4 வயது குழந்தைக்கு பாலில் குங்குமப்பூ போட்டு கொடுக்கலாமா?

4 வயது குழந்தைக்கு பாலில் குங்குமப்பூ போட்டு கொடுக்கலாமா?

முதலில் என்ன காரணத்திற்காக குழந்தைக்கு குங்குமப்பூ கொடுக்க விரும்புகின்றீர்கள் என்பது தெரிய வேண்டும். குங்குமப்பூவிற்கு சில மருத்துவ குணங்கள் உண்டு. இருந்தாலும் சுவைக்காகத்தான் அவை சிறிதளவு உணவுகளில் சேர்க்கப்படுகின்றன. குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகலாம் என்று சொல்லுவதெல்லாம் கதை. நம்பாதீர்கள். சிவப்பாகும் காரணத்திற்காக கொடுக்க விரும்பினால், வேண்டாம் என்பதுதான் பதில். வேறு ஏதேனும் மருத்துவ காரணங்களுக்காக நீங்கள் கொடுக்க விரும்பினால், தயவுசெய்து தங்களின் மருத்துவரிடம் ஆலோசனைக் கேட்கவும்.

நாங்கள் அறிந்த மருத்துவரிடம் உங்களின் கேள்வியை எடுத்துச் சென்றோம். அவரின் பதில் இந்த மாதிரி இருந்தது. நான்கு வயது குழந்தைக்கு சிறிய அளவில் கொடுப்பதால் தீங்கு எதுவும் இல்லை. பெரிதாக நன்மையும் எதுவும் இல்லை. எனவே இதனை விடுத்து, வளரும் குழந்தைக்கு சத்து நிறைந்த உணவுகள் கொடுப்பதில் கவனம் செலுத்தலாம் என்றார்.

மேலும் சில பதிவுகள்