குதிகால் வலி

எனக்கு இரண்டு நாட்களாக குதிகால் வலிக்கிறது. வெடிப்பு எதும் இல்லை. ஆனால் மிகவும் வலிக்கிறது. நடக்க கூட முடியவில்லை. எதனால் வலிக்கிறது என்று தெரிந்தவர்கள் கூறவும்..

ஹாய் சுதா அக்கா
உங்கலுக்கு அதிகமா எடை இருன்தால் வலிகுக்கும் அப்படி இல்லை என்றால் ஹில்ஸ் பொடாதிங்க கட் ஸ்சு பொட்டு பருங்க. கால் பாதம் சின்னதா இருன்தலும் வலிக்கும். விட்ல இருக்கும் பொதும் செருப்பு பொட்டுகொங்க.

ஹாய் பீமா...

எனக்கு பதில் சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ். அக்கா எல்லாம் வேண்டாம் . நானும் சின்ன பொண்ணு தான். இப்போ தான் MBA பண்ணிட்டு இருக்கேன். நான் 40kg தான் இருக்கேன். so உடல் எடை காரணமா வலிக்கல. ஹீல்ஸ் கூட நான் போடா மாட்டேன். கால் பாதம் என்னோடது சின்னது இல்லை. வேற என்ன ரீசன்-ன்னு தெரியல. அதுவா வலி கம்மி ஆயிரும்-ன்னு நினைத்தேன். சரி ஆகிற மாதிரி தெரியலே. அதனால் இன்னைக்கு ஈவ்னிங் ஹாஸ்பிடல் போலாம்னு இருக்கேன். Anyway thanks for your suggestion ...

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

உங்கள் வீட்டில் மார்பில் (marbel floor) தரையா?

ஹாய் ஸ்கந்தா...

சாரி இப்பொழுது தான் உங்கள் பதிவை பார்த்தேன்.எங்கள் வீட்டில் மார்பில் தரை இல்லை.டைல்ஸ் தரை தான்.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

நீங்கள் எதற்கும் வீட்டில் நடக்கும் போதும் கூட மெடிக்கல் ஸ்லிப்பர் போட்டு நடங்க, வலி குறைகிறதா என்று பாருங்கள்

ஓகே. தேங்க்ஸ் ஸ்கந்தா... நீங்க சொன்ன மாதிரியும் ட்ரை பண்ணி பார்க்கிறேன்.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

நீங்க எந்த ஊர். அங்க மழை என்றால் தரை ஈராமாக இருந்தால் கூட வலிக்கலாம். ரெண்டு நாள் நான் சொன்ன மாதிரி செய்து பாருங்கள்.

நான் கோயமுத்தூர்.. இங்கு மழை தான்.. நீங்க சொன்ன மாதிரி தரை ஈரத்தினால் தான் வலித்திருக்கும். நேற்றுலிருந்து மெடிக்கல் ஸ்லிப்பர் போட்டு தான் நடக்கிறேன். வலி கொஞ்சம் குறைந்த மாதிரி தான் தெரிகிறது. ரொம்ப தேங்க்ஸ்.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

ஹாய் சுதா நான் ப்ரபாலக்ஷ்மி என்ற பெயரில் இருந்தேன் பாஸ் வேர்ட் மறந்துபோனதால் தான் பெயர் கொஞ்சம் மாறியிருக்கு. நான் ஜேர்மனியில் வசிக்கிறேன், எனக்கும் மிக கடுமையான குதிகால் வலி டாக்டரிடம் போனேன் அவர் விற்றமின் டி 3 குறைபாடு என்று சொல்லி ஸ்பெஷலிஸ்ட்டிடம் அனுப்பியிருக்கிறார். வருகிற 24 ம் திகதி அப்பொயின்மென்ட் அதற்குபிறகு தான் தெரியும். முடிந்தால் நீங்களும் இரத்தத்தை சோதனை செய்து பாருங்கள்.

மேலும் சில பதிவுகள்