ஒரு முறை உபயோகித்த (வறுத்த/ பொரித்த) எண்ணை ஐ திருப்ப உபயோகிக்கலாமா? மருத்துவர்கள் உபயோகிக்க கூடாது என கூறுகிறார்கள்.நீங்கள் என்ன செய்வீர்கள்?
ஒரு முறை உபயோகித்த (வறுத்த/ பொரித்த) எண்ணை ஐ திருப்ப உபயோகிக்கலாமா? மருத்துவர்கள் உபயோகிக்க கூடாது என கூறுகிறார்கள்.நீங்கள் என்ன செய்வீர்கள்?
நித்யா
உபயோகித்த எண்ணெயை உபயோகிக்க கூடாது தான். அதனால் தான் ஒரு முறை வறுக்க பயன்படுத்தும் எண்ணெயை முடிஞ்சவரை குறைவா பயன்படுத்தனும். குழியான கடாய் பயன்படுத்தினா எண்ணெய் குறைவா பிடிக்கும்.
மருத்துவர்கள் சொல்படின்னா அந்த எண்ணெயை தூக்கி தான் ஊற்றனும். நமக்கு மனசு வரதே. நான் அதை தாளிக்க பயன்படுத்துவேன். அசைவம் செய்திருந்தா அவ்வளவு தான்... தூக்கி ஊத்திடுவேன். சைவம் செய்து, அதுவும் ரொம்பலாம் அதிகமா வறுக்கல, தீயல, எண்ணெய் கண்டிஷன் ஓக்கேன்னா தாளிக்க பயன்படுத்துவேன். இல்லன்னா அதுவும் கீழ தான் ஊத்தி ஆகணும். ஏன்னா பார்ட்டி மாதிரி நேரத்தில் வடை எல்லாம் செய்தா ஏகமா செய்வோம்... அந்த எண்ணெய் அதோட ஒன்னுத்துக்கும் உதவாது.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஆயில் யூஸ் பண்னுவதே ரொம்ப
ஆயில் யூஸ் பண்னுவதே ரொம்ப கெடுதி அதிலும் யூஸ் பண்ணிண ஆயிலை யூஸ் பண்ணினால் சொல்லவா வேன்டும்.
கறி.கோழி ,மீன் இதையெல்லாம் சிறிது ஆயில் விட்டு அலசுனா கவுச்சி வாடை போகும் என்று சொல்வாங்க சோ நான் அதற்க்கு வைத்து கொள்வேன்.ஆனால் கோழி,மீன் இவற்றை பொரித்த ஆயிலை வனிதா அக்கா சொன்ன மாதுரி குழியான சட்டியில் பொரித்து விட்டு என்ன செய்வது ஊற்றிவிடுவேன்.
///////ஆயிலை குறைத்தால் ஆயுளை கூட்டி கொள்ளளாம்/////////
{எங்கோ படித்தது}
என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....
சேம் பின்ச்! :)
நானும்கூட வத்தல், வடை போன்றவை வறுக்க ஒருமுறை மட்டும் பயன்படுத்திய எண்ணெயை தூக்கிபோட மனசில்லாமல், தாளிக்க பயன்படுத்துவேன். :) அதுவே, நிறைய நேரம் காய்ந்த எண்ணெயென்றால் (தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில், நிறைய முறுக்கு, பலகாரம் செய்யும்போது) தூக்கிப்போட்டு விடவேண்டுமென்று நினைப்பேன். இதுதவிர, தினப்படி சமையலில், மீன் எல்லாம் எண்ணெய் ஊற்றி கடாயில் பொரிப்பது கிடையாது. எப்பவுமே ஷலோ ஃப்ரைதான்! :) (ஆனா அதே அளவு எண்ணெயை கடாயில் ஊற்றி பொரித்தபின் எண்ணெயை தூக்கிப் போட்டுவிட்டால் தப்பு இல்லை).
வனி உங்க பாலிஸிதான் என்னதும். இல்லைன்னா, எதுக்கு வம்புனு, பேசாம ஜம்முனு அவன்ல வைச்சி பேக் செய்திடலாம். நான் நிறைய இதுபோல செய்வதுண்டு.
//ஆயிலை குறைத்தால் ஆயுளை கூட்டி கொள்ளளாம்...//
சமீஹா, இது நல்லாருக்கு! :)
அன்புடன்
சுஸ்ரீ
சுஸ்ரீ
ஹஹஹ... ஆமாம்... நானும் நான் வெஜ்ஜுக்கு முடிஞ்சவரி ஷாலோ ஃப்ரை அல்லது அவன் தான். ஷாலோ ஃப்ரை கூட கெஸ்ட்க்கு தான், வீட்டுக்கு என்றால் மைக்ரோவேவ் / அவன் தான் பெஸ்ட்... இல்லன்னா இவர் தொடவே மாட்டார்.
சமீஹா... அந்த வரிகள் எனக்கும் பிடிச்சுது :) குட் ஒன்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா