பெண் குழந்தை கிடைத்துள்ளது ....

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன் .. எனக்கு 02-08-2012 அன்று ஒரு அழகான பெண் குழந்தை சுகபிரசவம் மூலம் கிடைத்துள்ளது ..என் குழந்தையின் பெயர் "ஆத்மிகா" . இதுவரை இந்த அறுசுவை தளம் மிகவும் உதவியாக இருந்துள்ளது ..எனது சந்தேகங்களை தீர்த்து வைத்த எல்லோருக்கும் எனது நன்றிகள் ..

தோழி ஜனனி உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் ,உங்களின் குழந்தை அனைத்து வளங்களையும் ,நலங்களையும் பெற்று வாழ்வில் சிறந்து விளங்க இறைவனை வேண்டுகிறேன் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

வாழ்த்துக்கள் ஜனனி. பாப்பா பேரு ரொம்பபபபபபப............... அழகா இருக்கு

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ...god bless u ... tc...

வாவ்!!! பேர் ரொம்ப அழகு. குழந்தை எல்லா நலனும் பெற்று சீரோடும் சிறப்போடும் இருக்க பிராத்தனைகள் :) உங்க உடம்பையு பார்த்துக்கங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்துக்கள் தோழி. அழகான பெயர் ஆத்மிகா, ஏதேனும் அர்த்தம் உண்டா பெயருக்கு. ---- வாழ்க வளமுடன் ஆத்மிகா.

Dreams Come True..

உங்கள் வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி .... ஆத்மிகா என்றால் உங்கள் ஆத்மாவுக்கு/ இருதயத்துக்கு நெருக்கமானவள் என்று அர்த்தம் ... :) tc..

ஜனனி, குட்டி இளவரசியை ஈன்றெடுத்த உங்களுக்கும், மண்ணிற்கு வந்த புத்தம் புதிய அந்த பூவிற்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பெயர் மிகவும் அழகாக உள்ளது :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நன்றி கல்பனா ...:)

வாழ்த்துக்கள் தோழி ஜனனி.

அன்புடன்,
லலிதா

ரொம்ப நன்றி ... லலிதா தேவராஜன் ..tc...

மேலும் சில பதிவுகள்