வெளிநாடு வாழ் தோழிகளே

அன்பு தோழிகளுக்கு வணக்கம்,
வெளிநாடு வாழ் தோழிகளே நம் நாட்டையும் அதே போல் மாற்ற என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யாலாம்? உள்கட்டமைப்பு, கல்வி, மருத்துவம் இன்னும் பல விஷயங்களை பற்றி பகிர்ந்து கொள்ளலாமே.அரசு மருத்துவமனைகள் எல்லா உயிர்களும் வாழ ஏதுவான இடம் என்பது நமக்கு தெரியுமா? நம் கனவு கானும் இந்தியா எப்படி இருக்கவேண்டும்?

நம்ம மனசுல ஒரு பிம்பம் இருக்கும் இல்லையா நம்ம நாடு இப்படி இருக்கணும். உதாரணமா 24மணிநேரமும் மின்சாரம், தண்ணீர் கிடைக்கணும் இது போல இன்னும் பல விஷயங்களை பகிர்ந்துகொள்ள அறுசுவையாளர்களை அன்புடன் அழைக்கிறேன்.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

அனைவருக்கும் காலை, மதிய, மாலை வணக்கங்கள்.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

முதல்ல கொசு வராம இருக்கறதுக்கு கொசு மருந்து அடிக்கணும்.
அதனால் வர பாதி வியாதிகள் கொறஞ்சு போய்டும்.
இழை கீழ போய்டும் போல இருக்கு அதனால ஒரு வரி மட்டும் போட்டுட்டு மீதிய காலைல போடுறேன்.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

அருட்செல்வி,
என்னை பொறுத்த வரை நம் நாட்டின் கல்வி துறை தான் இப்போது சிறந்த முறையில் இல்லை.. கல்வி என்பதே வியாபாரம் என எண்ணும் அளவிற்கு எல்லாம் மாறி இருக்கிறது. அந்த நிலை மாறி, எல்லோருக்கும் தரமான, இலவச அல்லது கிட்டத்தட்ட இலவச கல்வி தான் என்னுடைய கனவு இந்தியாவின் முதல் தேவை... நம் நாட்டின் வருங்கால தலைமுறையை சிறந்த முறையில் வளர்க்க, அவர்களின் திறமையை மெருகேற்ற தேவை படும் கல்வியை இப்படி வியாபாரமாக்குவது சரி இல்லை...

மற்றபடி,
தடையற்ற மின்சாரம், பிரச்சனையில்லாத தண்ணீர், தேவையான போது உடனடியாக கிடைக்கும் மருத்துவ உதவி, பொல்யுஷன் குறைந்த சுற்றுபுறம், அனைத்து நகரங்கள்/கிராமங்களிலும் மேம்பட்ட சாலைகள், (ஹார்ன்) சத்தம் இல்லாத சாலைகள், டிராப்பிக் குறைந்த முக்கிய சாலைகள், சுங்க சாவடி இல்லாத ஹை வே......

கல்லூரிகளாகவும், வீட்டு மனைகளாகவும் மாறாத விவசாய நிலங்கள், கெமிகல் உரம் பயன் படுத்தாது விளைந்த தரமான விளைச்சல்கள்... இலவசம் இல்லாத ஆனால் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும் சூழ்நிலை....

கேபிள் டிவி இல்லாத வீடுகள்... பொதுநலம் கருதும் தலைவர்கள்..

இன்னும் நிறைய சொல்லலாம்... இப்போதைக்கு இது போதும் தானே :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வணக்கங்க பிவி
நீங்க சொன்ன மாதிரி கல்விங்கிறது எவ்வளவு முக்கியத்துவமானது எல்லோருக்குமே தெரியும்.
ஆனா இலவசமா கொடுத்தாலுமே பள்ளிக்கு செல்லாம எத்தனையோ குழந்தைகள் சாலை ஓரங்களில் பலூன் வித்துகிட்டும் பிச்சை எடுத்துகிட்டும் இருக்காங்க.
ஏன் திருடகூட செய்றாங்க. தீவிர சட்டம் இயற்றி அவங்களை திருத்தனும்.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

மேலும் சில பதிவுகள்