வாங்க தோழிஸ் அரட்டையடிக்கலாம்...

பழைய இழை 200ரைய் தாண்டிவிட்டதாள் நம்ம அரட்டைய இந்த பக்கம் கொஞ்சம் திருப்புவோம்... :)

உங்க பதிவை தமிழில் மட்டும் போடவும்...
தோழி நித்யா ஆங்கிலத்தில் பதிவிடலாம்.

அனைவருக்கும் காலை மற்றும் இரவு வணக்கங்கள்.

தோழிகள் அரட்டைய தொடரலாம்.

அன்புடன்,
லலிதா

ஹலோ லலிதா, மாடரேட்டர் மாதிரி வரீங்க, புது இழை தொடங்குறீங்க, காணாமல் போயிடுறீங்க... :)
மின்னல் போல வந்து மறையும் கலையை உங்க அக்கா உங்களுக்கும் சொல்லி கொடுத்துட்டாங்களா? ;-) சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.. :)

உங்களுக்கும் இனிய இரவு வணக்கங்கள்... பை...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஹாய் ஹாய் ஹாய்....

லலி!!! அதிசயமா வந்து இழையை மட்டும் துவங்கிட்டு ஓடிட்டீங்களா??? ;) எங்க காணாம போறீங்க அப்போ அப்போ. வாங்க இப்படி. நித்யா, நான் எல்லாம் தேடினோமாக்கும்.

பிந்து அக்கா... யார் சொல் பேச்சை கேட்பதில்லை??? ;) இப்போ நீங்களும் நானுமே அக்கா, தங்கச்சின்னு கூப்பிட்டு பதிவு போடலன்னா என்ன ஆச்சு இருவருக்கும்னு அறுசுவையே சோகமா விசாரிக்குது :) என்ன செய்ய???!! அப்பறம் விருதுகள்... ஆமாம் பிந்து இம்முறையும் லேட் ;( நடுவர் குழுவில் பாவம் கவிசிவா தவிற யாருமே இல்லைங்க. அதான் தாமதமாகுது.

அபி... சமைத்து அசத்தலாமில் அதுக்குள்ள சமைச்சு பதிவிட்டாச்சா??? கலக்குங்க. :)

நித்யா... நல்ல தூக்கமா? இன்னும் காணோம்??!! நான் சரியா தூக்கம் நித்யா. அதென்னவோ தெரியல 2 நாளா பகல்லையும் தூங்குறேன், நைட்லையும் தூங்குறேன். மே பீ நல்ல மழை இங்க... அதனால் சோம்பேரியா தூக்கம் வருதோ என்னவோ. பாருங்க... அக்கா உங்களுக்கு ரூல்ஸ் போட்டிருக்காங்க, சமைத்து அசத்தலாம்ல பதிவிட்டே ஆகனும்னு ;) வாங்க வாங்க.

சமீஹா.. எங்க போனீங்க... இந்திரா பாப்பாக்கு காய்ச்சல்... முதல்ல வாங்க சுத்தி போட.

இந்திரா... பாப்பாக்கு இப்போ காய்ச்சல் எப்படி இருக்கு???

மற்ற தோழிகள் எல்லாரும் நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாஹாஹா பிந்து அப்படியல்லாம் ஒன்னும்மில்லக... ஏதோ நம்மலால முடிஞ்சுது.... :) எப்படி போச்சு இந்த வாரம்..?
வினிய அரட்டையில பிடிக்கலாமுனு வந்தேன்... ரொம்பனாலாச்சு பெசி...

அன்புடன்,
லலிதா

ஹாய் வனி எப்படி இருக்கீங்க..? பார்ட்டி எல்லாம் எப்படி போச்சு...?

அன்புடன்,
லலிதா

வனி இருக்கீங்களா ...?? நேரமாச்சு எனக்கு தூக்கம் வருது ... நாளை பாக்கலாம்... பைய்

அன்புடன்,
லலிதா

அரட்டையில் யாரெல்லாம் இருக்கீங்க? ஒளிஞ்சு இருக்கறவங்க, மறைஞ்சு நின்னு எட்டிப் பார்க்கறவங்க, கமுக்கமா வாசிச்சுட்டு இருக்கவங்க எல்லாரும் வந்து அட்டன்டென்ஸ் போடுங்கோ :)

வனி விருது லிஸ்ட் அனுப்பிட்டேனே வந்துச்சா இல்லையா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கவிசிவா நலமா?

நலமாக இருக்கிறேன் ஷமீலா. நீங்க எப்படி இருக்கீங்க?
சுவாரசியமா எதாவது டாப்பிக் பற்றி பேசலாமே. என்ன பேசலாம்? முதன் முதலா சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டது, பம்பரம் விட கத்துக்கிட்டது, பட்டம் விட கத்துக்கிட்டது இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை முதன் முதலா கத்துக்கிட்ட போது சொதப்பின அனுபவங்கள் சுவாரசியமான அனுபவங்கள் ப்ற்றி சொல்லுங்களேன் தோழீஸ்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வனி டிஃபன் பண்ண போயிட்டேன் :) கரக்ட்டா அந்த டைம்ல வந்துட்டு லலி எஸ்கேப்பா???

கவிசிவா... முன்ன இதே டாப்பிக்கை தான் நானும் தந்தேன்... எல்லாரும் விடுகதை பக்கம் ஓடிட்டாங்க ;) ஹிஹிஹிஹீ. நீங்களே ஆரம்பிச்சு வைங்க, நான் இவரை ஆஃபீஸ் அனுப்பிட்டு வந்து ஜாய்ன் பண்ணிக்கறேன். மெயில் வந்துடுச்சு, எல்லாத்தையும் தொகுக்கும் வேலை தான் இன்னும் முடியல, முடிஞ்சதும் போட்டுடுறேன். நன்றி கவிசிவா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்