அறுசுவை நேயர்கள் செய்து பார்த்த உணவுகள்

திருமதி. வித்யா கமலேஷ் அவர்கள், அறுசுவையில் வெளியாகி உள்ள வேர்க்கடலை புட்டு செய்முறையப் பார்த்து, அதனை செய்து சுவைத்து, மிகவும் நன்றாக வந்ததாகப் பாராட்டி மடல் எழுதினார். அதுமட்டுமல்லாமல், தான் செய்த அந்தப் புட்டினைப் படம் எடுத்தும் அனுப்பிவிட்டார். அந்தப் படத்தினை கீழே கொடுத்துள்ளோம்.
<p>
<img src="files/pictures/groundnut_puttu.jpg" alt="puttu" />
</p>
மற்ற நேயர்களும் இது போல் அறுசுவைத் தளத்தைப் பார்த்து, தாங்கள் செய்தவற்றை படம் எடுத்து அனுப்பலாம். அவற்றை அறுசுவை தளத்தினில் வெளியிடுகின்றோம். நிறையப் படங்கள் வந்ததென்றால், வாரம் ஒன்று அல்லது தினம் ஒன்று என அறுசுவை முதல் பக்கத்தில் பெயருடன் வெளியிடலாம்.

அதுபோல், அறுசுவையைப் பார்த்து நீங்கள் உணவுகள் செய்த போது உங்களுக்கு கிட்டிய அனுபவங்களையும் எங்களுக்கு அனுப்பலாம். எல்லா நேரமும், எல்லாக் குறிப்புகளும் சரியாக வந்துவிடுவதில்லை. சிலசமயம் நல்ல முடிவு கிடைத்து இருக்கலாம். சிலசமயம் மோசமான அவுட்புட் கிடைத்து இருக்கலாம். எதுவாயினும், உங்களுடைய அனுபவங்களை சுவைபட எழுதுங்கள். அவற்றை வெளியிடுகின்றோம்.

கீழே தொடர்புக்கு என்று உள்ள தொடுப்பின் மூலம் அதற்கான பக்கத்திற்குச் சென்று உங்கள் அனுபவங்களை அனுப்பவும்.

காரம் பகுதியில் சித்ரா விஸ்வநாதன் வழங்கிய மிக்சர் செய்து பார்த்தேன். மிக மிக நன்றாக வந்தது. அனைவரும் பாராட்டினர்.
thanks to arusuvai & chitra vishwanathan

மேலும் சில பதிவுகள்