தேதி: September 17, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மைதா - அரை கிலோ
வெண்ணெய் - 150 கிராம்
சீனி - 4 மேசைக்கரண்டி
பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
தண்ணீர் - அரை கப் (பிசைய)
எண்ணெய் - அரை லிட்டர் (பொரித்து எடுக்க)
வெண்ணெயை உருக்கி சூடாக மைதாவில் ஊற்றி உப்பு, சீனி, பேக்கிங் பவுடர் சேர்த்து தண்ணீர் விட்டு இறுக்கமாக பிசையவும்.

பின் மாவை சப்பாத்தி கட்டையில் அல்லது சமதளத்தில் வைத்து தேய்க்கவும்.

படத்தில் உள்ளது போல் நறுக்கி ஓரத்தில் கீறி விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இதை இஞ்சி கொத்து பணியாரம், வில்லை பணியாரம், சீப்பு பணியாரம் என்றும் சொல்வதுண்டு.

Comments
ஹை!! இஞ்சி கொத்து
ஹை!! இஞ்சி கொத்து பணியாரம்!!.....நல்லா செய்து இருக்கிங்க முசி.சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு....ஒரு நாள் செஞ்சு பார்க்குறேன்....
முசினா
சீப்பு பணியாரம் சூப்பர்... நாங்களும் இப்படி தான் செய்வோம் ஆனா குட்டி குட்டியா கட் செஞ்சி பன்னுவோம். நாங்க இத மைதா கேக்னு சொல்லுவோம்.கண்டிப்பா செஞ்சி பாக்குறேன்.வாழ்த்துக்கள்...
Love Makes Life Beautiful...
With Love,
Indira.
நன்றி.
குறிப்பை வெளியிட்ட அருசுவை டீமீர்க்கு நன்றி.
நன்றி, சமிலா அவசியம் செய்துபாருங்க.
நன்றி,இந்திரா செய்துவிட்டு எப்படின்னு சொல்லுங்க.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
thanks
thank u for arusuvai unavu
முசி
முசி
அருமையான மாலை நேர ஸ்நாக்ஸ்
பேரு அழகா இருக்கு.வாழ்த்துக்கள் :)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ரம்யா.
மிக்க நன்றி ரம்யா.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
முசி
முசி அருமையான சுவையான ஸ்நாக்ஸ் வாழ்த்துக்கள்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ஹலோ.... முசி
சூப்பரான குறிப்பு :) வாழ்த்துக்கள் !
நிச்சயம் ட்ரை பண்ணிட்டு சொல்றேன் . கடைசி படம் அழகோ அழகு ...!
hai
ரொம்ப நன்றி,vibgy.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.