ளே திருப்பி நுழைப்பது. முடித்ததும் உள்ளே ஒட்டி வைத்த மாஸ்கிங் டேப்களை மெதுவாக எடுத்து விடவும்.
இது போல் எல்லா காகிதத்தையும் மடித்து முடித்தால் அழகான காகித கூடை தயார். இது மாதிரிக்காக பேப்பரில் செய்தது. இது போல் சார்ட் பேப்பரில் செய்தால் இன்னும் ஸ்ட்ராங்காக இருக்கும். A4 காகிதத்தை விடவும் சற்று நீளமாக வெட்டி எடுத்தால் முனைகள் இன்னும் நன்றாக இணைக்க கிடைக்கும். அப்போது எல்லா பக்கமும் இணைந்து மேலே முக்கோணங்களாக நிற்காமல் ஒரே சீராக நிற்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகா இருக்கு வனி. எங்க ஸ்கூல் பசங்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம்.

‍- இமா க்றிஸ்

adada evlo azhaga panirukinga. actually idha bamboo la padradha kelvi patiruken. but i don know the methods... inga paper layum seyalam nu proof panitinga. selected colors are so nice n contrast...congrats...
ungalukku epdiyachum first comment podanum nu ninaichen ima amma potutangaley..ok ok.. better luck next time(enaku naaney sollikiren he he heeeee...)

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

//****இப்போது டயகனலாக (அதாவது சதுரத்தின் ஒவ்வொரு பக்கத்தின் நடுப்பகுதியையும் இணைக்க வேண்டும்) கோடு வரைந்து கொள்ளவும்.***//

indha step enakku purila... konjam sollitharingala pls....

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

இது எங்கள் ஊரில் பனை ஓலையில் செய்வார்கள். அங்கு சிறிய பெட்டி முதல் பெரிய பெட்டி (கடவம் என்று சொல்வார்கள்) வரை பயன்பாட்டில் உள்ளது. நான் கூட ஒரு சிறிய பெட்டி செய்திருக்கிறேன். இதை இங்கு (சென்னையில்) packing wire வைத்து கூடை செய்து பயன்படுத்துகின்றனர்.

நீங்கள் செய்திருப்பதும் அழகாக இருக்கிறது.

அன்புடன்
ஜெயா

காகித கூடை சூப்பர்! கூடை நல்லா திருத்தமா வந்திருக்கு வனி! பாராட்டுக்கள்!

என் பிள்ளைகள்கூட‌ அவங்க ஸ்கூலில் இருந்து இதேமாதிரி கன்ஸ்ட்ரக்ஷன் பேப்பர்ஸ் வைத்து கூடை செய்து கொண்டு வந்தார்கள்.. ஒரு இரண்டு வருடங்களுக்கு முன். இப்ப இதை பார்த்ததும் அது நியாபகத்துக்கு வருது! :)

அன்புடன்
சுஸ்ரீ

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. நானும் இங்க உள்ள ஸ்கூல் குட்டீஸ்க்கு கற்று கொடுத்தது தான் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அடுத்த முறை முதல் பதிவு போட்டுடலாம் ;) உங்க அன்புக்கு நன்றி ரேவதி.

நீங்க கேட்ட சந்தேகம்...

சதுரத்தின் நாலு பக்கம் இருக்குதா? அதன் ஒவ்வொரு பக்கமும் நடுவில் ஒரு புள்ளியை வைங்க. அந்த 4 புள்ளியை இணைத்தால் இந்த சதுரத்தின் உள்ளே குருக்குவாட்டில் இன்னொரு சதுரம் கிடைக்கும் தானே? அதை தான் சொன்னேன். புரியுதா? இல்லன்னா சொல்லுங்க, வேறு விதமா சொல்ல ட்ரை பண்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க சொல்றது சாதாரண கூடை தானே? எல்லா ஊரிலும் இன்னும் இருக்கு தானே? இல்ல வேறு ஏதுமா? எங்க ஊரில் இன்னும் ட்ரெடிஷனல் கூடை இருக்கு, பேக்கிங் வயர்லாம் இல்லை. மிக்க நன்றி ஜெயா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. மகள் செய்ததா? இருந்தா படம் அனுப்புங்க... மகள் செய்ததுன்னா அழகா இருக்க்ம்.... பார்க்க ஆசை. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,
அழகான காகித கூடை..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

காகித கூடை சூப்பர். கலர் காம்பினேசன் கலக்கல்.

உங்களோட அன்னப்பறவை, ரேணு அக்காவோட கேக், பூ ஜாடி செய்துட்டேன். இதை ஊருக்கு போயிட்டு வந்து ட்ரை பண்றேன்.

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. இவ்வளவு செய்தாச்சா??? கலக்குங்க. ஊருக்கு எப்ப கிளம்பறீங்க? எப்ப மீண்டும் வரீங்க? அறுசுவை பார்ப்பீங்களா ஊருக்கு போனா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காகித கூடை ரொம்ப சுலபமா இருக்கு. கலர் காம்னேஷனும் சூப்பர். வாழ்த்துக்கள்

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி
ரொம்ப அழகா இருக்கு ;)
அவசியம் செய்து பார்த்து படம் அனுப்பறேன்
வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மிக்க நன்றி. செய்து படம் மறக்காம அனுப்புங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா காகிதக்கூடை மிக அழகாயிருக்கிறது.

அன்புடன்,
செபா.

ஆண்ட்டி நலமா இருக்கீங்களா? ரொம்ப நன்றி ஆண்ட்டி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Very superb. As it was with attractive photos, I tried immediately. It came very nice,except the final finishing. I pasted the remaining paper on edges instead of inserting.

Well done Ms.Vanitha. Good craft

have a nice day!!!
LakshmiRaj

மிக்க நன்றி. ஒட்டுறது நல்ல ஐடியா தானே... :) இன்னும் ஸ்ட்ராங்கா இருக்குமே. செய்து பார்த்தமைக்கு மீண்டும் நன்றிகள் லக்‌ஷ்மி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

very nice...

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த கூடையும் செய்தாச்சு.சுலபமாக புரியும்படி விளக்கம் இருக்குது.நன்றி வனி அக்கா

Kalai

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா