சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 1

வணக்கம் :) முன்பு அதிரா & ரேணுகா, பின் வனிதா & யாழினி வெற்றிகரமாக கலக்கிய, சமைத்து அசத்தலாம் பகுதி மீண்டும் இதோ... அறுசுவையில்.

கொஞ்சம் தாமதமாகி விட்டதால், பழக்கமில்லாவிட்டாலும் எளிதாக முடிய நம்ம வனிதா மேடத்தின் சமைத்து அசத்தலாம் பகுதியில் இருந்து கொஞ்சம் காப்பி + பேஸ்ட் ;-)

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது சமைத்து அசத்தலாம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதியும் பட்டிமன்றம் போல் வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு இப்பகுதி இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
Revathy.P - http://www.arusuvai.com/tamil/expert/27823 - 25
Mangamma - http://www.arusuvai.com/tamil/expert/22805 - 29
Kamar Nisha - http://arusuvai.com/tamil/expert/22806 - 20
</b>
அப்புறம் கொசுறாக
<b>Bivi - http://arusuvai.com/tamil/expert/8953 - 1 </b>;-)

இவற்றில் இருந்து இன்று முதல் (27ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 2 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறை நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா.... செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கார். அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

(நன்றி வனிதா :))

(இன்னுமொரு காப்பி பேஸ்ட் :))

தோழிகளே நாம் முன்பு பேசியது போல் சமைத்து அசத்தலாம் பகுதி துவங்கி விட்டோம். தோழிகளே தினம் சமைப்பதை தினமும் இங்கே சொல்லி விடுங்கள்.... கணக்கு எடுக்கும் ஸ்கந்தாவிற்கு சுலபமாக இருக்கும்... பார்க்கும் தோழிகளும் போட்டி போட்டுக்கொண்டு இன்னும் நிறைய சமைப்பார்கள். சமைத்து பார்த்த குறிப்புகளுக்கு அவர் அவர் குறிப்புகளில் பின்னூட்டமும் கொடுங்க... தோழிகளை ஊக்குவிப்பதும், பல காலமாக யாரும் காணாத குறிப்புகளை தூசு தட்டுவதுமே இந்த பகுதியின் முக்கிய காரணம். :) அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஸ்கந்தா, உங்கள் வேலையை நானே பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைக்கிறேன்....

நான் இன்று ரேவதியின் செட்டிநாடு புலாவ் + முட்டை பூஜ்யா செய்தேன்...

சும்மாவா 27ஆம் தேதியையும் சேர்த்து சொல்லி இருக்கிறேன்... யாரும் திட்டாதீங்க... இங்கே இன்னும் நிஜமாகவே 27ஆம் தேதி தான் :D

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

பிந்து ஸ்கந்தா
சூப்பர்.சமைத்து அசத்தலாம் பகுதி நல்ல முறையில் செல்ல வாழ்த்துக்கள் :)
நான் நைட் ரேவதியின் ஈசி பிசா செய்தேன். :)
நன்றி ரேவதி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் ஹாய் ஹாய்... :) மகிழ்ச்சியா இருக்கு இந்த பகுதியை மீண்டும் காண. வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். காலையிலேயே பார்த்தேன், ஒரு குறிப்பாவது செய்துட்டு தான் பதிவிடணும்னு வெயிட் பண்ணேன்.

ரேவதியோட இட்லி பொடி :) செய்தாச்சு. இதோ போறேன் பதிவிட.

ஸ்கந்தா... கணக்கு என்னோடது சரியா இருக்கணும் ;) புரிஞ்சுதா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிந்து ஸ்கந்தா வாழ்த்துக்கள். இந்த பகுதி சிறப்பா நடக்கனும்.

என்னுடைய ஆரம்பிச்சு வைக்கிற குறிப்பு
ரேவதி - செட்டிநாடு புலாவ்
மங்கம்மா - பருப்பு ரசம்

ஸ்கந்தா மேடம், கணக்கு எல்லாம் எடுக்க ஆரம்பிச்சாச்சா?
ஆல் தி பெஸ்ட் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

உங்கள் ஆதரவிற்கு நன்றி ரம்யா, வனிதா & உமா :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

இது வரை

தோழி ரேவதி குறிப்புக்கள்:
பிந்து: செட்டிநாடு புலாவ், முட்டை பூஜ்யா
ரம்யா: ஈசி பிசா
வனிதா: இட்லி பொடி
உமா: செட்டிநாடு புலாவ்

தோழி மங்கம்மா குறிப்புக்கள்:
உமா: பருப்பு ரசம்

என்ன கணக்கு சரியா அக்கா. தவறா இருந்த சொல்லுங்க

பிந்து, ஸ்கந்தா இந்த பகுதி சிறப்பாக செல்ல வாழ்த்துக்கள்..

நான் ரேவதியோட முட்டை பூஜ்யா பன்னேன்

ஸ்கந்தா நோட் பன்னிக்கோங்க...

இன்று மாலை ரேவதியின் வடகறி பன்ன போறேன் செஞ்சிட்டு நாளைக்கி திரும்பவும் பதிவு போடுறேன்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

எனக்கு இந்த இழை புரியவில்லை. Please help me

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

மேலும் சில பதிவுகள்