கர்பமாக இருக்கும் போது சோடா குடிக்கலமா pls answer me

நான் 3 மாதம் கர்பமாக இருக்குரேன் சாப்பாடு ஜீரணம் ஆகல இப்போது சோடா குடிக்கலமா குடிக்ககூடதான்னு சொல்லுங்க

விஜயா

கர்ப்ப காலத்தில் இல்லை..
சும்மாவே சோடா குடிக்க கூடாது. அது உடம்புக்கு நல்லது இல்லை. அதற்கு பதிலா எலுமிச்சை ஜூசை குடிப்பது நல்லது.
ஆனா புள்ளதாச்சி ஆசைபடுவதால், ஒரு தடவை கொஞ்சம் குடிக்கலாம்.ஆனால் முடிந்தவரை தவிர்க்கவும்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

k thanks friend

மாசமாயிருக்கும்பொழுது சோடா குடிக்ககூடாதுனு எங்க பாட்டி சொல்லுவாங்க ஆனா அதுளையும் ஒரு அர்த்தம் இருக்கும் ஏனா குழந்தை மூச்சு விட சிரமபடும் என்று. ஆசைக்காக வேணூம்னா கொஞ்ஜமா குடிங்க.

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

k pa romba thanks but 3days kudichiten athula ethuvum problem illala

naan 14 vaaram karbama iruken , mudhal kuzhandhai -avalaudan ethirpathukondu irukkirom. Aanaal sisu nanraga vulla pothilum yetho oru bayam irukku. Idhu podhuvanadha theriyala. Kuzhandhai patriya kavalai/ ninaipputhan epozhuthum.santhoshama irukka vazhi sollunga.

Gayathrinatesan

உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் .கவலை வேண்டாம் தோழி ,நீங்கள் எதையும் நினைத்து கவலை படாதீர்கள் ,எனக்கும் இதே போல கவலை இருக்கிறது தான் , ஏன் ?நம்மில் நிறைய பேருக்கு முதல் குழந்தை எனில் கர்ப்பம் தரித்ததிலிருந்து இது போல இருப்பது சகஜம் தான் பா ,உங்களுக்கு இது நீண்ட நாள் கடந்து உண்டான கருவா ?எனக்கு மூன்று வருடம் கடந்து இப்போது நான் 16 வார கர்ப்பம் .எனவே கொஞ்சம் பயம் தான் ,முதலில் நமது குழந்தை பற்றி நல்ல விதமாக அதாவது நேர்மறை எண்ணங்களை கொண்டிருப்போம் .கடவுள் நல்ல விதமாக நமது கருவினை பாதுகாத்து நம்மிடம் நலமாக சேர்ப்பார் என நம்பிக்கை வைப்போம் .நல்ல புத்தகங்கள் படித்து ,நல்ல சிந்தனை வளர்த்துக் கொண்டால் நமக்கும் நம் பிள்ளைக்கும் கண்டிப்பாக குறை ஒன்றும் இருக்காது .நல்ல காதுக்கு இதமான இசையை கேளுங்கள் ,டென்ஷன் எப்போதும் வேண்டாம் ,தனிமையில் உங்கள் குழந்தையோடு பேசுங்கள் ,எப்போதும் சந்தோஷமாக இருங்கள் ,கடவுள் உடன் இருப்பார் .கவலை வேண்டாம் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மேலும் சில பதிவுகள்