இப்படியும் நடக்குமா

செய்திதாளில் குறிப்பா வெளிநாடுகளில் தாங்களே கர்ப்பமானதை அறியாமல் குழந்தையை பிரசவித்த கதை நிறைய கேட்டிருப்போம்..இதை கேட்கும்போதெல்லாம் நான் சொல்லுவேன் இது வெறும் ரீல் தான் சும்மா ஒரு பரபரப்புக்கு கதை கட்டுகிறார்கள் என்று..இப்போழுது நம்பவே முடியாத மாதிரி ஒரு நிஜ சம்பவம் என் தோழிக்கு ஏற்பட்டது..என்னுடன் படித்த என் பழைய ஒரு குழந்தைக்கு தாயான நண்பி திடீர் வயிற்று வலி வரவே ஆறு மாதமான முழுமையான வளர்ச்சி பெற்ற ஆண் குழந்தை பிரசவமானது..அங்கு நடந்த ஷாக்கில் குறைபிரசவத்திலும் குழந்தை சிறிது நேரத்தில் இறந்து விட்டது..இதில் குறிப்பிடத்தக்கது மாதாமாதம் சரியான மாதவிடாயும் வந்து வயிற்றிலும் பெரிதாக எந்த மாற்றம் தெரியவில்லை என்பது தான்...இன்னமும் என் தோழியும் குடும்பமும் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் இருக்கிறார்கள்...இப்படி யாருக்காவது நடந்து கேள்விப்பட்டதுண்டா?

தாளிகா நானும் இது போல் கேள்வி பட்டு இருக்கிறேன் 13 வருடமாக குழந்தை இல்லாத ஒரு பெண் தன் தங்கை குழந்தை பெற்றதை பார்க்க போகும் போது கடுமயான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது உடனே மருத்துவரிடம் காண்பித்து இருக்கிறார்கள் பார்த்து விட்டு உங்களுக்கு டெலிவெரி பெயின் சொல்லிடாங்க ஒருமணி நேரத்தில் அழகான ஆண் குழந்தயை பெற்றெடுத்துடாங்க இதுல பெரிய விஷயம் என்னனா மாதா மாதம் பிரியட்ஸ் வந்துள்ளது வயிரும் பெரிதாக வில்லை இடுப்பு பகுதி விரிந்து கொண்டே போய் இருக்கிறது அதையும் அவங்க வாக்கிங் போய் குறைக்க பாத்திருக்காங்க ஆனா அது குறையல இப்போ அந்த குழந்தைக்கு 3 வயசு

முதல் பிரசவம் என்றாலும் ஏதும் தெரியாதுனு சொல்லலாம், ஒரு குழந்தைக்கு தாயான பெண்ணிற்க்கு தன் உடம்பில் ஏற்படும் மாற்றம் கூடவா தெரியாமல் இருக்கும்.ஆச்சிரியம் தான். கண்டிப்பா அதிர்ச்சியாக தானே இருக்கும்.அதுவும் ஆறு மாத கர்ப்பம்.

அச்சோ அப்படியா.இனி வயிறு விழுந்தாலும் பயமா இருக்குமே .அப்ப மூணு வருஷம் முன்னே தானா?ஆஹா என்னவெல்லாம் நடக்குது

கே ஆர் ..அதையே தான் ..நானும் இப்படி தான் கேட்டிருக்கேன் முன்ன..ஆனா நம்மையெல்லாம் போல இல்ல இவ சரியான உஷார் பேர்வழி படிக்கிறகாலத்துலயே சரியான தெளிவு ஒரு பார்வையில் ஒருத்தரை மணப்பாடமே பண்ணி எடுத்துடுவா அவளுக்கு இப்படி நடந்ததான்னு ஷாக் தீரவே இல்ல.இது குறை மாசமானதால இப்படி இல்லன்னா 9 மாசம் கழிச்சு குழந்தை பிறந்திருக்கும் போல

தளிகா..... இது போல் சம்பவம் என் அம்மா வீட்டிற்கு அருகில் நடந்து உள்ளது...
ஒரு வருடத்திற்கு முன்.... எங்க குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்.... திருமணமாகி
பதினாறு வருடம் இருக்கும் குழந்தை இல்லை.... குழந்தைக்கான ட்ரீட்மென்ட் எடுத்து
பலன் இல்லாமால் வெறுத்து ட்ரீட்மென்ட் நிறுத்தி விட்டார்..... மாதவிடாய் அவர்களுக்கு
ரெகுலர் கிடையாது.... மூன்று மாதத்திற்கு மேல் வயிறு வழியில் அவதி பட்டார்....
டாக்டரிடம் காண்பித்ததில் பீரியட்ஸ் வருவதற்கு மாத்திரை கொடுத்து உள்ளார்...
இரண்டு மாதம் மாத்திரை எடுத்த பின்பு மிகவும் கடுமையான வயத்துவலியில் துடித்துள்ளார்...
வலியில் டாய்லட் போகும் போது அவரின் வீட்டு டாய்லெட்திலேயே ஐந்து மாத கரு வெளியே வந்து விழுந்து உள்ளது....
இத்தனை வருடம் குழந்தை இல்லாமல் தவித்தவருக்கு இப்படி நடந்தது எங்களால் மறக்கவே முடியாது..... அவர் அந்து குறை மாத சிசுவை எண்ணி துடித்ததை எங்களால் வார்த்தைகளால் சொல்ல முடியாது....

மேலும் சில பதிவுகள்