ஸ்டாக்கிங் துணி பூ க்ளிப்

தேதி: September 10, 2012

5
Average: 4.6 (12 votes)

 

ஸ்டாக்கிங் துணி (விரும்பிய நிறம்) - ஒன்று
கத்திரிக்கோல்
குயிக் ஃபிக்ஸ்/ ஹாட் க்ளூ
கம்பி - வெள்ளை / கோல்டன் கலர்
ப்ளாஸ்டிக் க்ளிப் - ஒன்று
முத்து / மகரந்தம்
நூல்
பஞ்சு

 

ஒரு செ.மீ சுற்றளவு உள்ள எதாவது ஒரு மூடியில் கம்பியை படத்தில் உள்ளது போல் ஒரு வளையமாக (ஒரு லூப்) சுற்றிக் கொள்ளவும்.
முனையை வெட்டாமல் அப்படியே அடுத்த சுற்று சுற்றிக் (2வது லூப்) கொள்ளவும்.
இதே போல் ஒரு செ.மீ அளவு உள்ள மூடியில் 5 லூப்கள் வருவது போல் சுற்றி கொள்ளவும்.
அதே ஒரு செ.மீ அளவு உள்ள மூடியை கொண்டு 3 லூப் வருவது போல் ஒன்று தயார் செய்யவும்.
இப்போது 1.5 செ.மீ சுற்றளவு உள்ள மூடி ஒன்றை கொண்டு இதே போல் 5 லூப், 3 லூப் ஒவ்வொன்று தயார் செய்யவும். பின் 2 செ.மீ சுற்றளவு உள்ள மூடி கொண்டு ஒரு லூப் ஒன்றும் தயார் செய்யவும். மீதம் இருக்கும் கம்பிகளை நறுக்கிவிட்டு தயாராக எடுத்து கொள்ளவும்.
ஸ்டாக்கிங் துணியில் இப்படி வளையத்தை சுற்றி வருவது போல் நன்றாக பிடித்து கொண்டு கீழே நூல் கொண்டு சுற்றி விடவும்.
இதே போல் எல்லா இதழ்களையும் சுற்றி கொள்ளவும். மீதம் உள்ள ஸ்டாக்கிங் துணியை வெட்டி விடவும்.
இதன் மேல் இன்னொரு லேயர் ஸ்டாக்கிங் துணி கொண்டு சுற்றவும். ஒவ்வொரு இதழாக சுற்றாமல் மொத்தமாக எல்லா லூப்பும் சேர்த்து ஸ்டாக்கிங் துணி கொண்டு மூடி அடியில் பிடித்து கொண்டு நூல் கொண்டு சுற்றலாம். கடைசியாக பூ கட்டுவது போல் இரண்டு முடிச்சு போட்டு கொள்ளவும்.
இதழ் இதழாக பிரித்து காட்ட இரண்டு இதழ்களுக்கு நடுவில் நூலை விட்டு ஒவ்வொரு இதழையும் தனியாக ஒரு முறை நூல் கொண்டு சுற்றி விட்டால் பிரிந்து விடும். இது சுலபமான வழியும் கூட.
ஒரு லூப் இதழையும் 2 லேயர் ஸ்டாக்கிங் துணி கொண்டு மூடி கட்டி கொள்ளவும். பஞ்சு ஒரு சிறு உருண்டை எடுத்து ஒரு லூப்பின் அடியில் உள்ள ஸ்டாக்கிங் துணியை 3 லேயராக கொண்டு மூடவும். அதையும் நூல் கொண்டு கட்டி கொள்ளவும். மீதம் உள்ள ஸ்டாக்கிங் துணியை நறுக்கிவிட்டு எடுத்து தயாராக வைக்கவும்.
இப்போது பஞ்சு உருண்டையை ஒரு லூப் இதழின் நடுவில் வைத்து பிடிக்கவும்.
சுற்றி உள்ள கம்பியை படத்தில் உள்ளது போல் வளைத்து விடவும். இப்போது நடுப்பகுதி மொட்டு தயார்.
இதே போல் எல்லா கம்பியையும் தயாராக செய்து வைத்துக் கொள்ளவும். உங்களிடம் 3 இதழ் கொண்டு சின்ன வளையம் (ஒரு செ.மீ), 5 இதழ் கொண்ட சின்ன வளையம் (ஒரு செ.மீ), 3 இதழ் கொண்ட பெரிய வளையம் (1.5 செ.மீ), 5 இதழ் கொண்ட பெரிய வளையம் (1.5 செ.மீ) மற்றும் ஒரு ஒற்றை இதழ் (2 செ.மீ) இருக்கும்.
இப்போது 3 லூப் / 3 இதழ் உள்ள சின்ன வளையத்தில் முத்து / மகரந்தம் ஒட்டவும். 3 லூப் / 3 இதழ் உள்ள பெரிய வளையத்தில் செய்த மொட்டு ஒட்டவும்.
இப்போது 5 இதழ் உள்ள சின்ன வளையத்தில் முத்து உள்ள செட் ஒட்டவும். 5 இதழ் உள்ள பெரிய வளையத்தில் மொட்டு ஒட்டிய செட் ஒட்டவும்.
இவை சற்று காயட்டும். க்ளிப்பை தயாராக வைக்கவும்.
பின் க்ளிப்பின் மேல் பக்கம் பூக்களை சற்று இடைவெளி விட்டு ஒட்டவும்.
முன் பக்கம் இப்படி இருக்கும். இதழ்களை இப்படியே விட்டாலும் சரி, அல்லது சற்று வளைத்து நிஜமான பூவின் தோற்றத்தை கொடுக்கலாம். இப்போது அழகான ஸ்டாக்கிங் துணி கொண்டு செய்த பூ க்ளிப் தயார். இதே போல் பூக்கள் செய்து கையில் அணியும் ரிங் வளையங்களிலும் ஒட்டலாம். குழந்தைகளின் ஹேர் பேண்டில் ஒட்டலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஸ்டாக்கிங் துணி பூ க்ளிப் செய்வதற்கு குறிப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி வனிதா அக்கா... ரொம்ப அழகா செய்து இருக்கீங்க.. அட்ராக்டிவ் கலர்... நான் செய்தால் இப்படி வருமான்னு தெரியல... செய்து பார்க்கிறேன்... வாழ்த்துக்கள் அக்கா..

கலை

Wow! well done vani. I will do it and send d picture to u.

பூக்களை ரொம்ப அழகா செஞ்சுருக்கீங்க

வனி

வாவ்.. சான்சே இல்ல.. செமையா இருக்கு..
என்ன ஒரு பர்ஃபெக்ஷன். உங்களால் தான் இது முடியும்..நான் க்ரேஃப்ட் செய்ய ஆரம்பித்ததற்கு இன்ஸ்பறேஷனே நீங்க தான்.
நான் முன்னமே சொன்ன மாதிரி, என் அக்காவை பார்த்து கூட நான் செய்ய நினைத்தது இல்லை.:)

அதுவும் ஆரஞ்சு நிறத்தில் கண்ணை கவருது. கடைசி படத்தில் நீங்க படம் எடுத்த விதமும் அருமை.
மொத்தத்தில் கண்களுக்கு குளிர்ச்சி :) அத்தனை அழகு.. :)
வாழ்த்துக்கள்.. இன்னும் பல படைக்க வேண்டும்.. :) 500 தாண்ட வேண்டும்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனிதா
மிக அழகாக செய்து இருக்கீங்க. பூ நல்லா அழகாக வந்திருக்கு. பாராட்டுக்கள்!
எப்படி வனிதா கைவினை, சமையல், மெகந்தி என்று அனைத்திலும் கலக்குறீங்க. எனக்கு உங்கள் பதிவுகள் அனைத்தும் ரொம்ப.... பிடிக்கும்.

ப்ரதன்யா

ஸ்டாக்கிங் துணி பூ க்ளிப் அழகா செய்திருக்கீங்க. மொட்டு உள்ள ரோஸ் சூப்பர். ஒவ்வொரு இதழுக்கும் தனியாக கம்பி கட் பண்ணி தான் செய்திருக்கேன். நீங்க செய்திருக்கறது நல்ல ஐடியா. ஸ்டாக்கின் துணி வைச்சிருக்கேன் உங்க செய்முறைபடி செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்

அழகா பண்ணியிருக்கீங்க.
வாழ்த்துக்கள் வனிதா.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

வாவ் வாவ் வாவ்வ் என்ன ஒரு அழகு சான்ஸே இல்ல..நான் அப்படியே பிரமிச்சி போயி உக்காந்து இருக்கேன். எப்படிதான் இவ்வளவு அழகா செய்றீங்களோ? என்ன் சொல்றதுனெ தெரியல எனக்கு வார்த்தையே வரல வனிதா...எனக்கெல்லாம் சுட்டு போட்டாலும் இதெல்லாம் வராது அதனால பாத்து ரசிக்க மட்டும் தான் முடியும்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

கைவினையை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) நீங்க செய்தா இதைவிட அழகா வரும்... சந்தேகமில்லாம செய்யுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அவசியம் படம் அனுப்புங்க, காத்திருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அக்கா செய்யும் போது நீங்க பிசியா இருந்தீங்க, இப்ப தானே ஃப்ரீயா இருக்கீங்க... அதான் இப்போ ட்ரை பண்றீங்க. நம்மை போல் வெளி நாட்டில் தனியா இருக்கவங்களுக்கு இது தான் பெஸ்ட் மருந்து. இதுல கூட 500!!! நன்றி ரம்யா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. :) வீட்டில் சும்மா இருக்கேன், பிள்ளைகள் பள்ளிக்கு போனா, தூங்கினா தனியா எனக்கு பொழுது போகாட்டா இப்படி எதாவது பண்ணிட்டு இருக்கேன். உங்கள் அன்புக்கு நன்றி தோழி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. தனி தனி கம்பியாக வளைத்தும் செய்யலாம், ஆனா இது க்ளிப்பில் ஒட்டியதால் கீழே கம்பி நீட்டி நின்றால் நீட்டாக ஒட்ட வராதே... பூ தூக்கிக்கொண்டு நிற்கும். அதான் இந்த முறையில் செய்திருக்கேன். இப்போ ஃப்ளாட்டா இருக்கும் பூ, ஒட்டினால் க்ளிப்போடு படிந்து நிற்கும். செய்து பாருங்க வினோ. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. ட்ரை பண்ணிபாருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி நன்றி நன்றி.... வராதது எதுவுமே இல்லை இந்திரா. இது தான் நான் செய்த முதல் ஸ்டாக்கிங் துணி பூ. வந்திருக்கில்ல... நீங்க நல்லா இருக்குன்னு சொல்லும் அளவுக்கு. அப்படி தான்... ட்ரை பண்ணுங்க, வரும். முதல் முறை வரலன்னா இரண்டாவது முறை வந்துட்டு போகுது. :) முயற்சி தான் முக்கியம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்பவும் அருமை வனி.தெள்ளத் தெளிவா தந்திருக்கீங்க

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர்....கலைவாணி உங்க கைகளில் இருக்கிறாள்...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கு வனி. கலர் சூப்பர்.

‍- இமா க்றிஸ்

வனி சூப்பரா செய்திருக்கீங்க.. சான்சே இல்லை.. சூப்பர் சூப்பர் சூப்பர்.. வாழ்த்துகள்...

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மிக்க நன்றி :) செபா ஆண்ட்டி எங்க காணோம்???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி நன்றி நன்றி :) நன்றி ரேவதி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் நானும் செய்து பார்க்கிறேன்.

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

வனி க்ளிப் ரொம்ப அழகா இருக்கு.... எப்படி வனி இப்படி அசத்துறிங்க.

அன்புடன்,
லலிதா

மிக்க நன்றி. செய்து பார்த்து எப்படி வந்ததுன்னு சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. எதாவது செய்தா தானே பொழுது போகுது ;) அதான் இப்படிலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

eppadi irukkenga?

neenga senja klip romba romba supera irunthunji,,,
naa kandippa senju paarpen,,
Romba ThankS,,,,,,,

மிக்க நன்றி. செய்து பார்த்து எப்படி வந்ததுன்னு சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா