அரட்டைக்கு வாங்க தோழிகளே !! பழகலாம்!!!

அரட்டையை இங்கே தொடருங்க தோழிகளே... எல்லாரும் வாங்க... பழகலாம்...
தமிழில் மட்டுமே பதிவிட வேண்டும்.
ஆங்கிலம்/தமிங்கிலம் கூடவே கூடாது. எக்ஸப்ஷன்... நித்யாக்கு மட்டும்.

வனிதா அக்கா, புது இழை ஆரம்பிச்சு!!! எல்லாரும் வாங்க... பழகலாம்!!!

:) குட்... முதல் முதலாக எல்லாரும் வந்து அரட்டையடிக்கிற மாதிரி ஒரு இழையை துவங்கி இருக்கீங்க. எல்லாருகும் ஸ்கந்தாக்கு கை தட்டுங்கப்பா.

பிந்து... ஒரு சின்ன டவுட்டு... கேக்கவா? முன்பு உள்ள இழைகள் பார்த்தீங்கன்னா “சமைத்து அசத்தலாம்”னு ஒரு இழை இருக்கும். அது பாகம் பாகமா போச்சு. கடைசியில் நிறைய பேர் வராம போனதால் நடத்தாம நின்னு போச்சு. பட்டிமன்றம் முடியும் வாரம் துவங்கும், பட்டிமன்றம் துவங்கும் நாள் முடியும். இப்போ அதை மீண்டும் துவங்கலாமான்னு ஒரு எண்ணம் இருக்கு... எடுத்து நடத்துறீங்களா? புது ஆட்கள் யாரையாவது கணக்கு பிள்ளையா சேர்த்து பண்றீங்களா? இண்ட்ரஸ்ட் இருக்கா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா, நீங்கள் சொன்ன பகுதியை இப்போது தான் பார்த்தேன்.. கொஞ்சம் ப்ரௌஸ் செய்து பார்த்து விட்டு சொல்லட்டுமா???

ஆனாலும் இது தானா உங்க டவுட்டு? நானும் என்னவோ ஏதோன்னு நினைச்சேன் :p

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வணக்கம் பிந்து.

ஹிஹிஹீ. இதே தான் :)

ஒன்னுமில்ல பிந்து இப்போ நிறைய புது முகங்கள், புது குறிப்புகள் இருக்கு, அதான் எல்லாரும் செய்து பார்ப்பாங்கன்னு யோசிக்கறேன். அவங்களுக்கும் எதாவது ஒரு பகுதியில் பங்கெடுத்தா நல்லா இருக்கும் இல்லையா? இம்முறை கீழ இருந்து மேலே போகலாம்னு யோசிக்கறேன். ஏன்னா மேலே இருப்பவர்கள் யாரும் இப்ப ரெகுலரா வருவதில்லை... கீழே இருக்கவங்க எல்லாம் புதுசா குறிப்பு கொடுக்க துவங்குறவங்க... அவங்களையும் என்கரேஜ் பண்ண மாதிரி இருக்கும். :) பார்த்துட்டு சொல்லுங்க. இப்போ லலி, ஸ்கந்தா, கனி, சமீஹா, கவிதா, நித்யா இப்படி பலர் அரட்டையில் இருக்காங்க... அவங்களில் யாராவது விரும்பினா கணக்கு பார்க்கும் வேலையை செய்து உங்களுக்கு துணை இருக்கட்டும். கூட்டணியா துவங்கி நடத்துங்க.

கூடவே இதை செய்தா நீங்க சொன்னீங்களே... “பழைய குறிப்பு, புதிய படம்” அது நடக்கும். பலருடைய விளக்கப்படம் இல்லாத குறிப்புக்கு, விளக்கப்படம் கிடைக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லாரும் இங்க வாங்க. சமீஹா, கவிதா, லலிதா, அனைத்து தோழிகளும்.

சரி வனிதா மேடம், நான் ஒருதடவை அந்த பகுதியில் என்ன செய்யனும்னு பார்த்துட்டு சொல்றேன் :) உங்கள் காலை நேரத்திற்குள் சொல்கிறேன் :)

வணக்கம் ஸ்கந்தா... ரொம்ப அழகான பெயர் உங்களது... ஆமாம் உங்கள் பெயரின் அர்த்தம் என்ன?

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

என்ன செய்யணும் அப்படின்னு சொல்லுங்க.

வந்துட்டேன்....

அன்புடன்,
லலிதா

அன்புடன்,
லலிதா

முருகர் பெயரா இருக்குமோ?

மேலும் சில பதிவுகள்