ஈசி பெப்பர் சிக்கன்

தேதி: September 5, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (8 votes)

சிக்கன் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்சை மிளகாய் - இரண்டு
காய்ந்த மிளகாய் - இரண்டு
கொத்தமல்லி தழை - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலக்காய் - எல்லாவற்றிலும் இரண்டு
கசகசா - இரண்டு தேக்கரண்டி
சோம்பு - இரண்டு தேக்கரண்டி
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
க்ரஷ்ட் பெப்பர் - இரண்டு தேக்கரண்டி

சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து கழுவி வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கசகசா, சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய், சேர்த்து தாளிக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து, வெங்காயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், சேர்த்து நன்றாக வதக்கவும், பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
தக்காளி சேர்த்து நன்றாக கரையும் வரை வதக்கவும்.
பின் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறவும்.
ஐந்து நிமிடம் கழித்து தேவையான அளவு உப்பு, க்ரஷ்ட் பெப்பர், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
பச்சை வாசனை போனதும், சிக்கன் வேக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
பின் தண்ணீர் நன்றாக வற்றி சிக்கன் வெந்ததும் இறக்கி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான பெப்பர் சிக்கன் தயார். இது சப்பாத்தி, தோசை அல்லது சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்

காரம் அதிகம் விரும்பாதவர்கள் மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி மட்டும் சேர்த்து கொள்ளவும். பச்சை மிளகாயோ, காய்ந்த மிளகாயோ சேர்க்க வேண்டாம் மேலும் இதில் உருளைக்கிழங்கை சேர்த்தும் செய்யலாம். உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொண்டு சிக்கனை சேர்த்து தூள் வகைகள் எல்லாம் சேர்த்து கிளறும் நேரத்தில் உருளைக்கிழங்கை சேர்த்து செய்யலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

Hey... Ingayum nan thaan first. Easy pepper chicken supera iruku parkave:) seekiram koottanchoril idam pidika vazhthukkal da...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நித்து அக்கா முதலாவதா வந்து பதிவிட்டதற்கு ரொம்ப நன்றி அக்கா சீகரமவே கூடான்சோரில் இடம்பிடிக்க முயல்கிறேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

பெப்பர் சிக்கன் சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திரா அக்கா உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வீட்டுல உங்க சமையல் தானா பெப்பர் சிக்கன் நல்லா இருக்கு. படங்கள் எல்லாம் ப்ளீச் என்று உள்ளது. வாழ்த்துக்கள்

ஹ்ம்ம் வினோஜா அக்கா அடிகடி என் சமையல் இருக்கும் வீட்ல உங்களின் பதிவிற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி
சூடு சாதத்திற்கு ஏற்ற அருமையான குறிப்பு
வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அருமையான சுலபமான குறிப்பு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி ரம்யா அக்கா உங்களின் பதிவிற்கு நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நன்றி உங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி சுவையான பெப்பர் சிக்கன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கனி,

ஈசி பெப்பர் சிக்கன் சூப்பரா இருக்கு!! படங்களும் தெளிவா வந்திருக்கு. வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

உங்களின் பதிவிற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சுவர்ணா அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சுஸ்ரீ அக்கா உங்களின் பாராட்டிற்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்