அமானுஷ்ய இழையை இத்தனை விறுவிறுப்போடும், ஊக்கத்தோடும், ஆர்வத்தோடும், கொண்டு சென்று கொண்டிருக்கும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் என் நன்றிகள். இந்த இழையை மேன்மேலும் உயிரோட்டத்தோடு கொண்டு செல்ல உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. அதனால் இதற்கு முன்பிருந்த அதே வேகத்தோடு மேன்மேலும் பல பாகங்கள் கொண்டு செல்ல உதவுவீர்கள் என நம்பி 3வது பாக இழையையும் தொடங்கி விட்டேன். பயப்படலாம் வாங்க தோழிகளே ;)
இதற்கு முந்தைய இழைகள்
அமானுஷ்ய அனுபவங்கள் - பாகம் 1
http://www.arusuvai.com/tamil/node/19611
அமானுஷ்ய அனுபவங்கள் - பாகம் 2
http://www.arusuvai.com/tamil/node/19678
kalps
என்னடா இது இன்னும் கல்ப்ஸ் வந்து புது இழை தொடங்களையஎன்னு நினைச்சேன் தொடங்கிட்டிங்க. ந்ல்ல இழைபா ,விடாது கருப்பு போல தொடரனும்னு என் வாழ்த்துக்கள்,எனக்கு எந்த அனுபவமும் இல்லை,இங்க இருக்குர தோழிகள் அனுபவத்தை படிச்சுட்டு பயம் வராம இருந்தா சரி ....நான் வெறும் பார்வையாளராவே இருகேன்பா,அம்மே....................
Be simple be sample
அமானுஷ்ய அனுபவங்கள் பாகம் - 3
கல்பனா மேம் மூன்றாவது இழையை ஆரம்பித்தமைக்கு மிக்க நன்றிங்க :-)
நித்யா சிஸ்டர் நான் இரண்டாம் பாகத்தில் எழுதியிருந்தவை பலர் கூறியதை கேட்டவை :-) இந்த இழையில் அனுபவங்களை தொடர்ந்து எழுதுவேன். பயப்பட ரெடியா இருங்க :-) ஒரே கருத்து அதிகமுறை பதிவிட்டிருந்தீங்க
நட்புடன்
குணா
கல்பனா அக்கா, குணா...
அன்பு தம்பி குணா, தொடர்ந்து உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பயப்பட நாங்க ரெடியா இருக்கோம். கல்பனா அக்கா இந்த இழையும் அதிக பக்கங்கள் தொடரவும் அமானுஷ்ய அனுபவம் இன்னும் பல இழைகள் தொடரவும் வாழ்த்துக்கள் அக்கா. குணா என் மொபைலில் இருந்து பதிவு செய்யும் போது எர்ரர் என்று வந்தது. அதனால் தான் பல முறை பதிவாகி விட்டது. முடிந்தால் மாற்றி விடுகிறேன். என் நாத்தனார் வீட்டிலிருந்து சிஸ்டம் மூலம் இதை பதிவிடுகிறேன். அதனால் தான் தமிழில். நன்றி.
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
மீண்டும் இன்னொரு பாகமா....???
மீண்டும் அடுத்தவர்கள் வயிறை கலக்க மூன்றாம் பாகம் ஆரம்பித்திருக்கும் காங்கோ அவர்களை பேயும் புளியமரமும் போல கல்பனாவும் அமானுஷயமும் கலக்கிட வாழ்த்துகிறேன்... (யார்கிட்டேயாவது மந்திரிச்ச ஒரு தாயத்து இருந்தா கொடுங்களேன்...)
அன்புடன்
THAVAM
Revathi.s
ரேவ்ஸ், நாம தொடங்கின இழையை அம்போன்னு விட்ருவோமா என்ன? ஆவியா வந்தாவது தொடருவோமே ;) பாகம் - 2ஐயும் வெற்றிகரமாக தொடர்ந்து 3ஐ தொடச் செய்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் ஆயிரம் :)
//,எனக்கு எந்த அனுபவமும் இல்லை,இங்க இருக்குர தோழிகள் அனுபவத்தை படிச்சுட்டு பயம் வராம இருந்தா சரி ....நான் வெறும் பார்வையாளராவே இருகேன்பா// இப்படியெல்லாம் சொன்னா விட்ருவோமா என்ன? வீட்டுக்கு வேணா ஒரு பேயை அனுப்பி வைக்கிறேன். நல்ல அனுபவம் கிடைக்க ;) சரி.. சரி போகட்டும்.. நம்ம கோழியாயிட்டீங்க.. படிச்சு பதிவை போடவாச்சும் வாங்க. அதுவே போதும் :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
Guna2962
சகோதரர் குணா, இதற்கு முந்தைய இழையில் பேய்கள் குறித்த நீங்கள் அளித்த விளக்கங்கள் நன்றாகவும், ஆச்சர்யப்படும்படியும் இருந்தன. தொடர்ந்து உங்களின் வேறு அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்கள். சுவைபடவும் இருக்கும் உங்கள் எழுத்துக்களுக்கு என் வாழ்த்துக்கள் :) 3ம் பாகத்தை தொடரச் செய்தமைக்கு நன்றிகள்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
நித்யா
நித்யா, நீங்க தானா? நீங்களே தானா? தமிழ்ல வந்தது நீங்க தானா? நம்பவே முடியல போங்க ;) எல்லார் அனுபவத்தையும் படிச்சுட்டு சும்மா போனா எப்படி? நீங்களும் உங்க பங்குக்கு ஒரு அனுபவத்தை போடுங்க. தொடர்ந்த உங்கள் பதிவுகளுக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் நித்தி :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
தவமணி அண்ணா
அண்ணா, எப்படி இருக்கீங்க? வீட்ல பாரதி,கார்த்தி அண்ணி நலமா? ஊருக்குள்ளே இருக்கீங்களா? உங்கள் வாழ்த்திற்கும், பதிவிற்கும் நன்றிகள் அண்ணா. புளியமரத்துல நல்ல புளி இருக்குமான்னு பார்த்துக்கோங்க.. ஒரு ரேட் போட்டு வித்துடலாம் ;) இப்ப இருக்க பேய்ங்க எல்லாம் உசார் பேய்ங்க. சொல்ல முடியாது. ஆவி உலகத்துல கூட ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணிட்டு இருக்கலாம்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
kalps
கல்ப்ஸ் வீட்டுக்கு பேய்லாம் அனுப்பபோறிங்களா ,அம்மே........ . ....,எவ்வளவு ஒரு நல்ல எண்ணம் நல்லா வருவிங்க,எனக்கு ஒரு அனுபவமும் இல்லப்பா நம்புங்க..... எனக்கு ஒரு அம்மா சொன்ன அனுபவத்தை இங்க சொல்லறேன்.அவங்க அப்போதும் இரவில் தனியாக தோங்குவாங்க,அப்போது யாரோ பக்கத்தில் படுத்திருப்பது போல் உணர்வார்,ஆனால் கண்னை திற்ந்து பார்ப்பதர்க்கு பயம், இதுவே தினமும் நடந்துள்ளது,ஒரு நாள் கை அதன் மேல் பட்டதும் முசு முசு என்று இருததாம் ,மிகவும் பயந்து விட்டார்கள்,இதுவே தினமும் நடந்துள்ளது.அவர்களும் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூரியுள்ளார்.அவர்களில் ஒருவர் நீ அதனுடன் பேசு, நீ சத்திய வாக்கு வாங்கினால் அது உன்னை தொடராது என்று.இவரும் அன்று இரவு தைரியத்துடன் பேசுவதுபோல், நீ நிஜமான நல்ல ஆன்மாவக இருந்தால் சத்தியமாக என்னை தொடராதே என்று கூறியுள்ளார். அதன் பின் அவருக்கு அது போல் எந்த தொல்லை ஏற்படவில்லையாம்,அவர் அதை நினைதாலும் அது வருவதில்லையாம்
Be simple be sample
kalps,thavamanna
கல்ப்ஸ் பேய்லாம் அனுப்ப வேண்டாம்,உங்க காங்கோ ஜுஸ் குடுக்குறேன் சொன்னாலே நாங்க பயத்துல உலருவேன் ,காய்ச்சல் வர மாதிரி இருக்கு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........
தவம் அண்ணா தாயத்து வேணுமா உங்களுக்கு,ராசிபுரம்ல இலையா,புளியமரம்ல இருக்குர பேய்லாம் கல்ப்ஸ் பிரெண்டாதான் இருக்கும்,அவங்க fரெண்சோட பிஸ்னஸ்லாம் கரெக்டா சொல்லாறாங்களே.........புளியங்காய்லாம் உஷாரு இல்லனா கல்ப்ஸ் எல்லாத்தையும் பிரெண்ஸ் மூலமா வித்துடுவாங்கோ(உஷார் ஐயா உஷாரு ஒரம்சாரம் உஷாரு)
Be simple be sample