பீர்க்கங்காய் பொரியல்

தேதி: September 1, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

 

பீர்க்கங்காய் - ஒன்று
காய்ந்த இறால் - 30
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
குழம்பு மிளகாய்த்தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். பீர்க்கங்காயை தோல் சீவி ஒரு அங்குல வட்டமாக நறுக்கி அதை இரண்டு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். காய்ந்த இறாலை மண் போக தண்ணீரில் அலசி வைக்கவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் நறுக்கின வெங்காயம், தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
அதில் பீர்க்கங்காயை சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வதக்கவும்.
வெங்காயம், தக்காளி, பீர்க்கங்காய் வதங்கியதும் குழம்பு மிளகாய்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி விட்டு இறாலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு இரண்டு கையளவு தண்ணீரை தெளித்து உப்பு சேர்த்து கிளறி விட்டு இரண்டு நிமிடம் வேக விடவும்.
தண்ணீர் வற்றியதும் ஒரு நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
பீர்க்கங்காய் இறால் பொரியல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பீர்க்கங்கா இறால் பொரியல் ரொம்ப வித்தியாசமா இருக்கு வாழ்த்துக்கள்....

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

பீர்க்கங்காய் மட்டும்னு நினைச்சு வந்தேன் இறாலையும் சேர்த்து இருக்கீங்க :)
பார்க்கவே அழகா இருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அட இப்ப தான் பார்க்கிறேன் நம்ம செண்பகா குறிப்பு!!! :) சூப்பரோ சூப்பர். எனக்கு இந்த மாதிரி ட்ரை ப்ரான்லாம் சமைக்க தெரியாது. பார்க்க சூப்பரா இருக்கு, அவசியம் செய்து பார்க்கிறேன் செண்பகா. :) அப்பறம்... ரொம்ப நாளைக்கு பின் குறிப்பு வருது.. பின்னாடியே நீங்களூம் வரலாமில்ல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செண்பகா
வித்தியாசமான குறிப்பு ;)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எங்க ஊரில் ஏறக்குறைய இதே போல் ஒன்று செய்வோம் இறால் சுவை பீர்க்கங்காயோடு செம்ம அருமையாக இருக்கும்..கண்டிப்பா செய்து பார்க்கணும்