தேதி: September 20, 2012
கலர் காகிதங்கள்
கத்தரிக்கோல்
ஷேனல் ஸ்டிக்ஸ்
உள்ளங்கை அளவில் வட்டம் போட டப்பா மூடி
கம்
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

ஷேனல் ஸ்டிக்கை விரல் நீளத்திற்கு வெட்டி வைக்கவும்.

விரல் நீளத்திற்கு வெட்டி வைத்த ஷேனல் ஸ்டிக்கை மடிக்கவும்.

காகிதத்தில் வட்டம் போட்டு அதை வெட்டிக் கொள்ளவும்.

அதை அரை வட்டமாக மடிக்கவும்.

பின் படத்தில் காட்டியபடி சமதளமான பக்கத்தில் இருந்து 10 செமீ அளவில் அரைவட்டத்திலிருந்து வெட்டி, முடியும் இடத்தில் சற்று குழியாக வெட்டவும்.

இதனை விரித்து பார்த்தால் இதயம் போல வடிவம் இருக்கும்.

இதயத்தின் நடுவில் படத்தில் காட்டியபடி சிறிது பிளந்துவிடவும்.

பின் பிளந்த இடத்திலும் அதன் ஓரத்திலும் கம் தடவவும்.

வெட்டி, மடித்து வைத்த ஷேனல் ஸ்டிக்கை இதயத்தின் பிளவுபட்ட இடத்தில் சொருகிவிடவும்.

பின் இதயத்தின் இரு ஓரங்களையும் படத்தில் காட்டியவாறு ஒட்டி உலரவிடவும்.

விரும்பிய வண்ணங்களில் இதேபோல் செய்து ஒட்டி காயவிடவும்.

பின் பக்குவமாக பூவை பிடித்து அதன் ஓரங்களை எல்லாம் படத்தில் உள்ளவாறு வெளிப்புறமாக சற்று மடித்தாற் போல் செய்யவும்.

எல்லா பூக்களையும் அதே போல் மடித்துக் கொள்ளவும்.

விரும்பிய மெட்டீரியலில் காம்புகள் செய்து பூவோடு இணைக்கவும்.

அழகான காலா லில்லி (Calla Lily) ரெடி.

ஜாடியில் வைத்து வரவேற்பறையில் வைக்கலாம்.

Comments
காலா லில்லி
அழகா இருக்கு ரம்ஸ். வருகிற தவணை ஸ்கூல்ல குட்டீஸுக்கு சொல்லிக் கொடுக்க நினைத்திருக்கிறேன்.
- இமா க்றிஸ்
செய்வதற்க்கு ஈசியாவும்
செய்வதற்க்கு ஈசியாவும் அழகாவும் இருக்கு ரம்யா
ovvoru nodiyaiyum rasithu val
ரம்யா
அழகான லில்லி சூப்பர். ரொம்ப தெளிவா புரியும் படியா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்.
Love Makes Life Beautiful...
With Love,
Indira.
நன்றி
நன்றி
எனது குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி ;)
இமா
ரொம்ப சந்தோசம். அவசியம் சொல்லிக் கொடுங்க. நன்றி ;)
வினோ
ரொம்ப நன்றிங்க
இந்த்ரா
மிக்க நன்றி ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
Ramya
அழகான லில்லி அக்கா சூப்பர்
கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;
with
**Karthika**
ரம்யா
காலா லில்லி அழகு :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Very Very Super..... Instead
Very Very Super..... Instead of paper if we use foam sheet, it s look like a real flower....
Thank U for ur easiest method