சுசியம்

தேதி: August 24, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (12 votes)

 

பச்சரிசி - ஒரு கப்
உளுந்து - அரை கப்
கடலை பருப்பு - 100 கிராம்
வெல்லம் - 100 கிராம் (பொடித்து கொள்ளவும்)
ஏலக்காய் - 3 (விரும்பினால்)
தேங்காய் துருவல் - அரை கப்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 

அரிசி மற்றும் உளுந்தை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். பஜ்ஜி மாவை விட கொஞ்சம் கட்டியாக இருக்க வேண்டும். கடலை பருப்பை குழைய வேக வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலைபருப்பு, வெல்லம், தேங்காய் துருவல் மூன்றையும் போட்டு பிசையவும்.
வேண்டுமெனில் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பின்பு இதனை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
இந்த உருண்டையை அரைத்து வைத்துள்ள மாவு கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு சிவந்ததும் எடுக்கவும்.
சுவையான சத்துள்ள சுசியம் தயார்.

இதில் கடலை பருப்பிற்கு பதிலாக பாசிபயறு அல்லது தட்டாம் பயறு கூட பயன்படுத்தலாம் அவரவர் விருப்பத்தை பொருத்தது. இதை பெரும்பாலோர் மைதா மாவில் முக்கி பொரித்து எடுப்பார்கள் அதை விட இது சுவையானது சத்தானது ஏனெனில் மைதா உடம்பிற்கு கேடு என்பது அறிந்ததே. அரிசி, உளுந்து அளவு நீங்கள் இட்லி மாவிற்கு எவ்வளவு அரிசிக்கு எவ்வளவு உளுந்து போடுவீர்களோ அந்த அளவே போதும் நான் மிக்ஸியில் அரைத்ததால் ஒரு கப்பிற்கு அரை கப் உளுந்து போட்டுள்ளேன். மேலும் மேல் மாவில் உப்பு சேர்க்கவில்லை உப்பு சேர்க்காமல் செய்யும் சுவை பிடிக்காதவர்கள் உப்பு சேர்த்து செய்யவும். மேல் மாவு மீதம் ஆனாலும் கவலை வேண்டாம் அதில் வெங்காயம், பச்சை மிளாகாய் நறுக்கி போட்டு சீரகம், உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் ஒரே நேரத்தில் 2 வகை வடை ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

டேஸ்டி குறிப்பு. அழகா செய்து காட்டி இருக்கீங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்து அக்கா சுசியம் சூபரா இருக்கும் போலே சண்டே செஞ்சுட வேண்டியதான்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சத்தான சுசியம் சூப்பரா இருக்கு.

சுசியம் சுவையான குறிப்பா தெரியுது! மேல்மாவு வித்தியாசப்படுத்தி இருப்பது நல்லாயிருக்கு. அப்ப‌ இட்லி மாவு ரெடியா இருந்தால், நிமிஷத்தில் ரெடி பண்ணிடலாம்னு சொல்லுங்க... :) வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

சுசியம்
வாவ்.. சத்தான ரெசிபி
நான் கண்டிப்பா செய்துட்டு உங்களுக்கு சொல்றேன்
வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இந்திரா மேடம்,

சுவையான குறிப்பு. செய்து பார்க்க விருப்பம்.
வெல்லம்,கடலைப்பருப்பு கிராம் அளவில் கொடுத்திருக்கீங்க,அதனுடன் சேர்க்கும் தேங்காய் துருவல் அரை கப் என்று கொடுத்திருக்கீங்க.அரைகப் என்பது என்ன அளவு(ml).

நன்றி.

ஹாய் இந்திரா எனக்கு புடிச்ச ஸ்வீட் இது....மைதாக்கு பதில் அரிசி,உளுந்து வித்தியாசமா இருக்கு....ஒரே நேரத்துல இனிப்பு,காரம் ரெண்டும் செய்ய ஐடியா குடுத்துட்டீங்க...குட் குட்...........

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வனிதா பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

கனி வாழ்த்துக்கு நன்றிடா. ட்ரை பன்னி பாத்துட்டு எப்படி இருந்துச்சினு மறக்காம சொல்லு

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வினோஜா தங்கள் கருத்துக்கு நன்றி

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

சுஸ்ரீ வாழ்த்துக்கு நன்றி. ஆமாங்க இது ரொம்ப டேஸ்டியா இருக்கும் ட்ரை பன்னி பாருங்க. மாவு ரெடியா இருந்தா 10 நிமிஷத்துல செஞ்சிடலாம்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ரம்யா வாழ்த்துக்கு நன்றி.செஞ்சி பார்த்துட்டு கண்டிப்பா சொல்லுங்க.உங்க பாதாம் அல்வா பன்னேன் ரொம்ப டேஸ்டா இருந்துச்சி

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ரெனி வாழ்த்துக்கு நன்றி. நீங்க 1/2 மூடி தேங்காய் போடுங்க சரியா இருக்கும்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஷமீலா வாழ்த்துக்கு நன்றி.//எனக்கு புடிச்ச ஸ்வீட் இது....//உங்களுக்கு மட்டும் இல்ல எனக்கும் இது ரொம்ப பிடிக்கும்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திரா,சுசியம் சூப்பராவந்தது பா,அடுத்த முரை செஇதால் அனுப்பரேன்,யெல்லாம் காலி,அக்கா பொன்னு விரும்பி சாப்டா,fb லதான்

இந்ரா இப்பதான் சுசியம் செஞ்சு சாப்பிட்டோம் ரெம்ப நள்ளா இருந்தது டேஸ்ட்..... ஆனாள் இட்லி மாவில் முக்கி போடும் போது உருன்டை லைட்டா உடையிர மாதரி ஆகிடுச்சு நான் ஒரு மிஸ்டேக் பன்டிட்டேன் நான் நான் யூஸ் பன்னினது துருவின ஃப்ரோஸன் தேங்காய் அது லைட்டா தன்னி விட்ருச்சு மித்தபடி வெந்து எடுத்த பிறகு பாத்தா றெம்ப அழகா இருந்தது அப்படியே நீங்க செஞ்ச சுசியம் மாதரியே பக்காவா வந்துச்சி நன்றி.

சுசியம் சூப்பரா வந்ததா ரொம்ப சந்தோஷம் உங்க அக்கா பொண்ணுக்கு பிடிச்சது ரொம்ப ரொம்ப சந்தோஷம்.FBல பாத்தீங்களா ok ok:-))
சுசியம் செஞ்சி பாத்து நல்லா இருந்ததுனு சொன்னதுக்கு தேன்க்ஸ்பா

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

சுசியம் செஞ்சி பாத்து நல்லா இருந்ததுனு சொன்னதுக்கு தேன்க்ஸ்பா.தண்ணி விட்டதுனாலதான்பா உடையிற மாதிரி ஆகி இருக்கு.அடுத்த தடவ பாத்து பன்னுங்க.நீங்க ஏன் நன்றி சொல்றீங்க என் குறிப்ப பார்த்து நீங்க செஞ்சதுக்கு நான் தான் நன்றி சொல்லனும்:-))

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

சுசியம் நானும் செய்துபார்த்துட்டேன்! எனக்கு இது ரொம்ப பிடிக்கும்! யூஷுவலா வீட்டில் மைதாமாவில் நனைத்து செய்வதுண்டு. உங்க‌ இட்லி மாவு ஐடியா நல்லா இருந்தது, மாவும் வீட்டில ரெடியா இருந்தது! :) சோ, வீக்கென்ட் செய்து சாப்பிட்டாச்சு. சுவை நன்றாக இருந்தது. நன்றி!

பி.கு. எனக்கும் மகாசிவா சொன்ன அதே சிக்கல். சூடான கடலைப்பருப்பில் வெல்லத்தை போட்டதும், பதம் இளகிவிட்டது, உருண்டை பிடிக்கறதுல கொஞ்சம் தகராறு! அப்புறம், ஒரு 3 நிமிடம் மைக்ரோவேவில் வைத்து குக் பண்ணியதும், கெட்டிப்பட்டு ஈசியா உருண்டை பிடிக்க முடிந்தது! :)

அன்புடன்
சுஸ்ரீ

இந்திரா,
சுவையான குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

சுசியம் செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததற்கு நன்றி.
//எனக்கும் மகாசிவா சொன்ன அதே சிக்கல். சூடான கடலைப்பருப்பில் வெல்லத்தை போட்டதும், பதம் இளகிவிட்டது,/// நான் இதை பற்றி யோசிக்கவே இல்லை ஏனென்றால் நான் கடலை பருப்பு ஆறிய பிறகு தான் வெல்லம் போட்டேன்.இதை நான் இங்கு சொல்லாமல் விட்டது என் தவறு தான்...சிரமத்திற்கு மன்னிக்கவும்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.