கார்ட் ஸ்டாக் பேப்பர் ரோஸ்

தேதி: September 13, 2012

5
Average: 5 (3 votes)

 

கார்ட் ஸ்டாக் பேப்பர் - விரும்பிய வண்ணத்தில்
பென்சில் - ஒன்று
ஷேனல் ஸ்டிக் - 2
கத்தரிக்கோல் - ஒன்று
வட்டம் போட வாட்டர் கேன் மூடி - 2 (பெரியதும், அதைவிட சற்று சிறியதும் )
கம் - ஒரு பாட்டில்
டூத் பிக் - ஒன்று
க்லிட்டர்ஸ் - தேவையெனில்

 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
படத்தில் காட்டியபடி A4 அளவில் உள்ள பேப்பரை இரண்டாக மடித்து பின் நான்காக மடிக்கவும். மேலும் அதை இரண்டாக மடிக்கவும். மடித்த பேப்பரின் மீது மூடிகளை வைத்து வட்டம் போட்டுக் கொள்ளவும். (மடித்த பேப்பரின் அளவிற்கேற்ப சரியாக இருக்கும்படி மூடிகளை தேர்வு செய்யவும்)
வரைந்த வட்டத்தை கட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
இரு வட்டங்களையும் படத்தில் காட்டிய வடிவத்தில், இருபுறமும் கட் செய்துக் கொள்ளவும். இவை தான் பூவிற்கு தேவையான இதழ்கள். பெரிய வட்டத்தில் எட்டு இதழ்களும் சிறிய வட்டத்தில் எட்டு இதழ்களும் கிடைக்கும். பெரிய இதழ்கள் மலரின் வெளிப்புறத்திலும், சிறிய இதழ்கள் மலரின் உட்புறத்திலும் வைக்க வேண்டியிருக்கும்.
அடியில் பெட்சீட் போட்டுக்கொண்டு ஒரு இதழை எடுத்து அதனை ரப்பர் மெட்டீரியல் அல்லது அழுத்தமான அதே சமயம் மிருதுவான அடித்தளம் கொண்ட பொருளை கொண்டு (பிளாஸ்டிக் ஸ்பூன், ரப்பர் பாட்டம் கொண்ட கத்தி, குழந்தைகள் பொருள்) இதழின் மீது நன்கு தேய்க்கவும். கிழிந்துவிடாமல் கையாள வேண்டும்.
இதனால் சார்ட் பேப்பர் போன்ற (Stiff ஆன) இதழ், உண்மையான பூவின் இதழை போன்று சற்று குழியாகவும் பார்க்க மென்மையானதை போலவும் மாறிவிடும்.
பின் டூத் பிக் கொண்டு இதழின் இருபுறமும், வெளிப்புறம் நோக்கி சுருட்டவும். மேலும் இதழின் மேற்புறத்திலும் சுருட்டவும்.
அதன் பின் இதழின் அடித்தளத்தின் நடுவே டூத் பிக் கொண்டு சுருட்டவும்.
பூவிற்கு நடுவில் சிறிதே விரிந்த இதழ் வைக்க, வேறொரு இதழ் எடுத்து படத்தில் காட்டியப்படி பேப்பரை டூத்பிக்கில் சுருட்டி தனியே எடுத்து வைக்கவும்.
பின் ஒரு சிறிய மூடி அளவில் தனியே ஒரு வட்டம் வெட்டி மீண்டும் படத்தில் காட்டியப்படி நன்கு தேய்க்கவும். கொஞ்சம் குழியான கிண்ணம் போல அதை தேய்த்து எடுக்கவும்.
இந்த அடித்தள வட்டத்தை ஆறு முறை கத்தரிக்கோலால் வட்டமாக மலரின் இதழ் போல படத்தில் காட்டியப்படி பிளந்து விடவும்(Slit). அதன் நடுவே கம் போடவும்.
மேற்சொன்ன முறையில் இதழ்கள் செய்து தயாராக உள்ளன.
குழியான கம் போடப்பட்ட அடித்தள வட்டத்தில் ஒரு இதழை சற்று நிற்க வைத்தவாறு ஒட்டவைக்கவும்.
இதே போல அடித்தளத்தில் ஐந்து பெரிய இதழ்களை வைக்கவும். பின் அந்த இதழ்களின் இடையில் மீதமுள்ள மூன்று பெரிய இதழ்களை உட்புறம் வைக்கவும். அவ்வாறே சிறிய இதழ்களை ஆங்காங்க இடையே சொருகி, தேவையான இடத்தில் கம் போட்டு நிற்க வைத்தவாறு ஒட்டிவிடவும்.
இறுதியாக இடையில் நன்கு சுருட்டி வைக்கப்பட்ட இதழை வைத்து, ஒரு உள்ளங்கையில் பூவின் அடித்தளத்தையும், இன்னொரு உள்ளங்கையில் பூவின் இதழ்களையும் பந்து போல பக்குவமாய் பிடித்து அனைத்து இதழ்களும் நன்கு ஒட்டி இருப்பதை உறுதி செய்து காயவிடவும். அழகான ரோஜா ரெடி.
இதுப்போல் விரும்பிய வண்ணங்களில் செய்து கொள்ளவும்.
தேவையான குச்சியையோ, ஷேனல் ஸ்டிக்கையோ கொண்டு ஜாடியில் வைக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அழகா இருக்கு... கலர் கலரா பூக்கள் பார்க்க. சுலபமாவும் இருக்கு, கியூட்டாவும் இருக்கு. வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பூ அழகா இருக்கு. தெளிவான செய்முறை. பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

ஹாய்,,,,,,,,,,,
மிகவும் அருமையாக இருந்தது,,,,,,,,,

நேர்த்தியான வேலை ரம்யா. ரொம்பவே மெனக்கடனும் போல் இருக்கே.......இருந்தாலும் செய்யனும்னு தோணுது......பார்ப்போம். ஆசை மட்டும் இருந்தா போதுமா? செய்தால் கண்டிப்பாக படம் அனுப்பிடறேன். வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரோஸ் ரொம்ப அழகா அருமையாக இருக்குங்க,
வாழ்த்துக்கள் :-)

நட்புடன்
குணா